Published:Updated:

பிஞ்சுக் குழந்தைகளை பாதிக்கும் `சோம்பேறிக் கண்'; அறிகுறிகளும் தீர்வுகளும் - கண்கள் பத்திரம் 6

Children play PUBG on their mobile phones ( AP Photo/ Mahesh Kumar A, File )

குழந்தைகளை பாதிக்கும் சோம்பேறிக் கண் பாதிப்பு, குறிப்பிட்ட வயதுக்குள் சரிசெய்யப்படாவிட்டால், பிற்காலத்தில் அதை ரிவர்ஸ் செய்வது சாத்தியமில்லாமல் போகலாம். அதென்ன சோம்பேறிக் கண், அது ஏன் வருகிறது, அறிகுறிகள் எப்படியிருக்கும், தீர்வுகள் உண்டா..?

பிஞ்சுக் குழந்தைகளை பாதிக்கும் `சோம்பேறிக் கண்'; அறிகுறிகளும் தீர்வுகளும் - கண்கள் பத்திரம் 6

குழந்தைகளை பாதிக்கும் சோம்பேறிக் கண் பாதிப்பு, குறிப்பிட்ட வயதுக்குள் சரிசெய்யப்படாவிட்டால், பிற்காலத்தில் அதை ரிவர்ஸ் செய்வது சாத்தியமில்லாமல் போகலாம். அதென்ன சோம்பேறிக் கண், அது ஏன் வருகிறது, அறிகுறிகள் எப்படியிருக்கும், தீர்வுகள் உண்டா..?

Published:Updated:
Children play PUBG on their mobile phones ( AP Photo/ Mahesh Kumar A, File )

மந்தமாக இருக்கும் குழந்தையை சோம்பேறி எனத் திட்டிப் பார்த்திருப்போம். மந்தமான குழந்தையின் கண்ணுக்கும் அப்படியொரு பெயர் உண்டு தெரியுமா? ஆமாம்... குழந்தைகளை பாதிக்கும் சோம்பேறிக் கண் பாதிப்பு, குறிப்பிட்ட வயதுக்குள் சரிசெய்யப்படாவிட்டால், பிற்காலத்தில் அதை ரிவர்ஸ் செய்வது சாத்தியமில்லாமல் போகலாம்.

அதென்ன சோம்பேறிக் கண், அது ஏன் வருகிறது, அறிகுறிகள் எப்படியிருக்கும், தீர்வுகள் உண்டா..?

விளக்கமாகப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த, விழித்திரை சிகிச்சை மருத்துவர் வசுமதி வேதாந்தம்.

சிறப்பு மருத்துவர் வசுமதி
சிறப்பு மருத்துவர் வசுமதி

``சோம்பேறிக் கண் பாதிப்பு ஆங்கிலத்தில் Amblyopia அல்லது Lazy eye என அழைக்கப்படுகிறது. பிறந்த குழந்தைகளை பாதிக்கிற இதை, சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சையளிக்கத் தவறினால் பார்வையே பறிபோகும் அபாயம் ஏற்படலாம்.

இயற்கையின் படைப்பில் நமக்கெல்லாம் இரண்டு கண்கள் இருப்பதன் காரணம் தெரியுமா? `பைனாகுலர் சிங்கிள் விஷன்' என்றொரு வார்த்தை உண்டு. அதாவது, இரண்டு கண்களும் எடுக்கும் காட்சியானது, இரண்டு கண்களாலும் கண்களுக்கும் மூளைக்குமான தொடர்பான கண் நரம்பு வழியே, மூளைக்குப் போய், ஓரிடத்தில் இரண்டும் இணைந்து, மூளையிலுள்ள `ஆக்சிபிட்டல் லோப்' எனுமிடத்தில் முடிகிறது. ஒரு கண்ணில் பார்க்கும் காட்சியானது ஒரு படமாக மூளையில் தனியே வரும். இன்னொரு கண்ணில் காண்கிற காட்சி தனியே வரும். மூளை இந்த இரண்டு படங்களையும் ஒன்றாக்கி, நமக்கு ஒரே காட்சியாகக் காட்டும். இந்தச் செயல் நடக்காவிட்டால் நமக்கு எப்போதும் இரண்டிரண்டு படங்கள் தெரிந்துகொண்டே இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குழந்தை பிறந்து முதல் எட்டு வருடங்கள் வரை கண்களுக்கும் மூளைக்கும் இடையிலான இந்த வளர்ச்சி தொடர்ந்துகொண்டே இருக்கும். அப்போதுதான் நம்மால் ஒரு காட்சியை பிசிறின்றி தெளிவாகப் பார்க்க முடியும். ஒரு கண் மட்டுமே உள்ளவர்களால் காட்சிகளைத் தெளிவாகப் பார்க்க முடியாது. ஆந்தைக்கு கண்கள் பக்கவாட்டில் இருப்பதால் அதற்கு பக்கவாட்டுப் பார்வை மட்டுமே நன்றாக இருக்கும். ஆனால், அதற்கு இரண்டு கண்களையும் சேர்த்து உபயோகிக்கத் தெரியாது.

குழந்தை பிறந்த முதல் எட்டு வருடங்களில் குழந்தைக்கு ஒரு கண்ணில் ஏதேனும் பிரச்னை இருந்து அதை எட்டு வருடங்களாக சரிசெய்யால் விட்டால், எட்டு வருடங்கள் கழித்து அதைச் சரிசெய்தாலும்கூட அந்தக் கண் `சோம்பேறிக் கண்' என்று அழைக்கப்படும். என்னதான் முயற்சி செய்தாலும் அந்தக் கண்ணில் பார்வையை முழுமையடையச் செய்ய முடியாது. பல வருடங்கள் ஆகிவிட்டதால், கண் கொடுக்கும் காட்சியை மூளையானது தவிர்க்க ஆரம்பித்துவிடும்.

காரணங்கள்

- ஒரு கண்ணில் தெளிவான பார்வையும், மறு கண்ணில் தெளிவற்ற பார்வையும் ஏற்படும்போது.

- விழி வரிசை அமைப்பு சரியாக இல்லாததால்

- பார்வை மற்றும் பார்வையுடன் தொடர்புடைய மூளையின் வளர்ச்சியில் ஏதாவது தடங்கல் ஏற்படும்போது...

- குழந்தையின் ஒரு கண்ணில் கேட்டராக்ட் எனப்படும் கண்புரை இருப்பது,

- கண்ணின் பின்பகுதியில் ரத்தம் கசிவது.

Eye Issues (Representational Image)
Eye Issues (Representational Image)
Photo by Towfiqu barbhuiya on Unsplash

எப்படிக் கண்டுபிடிப்பது?

அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியாது என்பதால், குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை என்றால் கண்களைப் பரிசோதிப்பது அவசியம். குழந்தையின் நடையில் வித்தியாசம் தெரிந்தாலோ, மிக அருகில் உட்கார்ந்து டிவி பார்த்தாலோ அடிக்கடி தலைவலிப்பதாகச் சொன்னாலோ, உடனடியாக குழந்தைகளுக்கான கண் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்ன சிசிச்சைகள்?

பார்வைத் திறன் நன்றாக உள்ள கண்ணைத் தினமும் சிறிது நேரம் மறைத்துக்கொண்டு, பலவீனமான கண்ணால் பார்க்கச் செய்கிற பயிற்சியைக் குழந்தைக்குத் தர வேண்டும். இரண்டு கண்களின் பார்வையையும் சமமாக்கச் செய்கிற பிரத்யேகப் பயிற்சியைக் குழந்தைக்கு தினம் 2 மணி நேரம் கொடுக்க வேண்டியிருக்கும்.

குழந்தை ஒரு கண்ணை மட்டுமே உபயோகிக்கப் பழக்கப் படுத்தப்படுவதால், பலவீனமான இன்னொரு கண், தன் சோம்பேறித் தனத்தை விட்டுவிட்டு, சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பிக்கும். சில நேரங்களில் மருத்துவர், நன்றாக வேலை செய்கிற கண்ணின் பார்வையைத் தற்காலிகமாக மழுங்கச் செய்வார். பார்வைத்திறன் குறைவாக உள்ள கண்ணை அதிகமாகப் பார்க்க வைக்கச் செய்வார். சோம்பேறிக் கண்ணின் பார்வையை சரி செய்யும் சிகிச்சை இது.

Baby - Representative Image
Baby - Representative Image
Photo by Kristina Paukshtite from Pexels

கண்ணில் பிரச்னை என சம்பந்தப்பட்ட குழந்தைக்கு வெளியே சொல்லத் தெரியாது. அதனால்தான் குழந்தைகளை பள்ளிக் கூடத்தில் சேர்ப்பதற்கு முன்பே கண் மருத்துவரிடம் ஒரு செக்கப் அழைத்துச் செல்லுமாறு பெற்றோருக்கு வலியுறுத்துகிறோம். ஒருவேளை குழந்தைக்கு கண்களில் பவர் இருந்தாலோ, பூ விழுந்திருந்தாலோ, மாறுகண் பிரச்னை இருந்தாலோ அந்தக் கண்ணில் காட்சி சரியாக இருக்காது. இதைக் குழந்தையின் 8 வயதுக்குள் சரிசெய்ய வேண்டியது மிக முக்கியம்.

- பார்ப்போம்

- ராஜலட்சுமி

.....................

பார்வை தொடர்பான உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள். பதில் சொல்லக் காத்திருக்கிறார் டாக்டர் வசுமதி வேதாந்தம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism