Published:Updated:

கொரோனா காலத்தில் அதிகமான `கம்ப்யூட்டர் கண் சோர்வு' பிரச்னை; என்னதான் தீர்வு? - கண்கள் பத்திரம் - 4

Eye Issues (Representational Image) ( Photo by Towfiqu barbhuiya on Unsplash )

``இன்று கம்ப்யூட்டரோ, ஸ்மார்ட்போனோ பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படிப் பயன்படுத்துவோரில் 50 சதவிகிதம் பேருக்கும் அதிகமாக கம்ப்யூட்டர் கண் சோர்வு பாதிப்பு இருப்பதாகத் தெரிகிறது'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம்.

கொரோனா காலத்தில் அதிகமான `கம்ப்யூட்டர் கண் சோர்வு' பிரச்னை; என்னதான் தீர்வு? - கண்கள் பத்திரம் - 4

``இன்று கம்ப்யூட்டரோ, ஸ்மார்ட்போனோ பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படிப் பயன்படுத்துவோரில் 50 சதவிகிதம் பேருக்கும் அதிகமாக கம்ப்யூட்டர் கண் சோர்வு பாதிப்பு இருப்பதாகத் தெரிகிறது'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம்.

Published:Updated:
Eye Issues (Representational Image) ( Photo by Towfiqu barbhuiya on Unsplash )

கோவிட் காலத்தில் இந்தப் பிரச்னையுடன் வருவோரை அதிகம் பார்க்கிறோம். ஊரடங்கின் காரணமாக வொர்க் ஃப்ரம் ஹோம், ஸ்டடி ஃப்ரம் ஹோம் என மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் ஆன்லைனுக்குள் சுருங்கியது. எந்நேரமும் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் திரைகளைப் பார்த்தபடி வாழப்பழகினார்கள். அதன் விளைவு `கம்ப்யூட்டர் ஐ ஸ்ட்ரெயின்' எனப்படும் கம்ப்யூட்டர் கண் சோர்வு பாதிப்பு.

சிறப்பு மருத்துவர் வசுமதி
சிறப்பு மருத்துவர் வசுமதி

``கொரோனாவுக்கு முன்பும் இந்தப் பிரச்னை இருந்தது. கொரோனாவுக்குப் பிறகு இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இன்று கம்ப்யூட்டரோ, ஸ்மார்ட் போனோ பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படிப் பயன்படுத்துவோரில் 50 சதவிகிதம் பேருக்கும் அதிகமாக கம்ப்யூட்டர் கண் சோர்வு பாதிப்பு இருப்பதாகத் தெரிகிறது'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம். இந்தப் பிரச்னை தீவிரமாகாமல் தடுக்கும் வழிகள், கண்களுக்கான பயிற்சிகள் என எல்லாவற்றையும் விளக்குகிறார் அவர்.

``இனி இதுதான் வாழ்க்கை என்றாகிவிட்ட நிலையில் மொபைல் திரையும் கம்ப்யூட்டர் திரையும் கண்களை மேலும் பாதிக்குமா என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது. அப்படி பயப்பட வேண்டிய தேவையில்லை என்றாலும், இந்தப் பிரச்னையால் உங்களுக்கு ஏற்படும் அசௌகர்யங்களில் இருந்து உங்கள் கண்களைப் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம்.

கம்ப்யூட்டர் கண் சோர்வை சில அறிகுறிகளை வைத்துக் கண்டறியலாம்.

மொபைல் அல்லது கம்ப்யூட்டரை உபயோகிக்கும்போது நம்மை அறியாமல் கண்களைச் சிமிட்டுவதை மறந்துவிடுவோம். அது உடலின் மற்ற பாகங்களுக்கும் ஏதோ தவறாக நடக்கிறது என்ற சிக்னலை அனுப்பும். நீங்கள் நீண்ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் திரையைப் பயன்படுத்தும் நிலையில், அதன் விளைவாக மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் தோன்றும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாதிப்பிலிருந்து கண்களை எப்படிக் காப்பாற்றலாம்?

1. 20-20-20 விதிமுறையைப் பின்பற்றுங்கள்

உங்களுக்கு எதிரே உள்ள காட்சிகளை இடைவிடாமல் பார்த்துக்கொண்டிருக்கும்படி உங்கள் கண்கள் வடிவமைக்கப்படவில்லை. அதற்குத்தான் 20-20-20 விதிமுறை அறிவுறுத்தப்படுகிறது. கம்ப்யூட்டர் திரையின் முன் நீண்ட நேரம் வேலை செய்வோர், இடையிடையே இந்தப் பயிற்சியைச் செய்வது அவசியம்.

கம்ப்யூட்டர் திரையை 20 நிமிடங்களுக்குப் பார்த்தீர்கள் என்றால், அதையடுத்து 20 அடி தொலைவில் உள்ள ஏதேனும் காட்சிகளை 20 நொடிகளுக்குப் பார்க்க வேண்டும். திரையிலிருந்து கண்களை விலக்கி, இன்னும் சில நிமிடங்கள் இப்படிப் பார்ப்பது சிறந்தது.

Eye Issues (Representational Image)
Eye Issues (Representational Image)
Photo by Towfiqu barbhuiya on Unsplash

2. உங்கள் அறையில் போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.

கம்ப்யூட்டரில் வேலைசெய்யும்போது ரொம்பவும் பிரகாசமான விளக்கு தேவையில்லை. அலுவலகங்களுக்கும் இந்த விதி பொருந்தும். ஒருவேளை அலுவலகச் சூழலில் மிகவும் வெளிச்சமான விளக்குகள் இருந்தால் திரைச்சீலைகளை மூடி வேலை செய்யலாம். குறைந்த வோல்டேஜ் உள்ள விளக்குகள் போதுமானவை.

3. அடிக்கடி கண் பரிசோதனை அவசியம்

கம்ப்யூட்டரில் வேலை என்பது தவிர்க்க முடியாமல் போன நிலையில் குறிப்பிட்ட இடைவெளிகளில் கண்களைப் பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது. ஒருவேளை வேறு பாதிப்புகள் புதிதாக உருவாகியிருந்தாலும் இதன் மூலம் கண்டறிந்து ஆரம்பத்திலேயே சரிசெய்யவும் முடியும்.

4. க்ளேர் (Glare) அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சம் உங்கள் கண்களைக் கூசச் செய்யும் அளவு இல்லாதபடி குறைத்து வைத்துக்கொண்டு வேலை செய்யுங்கள். முடிந்தால் ஆன்டி க்ளேர்மேட் ஸ்கிரீன் பயன்படுத்தலாம். நீங்கள் கண்ணாடி அணிபவர் என்றால் அதில் ஆன்டி ரெஃப்ளெக்டிவ் கோட்டிங் இருந்தால் இன்னும் சிறப்பு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

5. ப்ளூ லைட்டை குறைக்கவும்.

ப்ளூ லைட் என்பது கண்களைப் பாதிக்கலாம் என்பதால் கண் மருத்துவரை அணுகி பிரத்யேக கண்ணாடி அணிந்தோ, கம்ப்யூட்டர் திரையின் கலர் டெம்ப்ரேச்சரை குறைத்தோ வேலை செய்யலாம்.


- ராஜலட்சுமி


- பார்ப்போம்

Eye Health (Representational Image)
Eye Health (Representational Image)
Photo by Adrian Swancar on Unsplash

வாசகர் கேள்வி: ``எனக்கு எப்போதும் கண்களில் நீர் வடிந்துகொண்டே இருக்கிறது. ஒருநாளைக்கு 18 முதல் 19 மணி நேரம் கம்ப்யூட்டரில் வேலைசெய்வதால் இப்படி இருக்க வாய்ப்புண்டா? இதற்குத் தீர்வு என்ன?"

``உங்களைப் போல பல மணி நேரம், அதிகமாக கம்ப்யூட்டரை பயன்படுத்துவோருக்கும், கண்களுக்கு ஓய்வே இல்லாமல் உழைப்போருக்கும் கண்களில் வறட்சி ஏற்படுவது இயல்பு. இது `டிரை ஐ சிண்ட்ரோம்’ (Dry Eye Syndrome) எனப்படும். இதுதான் உங்களுக்கும் பிரச்னையா என்பதை கண் மருத்துவரை அணுகி, டெஸ்ட் செய்து உறுதிசெய்துகொள்ளுங்கள். அது உறுதியானால், கண்களுக்கான பிரத்யேகப் பயிற்சிகளை மருத்துவர் உங்களுக்குக் கற்றுத்தருவார். தேவைப்பட்டால், வறட்சியைப் போக்கும் ஐ டிராப்ஸையும் பரிந்துரைப்பார்.

ஒவ்வாமை காரணமாகவும் சிலருக்கு கண்ணீர் கசியலாம். சிலருக்கு ஏ.சி-யில் இருக்கும்போது கண்கள் அளவுக்கதிகமாக வறட்சியடைவதாலும். வெளிச்சத்தைப் பார்த்தாலும் , சூரிய ஒளி அல்லது சக்தி வாய்ந்த ஒளியைப் பார்க்கிறபோதும் கண்ணீர் கசியும். இந்தப் பிரச்னையுடன் கூடவே கண்கள் சிவந்திருந்தால் அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக கண் மருத்துவரை அணுகுங்கள்."

பார்வை தொடர்பான உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் எங்களுக்கு அனுப்புங்கள். பதில் சொல்லக் காத்திருக்கிறார் டாக்டர் வசுமதி வேதாந்தம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism