Published:Updated:

"ஜூன் 1-ம் தேதிக்குள் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பார்கள்!" - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

corona virus
corona virus

ஜூன் 1-ம் தேதிக்குள் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கும் என்று அந்நாட்டின் தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குநர் ராபர்ட் ரெட்ஃபீல்டு தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவைக் காட்டிலும் பிற நாடுகள் மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. உலகின் நம்பர் ஒன் வல்லரசு நாடான அமெரிக்கா, கொரோனா நோய் தாக்கத்தால் நிலைகுலைந்து போராடி வருகிறது.

Corona
Corona

ரஷ்யா, இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, இந்தியா என 200-க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளன. சர்வதேச அளவில் 44 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வதந்திகளை நம்ப வேண்டாம்... மின் கட்டணம் கணக்கிடப்படும் முறை இதுதான்! #VikatanFactCheck

அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 86,000-த்தைத் தாண்டிவிட்டது. 14 லட்சத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். சில மாதங்கள் முன்னதாகவே இந்தியா உள்பட பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நேரத்தில், அமெரிக்கா அஜாக்கிரதையாக இருந்ததே நோய் பாதிப்பு அதிகரிக்க முக்கியக் காரணம். மேலும், பரிசோதனைகளை அதிக அளவில் செய்யாமல் அலட்சியப் போக்கோடு இருந்ததன் விளைவே அமெரிக்காவை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறது என்று கூறப்படுகிறது.

corona
corona

"நோய்த் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ள போதிலும் அந்நாட்டின் பல மாநிலங்களில் அரசு ஊரடங்கைத் தளர்த்தியிருப்பது வரும் நாள்களில் அங்கு இறப்பு விகிதம் இன்னும் அதிகரிக்க வழிவகுக்கும். ஜூன் 1-ம் தேதிக்குள் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கும் என்று அந்நாட்டின் தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குநர் ராபர்ட் ரெட்ஃபீல்டு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில், கொரோனா பரிசோதனைக்குப் பயன்படுத்தப்படும் கருவிகள்மூலம் சரியான முடிவுகள் கிடைப்பதில்லை என்றும் கொரோனா விஷயத்தில் அந்நாட்டு அரசு அலட்சியப் போக்கோடு செயல்படுவதாலும்தான் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று பலரும் அமெரிக்க அரசைச் சாடிவருகின்றனர்.

Corona
Corona
Pixabay

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், அமெரிக்கா இந்த நேரத்தில் கொரோனாவுக்கான பரிசோதனைகளை மேம்படுத்த வேண்டும். பரிசோதனைகளை 400 சதவிகிதம் அதிகரித்தால் மட்டுமே நோய் பாதித்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி, நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று எச்சரித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு