Published:Updated:

மொபைல் போன் கண் சோர்வு; யாரை பாதிக்கும், எப்படி தவிர்ப்பது? - கண்கள் பத்திரம் - 5

Children play PUBG on their mobile phones ( AP Photo/ Mahesh Kumar A, File )

``மொபைல் போனை சரியாகப் பயன்படுத்தாவிட்டால் பார்வை தொடர்பான பாதிப்புகள் பலமடங்கு அதிகரிக்கும். அவையெல்லாம் மொபைல் போனால் ஏற்பட்டவை என்பதே தெரியாமல் பலரும் போனை உபயோகித்துக் கொண்டிருப்பார்கள்."

மொபைல் போன் கண் சோர்வு; யாரை பாதிக்கும், எப்படி தவிர்ப்பது? - கண்கள் பத்திரம் - 5

``மொபைல் போனை சரியாகப் பயன்படுத்தாவிட்டால் பார்வை தொடர்பான பாதிப்புகள் பலமடங்கு அதிகரிக்கும். அவையெல்லாம் மொபைல் போனால் ஏற்பட்டவை என்பதே தெரியாமல் பலரும் போனை உபயோகித்துக் கொண்டிருப்பார்கள்."

Published:Updated:
Children play PUBG on their mobile phones ( AP Photo/ Mahesh Kumar A, File )

கடந்த அத்தியாயத்தில் கம்ப்யூட்டர் கண் சோர்வு குறித்து பார்த்தோம். பல மணி நேரம் தொடர்ந்து கம்ப்யூட்டரை பயன்படுத்துவோருக்கு அதன் விளைவாக ஏற்படும் கண் சோர்வு போலவே பல மணி நேரம் மொபைல் போனை தொடர்ந்து உபயோகிப்பவர்களுக்கும் கண்சோர்வு ஏற்படக்கூடும். அது குறித்த விழிப்புணர்வைதான் இந்த அத்தியாயத்தில் விரிவாக விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த, விழித்திரை சிகிச்சை மருத்துவர் வசுமதி வேதாந்தம்.

சிறப்பு மருத்துவர் வசுமதி
சிறப்பு மருத்துவர் வசுமதி

``கம்ப்யூட்டர் கண் சோர்வு ஏற்படுத்திய அதே அறிகுறிகளான,

- கண்கள் வறட்சி,

- கண்களில் நீர் வடிதல்,

- மங்கலான பார்வை,

- தலைவலி உள்ளிட்டவற்றை மொபைல் போன் கண்சோர்வும் ஏற்படுத்தும். கிட்டத்தட்ட 24 மணி நேரமும் நம்முடனேயே இருக்கும் மொபைல் போனை சரியாகப் பயன்படுத்தாவிட்டால் பார்வை தொடர்பான பாதிப்புகள் பலமடங்கு அதிகரிக்கும். அவையெல்லாம் மொபைல் போனால் ஏற்பட்டவை என்பதே தெரியாமல் பலரும் போனை உபயோகித்துக் கொண்டிருப்பார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மொபைல் போன் ஏற்படுத்தும் கண் சோர்வில் இருந்து கண்களைப் பாதுகாப்பது எப்படி?

ஸ்கிரீன் செட்டிங்ஸை அட்ஜஸ்ட் செய்யவும்

ஒவ்வொருவருடைய கண்களும் வித்தியாசமானவை. இன்று பெரும்பாலானோர் உபயோகிக்கும் ஸ்மார்ட் போன்களில் ப்ரைட்னெஸ்ஸை (Brightness) நமக்கு ஏற்றபடி கூட்டியோ குறைத்தோ வைத்துக்கொள்ளும் ஆப்ஷன் இருக்கிறது. கூடியவரையில் ப்ரைட்னெஸ்ஸை குறைத்து வைத்திருப்பது நல்லது. அல்லது ஆட்டோமேட்டிக் ப்ரைட்னெஸ் செட்டிங்ஸை ஆன் செய்து வைத்திருப்பது நல்லது. அதேபோல எழுத்துகளின் அளவையும் கண்களுக்கு சோர்வு ஏற்படுத்தாதபடி மாற்றி வைத்திருப்பது நல்லது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

போதிய இடைவெளி முக்கியம்

உங்களுடைய போனில் 16 முதல் 18 அங்குல இடைவெளியில் உங்களால் எழுத்துகளைப் படிக்கவோ, காட்சிகளைப் பார்க்கவோ முடிய வேண்டும். கண்களுக்கு மிக அருகில் போனை வைத்துப் பார்ப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

நைட் மோடு பயன்படுத்துங்கள்

பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களில் நைட் மோடு ஃபீச்சர் (Night mode feature) என ஒன்று இருக்கும். அது தானாகவே அட்ஜஸ்ட் செய்துகொண்டு இரவு நேரத்தில் கண்களுக்கு சோர்வு அதிகரிப்பதைத் தவிர்த்துவிடும். அதேபோல பகல் வேளைக்கு ஏற்றபடியும் தன்னைத் தானே அது அட்ஜஸ்ட் செய்துகொள்ளும்.

Eye Issues (Representational Image)
Eye Issues (Representational Image)
Photo by Towfiqu barbhuiya on Unsplash

இமைக்க மறக்காதீர்கள்

மேலோட்டமாகப் பார்க்கும்போது `அதெப்படி கண்களை இமைக்காமல் இருப்போம்' என்ற கேள்வி எழலாம். ஆனால், கம்ப்யூட்டரையும் மொபைல் போன்களையும் உபயோகிக்கும்போது நாம் கண்களை இமைக்க மறந்து விடுகிறோம் என்பதைப் பலரும் உணர்வதில்லை. அதுசரி... ஏன் கண்களை இமைக்க வேண்டும்?
ஒவ்வொருமுறை கண்களை இமைக்கும்போதும் கண்களுக்குத் தேவையான ஈரப்பதம் கிடைக்கிறது. கண்களின் வறட்சி தவிர்க்கப்படுகிறது.
இதை ஞாபகம் வைத்துக்கொண்டு கம்ப்யூட்டரில் வேலை செய்யும்போதும் மொபைல் போன் பயன்படுத்தும்போதும் அடிக்கடி கண்களை இமைத்துப் பழகினால் கண்கள் வறண்டு போவது, எரிச்சல் அடைவது போன்றவற்றைத் தவிர்க்க முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கண்களுக்கான டிராப்ஸ் பயன்படுத்தலாம்

கம்ப்யூட்டரையும் மொபைல்போனையும் தொடர்ந்து பல மணிநேரம் பார்த்துக்கொண்டிருப்பதன் விளைவாகக் கண்கள் வறண்டு எரிச்சலடையத் தொடங்கும் என ஏற்கெனவே பார்த்தோம். இதைத் தவிர்க்க கண்கள் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டியது மிக முக்கியம். ஆனால், முன்னரே சொன்னபடி நாம் கண்களை இமைக்க மறந்து விடுவதால் கண்களுக்கு ஈரப்பதம் கிடைக்காமல் போகிறது.
கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போனில் வேலை செய்வது தவிர்க்க முடியாது என்ற நிலையில் உள்ளவர்கள், கண் மருத்துவரின் ஆலோசனையோடு கண்களை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும் ஐ டிராப்ஸ் பயன்படுத்தலாம்.
இதை நீங்களாகவே வாங்கிப் பயன்படுத்தாமல் மருத்துவரின் பரிந்துரையின்பேரில் வாங்கி உபயோகிப்பது பாதுகாப்பானது.

- பார்ப்போம்

- ராஜலட்சுமி

Eye Health (Representational Image)
Eye Health (Representational Image)
Photo by Adrian Swancar on Unsplash

வாசகர் கேள்வி:

``என் வயது 23. எனக்கு பார்வை பிரச்னை இருக்கிறது. கண்ணாடிக்கு பதில் கான்டாக்ட் லென்ஸ் அணிந்துகொள்ளலாமா? அது கண்களைப் பாதிக்குமா?"

``கான்டாக்ட் லென்ஸ் அணிவதென முடிவு செய்துவிட்டால், சில விஷயங்களை அவசியம் பின்பற்ற வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் கண்களில் இன்ஃபெக்ஷன் உண்டாகி, அதன் காரணமாக பார்வைப் பிரச்னைகள் வரலாம்.

லென்ஸை மிக ஜாக்கிரதையாகவும் சுத்தமாகவும் கையாள வேண்டும். முறையாக சுத்தப்படுத்த வேண்டும். லென்ஸ் போடுவதற்கு முன், கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும். இல்லாவிட்டால் லென்ஸினுள் தேவையற்ற புரோட்டீன் சேர்ந்து விடும். அது நல்லதல்ல. லென்ஸை அதற்கான பிரத்யேக திரவம் கொண்டே சுத்தப்படுத்த வேண்டும். லென்ஸை அகற்றியதும், அதற்கான பெட்டியில் பத்திரமாக வைக்க வேண்டும். உங்களுக்கு கண் மருத்துவர் பரிந்துரைக்கும் லென்ஸ் எத்தனை நாள்கள் உபயோகிக்கக்கூடியது என்பதைத் தெரிந்து அதற்கேற்ப மாற்றி விட வேண்டும்.

பார்வை தொடர்பான உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள். பதில் சொல்லக் காத்திருக்கிறார் டாக்டர் வசுமதி வேதாந்தம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism