கொரோனா வைரஸ் தொற்று தொடங்கி வரிசையாக உருமாறிய நோய்த்தொற்று திரிபுகள் மக்களுக்கு அச்சத்தை தந்து கொண்டே இருக்கின்றன. என்னதான் நோயின் தீவிரம் மற்றும் பரவலை ஓரளவுக்குள் கட்டுக்குள் கொண்டுவந்தாலும், மக்கள் இன்னும் நோயின் தாக்கம் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து வெளிவரவில்லை. அரசு தரப்பில் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், தொற்றுப் பரவலை கருத்தில் கொண்டு மக்கள் முகக்கவசம் அணியவும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் வலியுறுத்தப்பட்டு வருகின்றனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில் ஒமிக்ரானின் உருமாறிய XE வேரியன்ட் தொற்று முதன்முறையாக இந்தியாவில் கண்டறியப்பட்டு உறுதிசெய்யப்பட்டிருப்பதாக தேசிய சோதனை ஆய்வக அமைப்பு (INSACOG - The Indian SARS-CoV2 Genomics Sequencing Consortium) தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில்இரண்டு நபர்கள் இந்த திரிபால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வைரஸ் தொற்று மக்களிடையே அதிக அளவில் பரவவோ, கடுமையான அறிகுறிகளை வெளிப்படுத்தவோ இல்லை என்பதால் மக்கள் அச்சப்படத் தேவை இல்லை என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.