Published:Updated:

`பகலில் குட்டித்தூக்கம் இதயத்துக்கு நல்லதுதான். ஆனால்...!’ - என்ன சொல்கிறது ஆய்வு முடிவுகள்?

"பகலில் குட்டித்தூக்கம் நல்லது. ஆனால்..."

Nap at Work
Nap at Work

'பணியிடமோ இல்லமோ... உங்கள் வேலைக்கு இடையில் தூக்கம் வருவது நல்லதுதான்' என்கின்றனர் ஆய்வாளர்கள். பொதுவாகவே பணிக்கு இடையில் தூங்குவதென்பது உடல்சோர்வாகவோ சோம்பேறித்தனமாகவோதான் பலராலும் பார்க்கப்படுகிறது.

உண்மையில் பகல் நேரத்தில் போடும் குட்டித்தூக்கமென்பது ஒருவர் புத்துணர்வுடன் செயல்பட உதவும் ஒரு விஷயம்.
Nap at Work
Nap at Work

வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை குட்டித்தூக்கம் போட்டால் இதய பிரச்னைகள் தடுக்கப்படும். குறிப்பாக, மாரடைப்பு மற்றும் பக்கவாதத்துக்கான சாத்தியக்கூறுகள் 48 சதவிகிதம் குறையும். இந்த நன்மைகள் அனைத்தையும் ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளனர் லண்டனைச் சேர்ந்த 'ஹார்ட்' என்ற இதழியல் ஆராய்ச்சியாளர்கள்.

அளவுக்கு மீறிய குட்டித்தூக்கம் ஆபத்தாகலாம். ஆகவே, வாரத்தில் மூன்று முறைக்கு மேல் பகலில் தூங்க வேண்டாம்!
ஆய்வாளர்கள்

'அதே சமயம் அளவுக்கு மீறிய குட்டித்தூக்கம் ஆபத்து' என்றும் எச்சரித்துள்ளனர் ஆய்வாளர்கள். 'வாரத்தில் மூன்று முறைக்கு மேல் பகலில் தூங்குபவர்களுக்கு இதய நலனில் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு அதிகமாம். முக்கியமாக ரத்த அழுத்தப் பிரச்னை, கொலஸ்ட்ரால் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்' என்பது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

Vikatan
Heart Health
Heart Health

`எனக்குப் பகலில் அடிக்கடி தூக்கம் வரும். தூங்கியே தீருவேன்' என்பவர்கள் அன்றாடம் முறையான உடற்பயிற்சி, மனநிறைவான வாழ்க்கை சூழல், மிகச்சரியான உணவுமுறை போன்ற ஆரோக்கியமான வாழ்வியலை ஏற்படுத்திக்கொள்ளும்பட்சத்தில் தங்களின் இதய நலனை உறுதி செய்துகொள்ளலாம். இல்லையென்றால், சிக்கல்தான் பாஸ்!