Published:Updated:

உலகளவில் ஆறில் ஒரு மரணம், புற்றுநோயால் ஏற்படுகிறது! #WorldCancerDay #VikatanInfographics

Cancer
Cancer

ஒவ்வொரு நாளும் உலகளவில் இறப்பவர்களில் 6-ல் 1 நபர் புற்றுநோயால்தான் இறக்கிறார் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு.

புற்றுநோய்...

இந்த நூற்றாண்டில் மருத்துவ உலகமும் மனித இனமும் எதிர்கொண்டுவரும் மிகப் பெரிய சவால். ஆரம்பத்திலேயே கண்டறிந்து, முறையான மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொண்டால் குணப்படுத்திவிடலாம் எனும்போதும், தேவையான அளவு விழிப்புணர்வு இல்லாததால், உலகெங்கும் ஒவ்வொரு நாளும் பல உயிர்களைப் புற்றுநோய்க்கு இழந்துவருகிறோம்.

World Cancer Day
World Cancer Day

புற்றுநோயைக் கட்டுப்படுத்த அடிப்படைத் தேவையான `சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வை' அதிகப்படுத்த, ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 4-ம் தேதி சர்வதேசப் புற்றுநோய் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கையின்படி, உலகளவில் 2018-ல் மட்டும் 180 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதில் 96 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் உலகளவில் இறப்பவர்களில் 6-ல் 1 நபர் புற்றுநோயால்தான் இறக்கிறார் என்கிறது அந்த ஆய்வு. அதேபோல், ஒவ்வொரு வருடமும் 19 வயதுக்குட்பட்டவர்களில், 3 லட்சம் பேர் புற்றுநோயால் புதிதாகப் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகளைப் பாதிக்கும் புற்றுநோய்களின் பட்டியலில் லுகேமியா எனப்படும் ரத்தப் புற்றுநோய், மூளை புற்றுநோய், வெள்ளை அணுக்கள் பெருகும் லிம்ஃபோமா(Lymphoma) புற்றுநோய், திடக் கட்டிகள்(Solid tumours), நரம்பு செல்களில் ஏற்படும் நியூரோபிளாஸ்டோமா(Neuroblastoma) புற்றுநோய், சிறுநீரகத்தில் ஏற்படும் வில்ம்ஸ் கட்டி(Wilms tumour) போன்றவை முதன்மையாக உள்ளன.

2018 கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் புற்றுநோயுடன் சுமார் 22.5 லட்சம் பேர் வாழ்ந்து வருவருகின்றனர். 2018-ல் மட்டும் இந்தியாவில் 7,84,821 பேர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர்.
உலக சுகாதார நிறுவனம்
Cancer
Cancer
Vikatan Infographics

உலக சுகாதார நிறுவனத்தின் ஒரு தரவுப்படி, இந்தியாவில்தான் கர்ப்பப்பைவாய் புற்றுநோயாளிகள் அதிகம் இருப்பது தெரியவருகிறது. உலகளவில் ஒவ்வொரு 8 நிமிடத்திற்கும் ஒரு பெண் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறக்கிறார். அப்படிப் பார்க்கும்போது இந்தியாவில் மட்டும், ஒருநாளில் குறைந்தபட்சம் 190 பெண்களை கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய்க்கு இழக்கிறோம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Vikatan
DNA
DNA

தவறான உணவுப் பழக்கம், புகை - மதுப்பழக்கம், மரபுக் காரணங்கள் போன்றவை யாவும் ஒருவருக்குப் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டாலே இந்நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம். ஒருவேளை பாதிப்பு ஏற்பட்டுவிட்டாலும்கூட, மருத்துவ அறிவுரைகளோடு கதிர்வீச்சு, அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட சிகிச்சைகளைப் பெற்றால், புற்றுநோயிலிருந்து முழுமையாக குணம் பெறலாம்.

அடுத்த கட்டுரைக்கு