Published:Updated:

கண் முதல் குடல் வரை பாதிப்புகள்; புகை பிடித்தல் உங்களை எங்கு கொண்டுபோய் நிறுத்தும் தெரியுமா?

Smoking
News
Smoking ( Photo by Andres Siimon on Unsplash )

``புகையில் உள்ள நிக்கோடின், டொபாக்கோ என்ற இலையில் இருந்து பெறப்படுகிறது. புகைப்பழக்கத்தை பல வழிகளில் மேற்கொள்கின்றனர். இலையில் புகையிலைத் தூள் வைத்துச் சுருட்டி பீடி ஆக்குகிறார்கள். பேப்பரில் மாய்ஸ்சர், வாசனை திரவியங்கள், கிளிசரின் ஆகியவற்றைச் சேர்த்து சிகரெட் ஆக்குகின்றனர்."

இன்றைய காலகட்டத்தில் பதின் வயதினர் முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவரிடமும் புகைப்பழக்கம் பரவலாக உள்ளது. இளம் வயதினர் சோஷியல் பிரஷரால் புகைப்பழக்கத்தின் வலையில் விழுகின்றனர். புகைப்பழக்கத்தால் கண் முதல் குடல் வரை ஒருவரின் ஆரோக்கியம் எந்தளவுக்குப் பாதிக்கப்படுகிறது என்று விளக்குகிறார் கண் மருத்துவர் பா. சந்திரசேகர்.

மருத்துவர் பா. சந்திரசேகர்
மருத்துவர் பா. சந்திரசேகர்

``புகையில் உள்ள நிக்கோடின் (Nicotine), டொபாக்கோ (Tobacco) என்ற இலையில் இருந்து பெறப்படுகிறது. புகைப்பழக்கத்தை பல வழிகளில் மேற்கொள்கின்றனர். இலையில் புகையிலைத் தூள் வைத்துச் சுருட்டி பீடி ஆக்குகிறார்கள். பேப்பரில் மாய்ஸ்சர், வாசனை திரவியங்கள், கிளிசரின் ஆகியவற்றைச் சேர்த்து சிகரெட் ஆக்குகின்றனர். பைப் மூலம் புகைக்கின்றனர். வட மாநிலங்களில், Hubble bubble என்று, குடுவையில் நிக்கோடினை நிரப்பி பற்றவைத்து, தண்ணீரில் அந்தப் புகையைச் செலுத்தி, `ஹீட்கா' என்று கூறப்படும் அந்தப் புகையை பலர் உள்ளிழுப்பார்கள். அப்படி உள்ளிழுக்கும்போது அவர்களில் ஒருவருக்கு டிபி இருந்தால், அது பலருக்கும் பரவும் அபாயம் உள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இப்படி, பல வகைகளிலும் உள்ளிழுக்கப்படும் நிக்கோட்டின், நுரையீரலை பாதிக்கும் என்றுதான் பரவலாக அறியப்படுகிறது. ஆனால், சிகரெட் புகை கண் முதல் குடல்வரை பாதிக்கக்கூடியது.

* புகைப்பழக்கத்தால் கண்களில் உள்ள Blindspot (இருட்டுப்புள்ளி) அதிகமாகின்றது.

Eyes (Representational Image)
Eyes (Representational Image)
Pixabay

* புகைப்பழக்கத்தால் விழித்திரையில் ரத்த ஓட்டம் குறைந்து அதனால் கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு பார்வைத்திறன் குறைகின்றது.

* மிக முக்கியமாக நிறங்களைக் கண்டறிய சிரமப்படுகின்றனர். குறிப்பாக சிவப்பு நிறத்தை கண்டறிவதில் மிகவும் சிரமம் ஏற்படும். அது `நிறக்குருடு' (Colour blindness) என்று அழைக்கப்படுகிறது.

* கண்களில் உள்ள ரத்த நாளங்கள் சுருங்கி ஆபத்தான பின்விளைவுகளை உண்டாக்குகின்றன.

* புகை நுரையீரலில் சிஓபிடி (COPD - chronic obstructive pulmonary disease), நுரையீரல் வீக்கம், நுரையீரல் புற்றுநோய் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

* புகைப்பதனால் இருதய தசைகள் சோர்வடைந்து மற்ற உறுப்புகளுக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைகிறது. பசியின்மை ஏற்பட்டு எடை குறைவு ஏற்படுகின்றது.

* புகைப்பழக்கத்தால் மேல் குடலின் கீழ்ப்பகுதியில் புண் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

* கால்களில் உள்ள ரத்த நாளங்கள் சுருங்கி ரத்த ஓட்டம் குறைகின்றது.

* பெண்கள் கர்ப்பகாலத்தில் புகைப்பிடிப்பதனால் கருவில் உள்ள குழந்தை உடனடியாக பாதிப்படைகின்றது; அதற்கு மூளை வளர்ச்சிக் குறைபாடு ஏற்படுகின்றது.

Smoking
Smoking
Photo by Basil MK from Pexels

* பாலூட்டும் தாய்மார்கள் புகைக்கும்போது தாய்ப்பால் வழியாகவும் நிக்கோட்டின் பாதிப்பு குழந்தையைச் சென்றடைகிறது.

* புகை, புகைப்பவர்களை மட்டுமல்லாமல் அவர்களுக்கு அருகில் உள்ளவர்களையும் பாதிக்கின்றது. இதை பாஸிவ் ஸ்மோகிங் (Passive smoking) என்று கூறுவர்.

எனவே புகைப்பழக்கத்தை நிறுத்துவது நுரையீரலை மட்டுமல்ல, மொத்த ஆரோக்கியத்தையும் காப்பாற்றும்'' என்றார்.