Published:Updated:

`யோகா... ஆஹா’ -சக்தி விகடன் நடத்தும் சர்வதேச யோகா தின சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சி

யோகா நிகழ்வு
யோகா நிகழ்வு

சக்தி விகடனும் உலக சித்தக் கலைகள் ஆய்வு மையமும் இணைந்து, விகடன் வாசகர்களுக்காக சர்வதேச யோகா தினத்தையொட்டி நடத்தும் ஆன்லைன் யோகா நிகழ்ச்சி, ‘யோகா... ஆஹா’.

யோகா, நம் பாரத தேசத்தின் வாழ்வியல் கூறுகளில் ஒன்று. ‘யோக்’ என்னும் வடமொழி மூலச்சொல்லிலிருந்து யோகா என்னும் சொல் உருவாகிறது. யோக் என்றால் இணைப்பு அல்லது ஐக்கியம் அல்லது சமநிலை. நம் உடல், ஆன்மா, மனம் மூன்றையும் இந்தப் பிரபஞ்சப் பெருவெளியோடு சமநிலைப்படுத்தும் பயிற்சியே யோகா. இந்த மூன்றும் சமநிலை பெற்று ஒன்றுடன் ஒன்று ஒத்திசையும் நிலையே ஆரோக்கியமான வாழ்வு.

அரி
அரி

அந்தக் காலத்தில் ரிஷிகளும் சித்தர்களும் யோகாவை முறைப்படுத்தித் தந்தனர். ‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’, ‘உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே...’ என்று உடலை ஆரோக்கியமாகப் பராமரிப்பதன் மூலம் இறைநிலையை அடையலாம் என்பார் திருமூலர். உடல் எந்திரத்தை முறைப்படி பராமரித்து, அதன் சூட்சுமங்களை அறிந்து, அதை ஞானநிலை நோக்கி உணர்த்தும் முறையே யோகா.

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21, சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி சக்தி விகடன், உலக சித்தக் கலைகள் ஆய்வு மையமும் இணைந்து, ஓர் இணையவழி யோகாப் பயிற்சி நிகழ்ச்சியை ஒழுங்குசெய்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில், பிரபஞ்ச சக்தியை நமக்குள் வளர்க்கும் ஐவகை யோகப் பயிற்சிகள் குறித்த செய்முறை விளக்கம் அளிக்கப்படும்.

Yoga and Meditation
Yoga and Meditation

பிரபஞ்ச சக்தியை நமக்குள் வளர்க்கும் ஐவகை யோகா

1 . வஜ்ராசன பிராணப் பயிற்சி

உடல் தண்டுவடம் நேர்த்தியாகி பிரணா கலை ஓட்டத்தை சீர்பட வைக்கும், சர ஓட்டத்தை சீர்படுத்தும்.

2. பிரபஞ்ச சக்தியை உள்வாங்கு நிலை - சக்தி ஏந்து பயிற்சி

பிரபஞ்ச ஆற்றலை அதிகமாக உடலுக்கு அளித்து உடலை ஒளிபெறச் செய்யக்கூடியது.

3. பிரபஞ்ச சக்தி உள்சுழற்சி.

பிரபஞ்ச சக்தியை உடலுக்குள் சுழற்றி, உடற் கழிவுகளை நீக்கி நோயற்ற உடலாய் ஆக்கவல்லது.

4. சிரசு யோகம்

எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம். எனவே, சிரசின் சக்தியைத் தூண்டி, நாடி நரம்புகளை பலப்படுத்தக்கூடியது.

5. மூலாதார சக்திப் பெருக்கம்

நம் உடலில் உள்ள தச வாயுக்களை சீர்செய்து, மூலாதார சக்தியைப் பெருக்கக்கூடியது. உடலின் பிணிகள் அத்தனையும் போக்க வல்லது. நோய் எதிர்ப்பாற்றலை வழங்கக்கூடியது.

இந்த நிகழ்ச்ச்சியை உலக சித்தக் கலைகள் ஆய்வு மையத்தின் தலைவர் அரி அவர்கள் வழங்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சி, நாளை (21.6.20) காலை 7 மணி முதல் 8 மணிவரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இணையம்வழி வாசகர்களாகிய நீங்களும் கலந்துகொள்ள, இந்த லிங்கில் இருக்கும் படிவத்தை உடனடியாக நிரப்புங்கள்.

வாருங்கள்... ஆரோக்கியமான வாழ்வே ஆனந்தமான வாழ்வு.

அடுத்த கட்டுரைக்கு