Election bannerElection banner
Published:Updated:

ஆரஞ்சு, புதினா, லவங்க நறுமணங்களில் ஆக்ஸிஜன் விற்பனை... 15 நிமிடங்களுக்கு ஜஸ்ட் ரூ.299 #Oxygen

ஆக்ஸிஜன்
ஆக்ஸிஜன்

எலுமிச்சை, ஆரஞ்சு, லவங்கப்பட்டை, புதினா, யூகலிப்டஸ், லாவெண்டர் எனப் பல்வேறு நறுமணங்களில் இங்கே ஆக்ஸிஜன் விற்கப்படுகிறது.

டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசுபாடு, இந்தியா முழுவதும் மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்திவருகிறது. பதற்றத்துக்கான முக்கியக் காரணம், டெல்லியில் ஏற்பட்ட புகைமூட்டம். புகைமூட்டத்தின் அளவுடன் காற்று மாசுபாட்டைத் தொடர்புபடுத்திப் பார்த்து பயப்படுகிறார்கள் டெல்லிவாழ் மக்கள்.

காற்று மாசுபாடு
காற்று மாசுபாடு

புகைமூட்டமே இல்லையென்றால், காற்று சுத்தமாக உள்ளதென நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் டெல்லியில் கடந்த 2 வருடங்களில், வெறும் இரண்டு நாள்கள் மட்டும்தான் `சுவாசிக்க உகந்த காற்று' இருந்துள்ளதாம்.

சென்னை காற்று மாசடைந்தது இன்றல்ல... 2016 ஆண்டிலிருந்தே மோசம்தான்!  என்ன காரணம்?

இந்த நிலையில், `எங்களிடம் வருடம் முழுவதும் சுத்தமான காற்று கிடைக்கும். வந்து பெற்றுக்கொள்ளுங்கள்' என சுத்தமான காற்றுக்கான விற்பனைச் சந்தையொன்று, டெல்லியில் தற்போது உருவாகி வருகிறது!

ஆக்ஸிஜன்
ஆக்ஸிஜன்

அந்த `பிரத்யேக ஆக்ஸிஜன் விற்பனையகம்' டெல்லியின் முக்கியமான இடமான சாகெட் பகுதியில் `ஆக்ஸி ப்யூர்' என்ற பெயரில் இயங்கிவருகிறது. இங்கு எலுமிச்சை, ஆரஞ்சு, லவங்கப்பட்டை, புதினா, யூகலிப்டஸ், லாவெண்டர் எனப் பல்வேறு நறுமணங்களில் இங்கே ஆக்ஸிஜன் விற்கப்படுகிறது.

அப்படி விற்கப்படும் அந்த `சுத்தமான' ஆக்ஸிஜனை ஒருநாளில், ஒரே ஒருமுறை பதினைந்து நிமிடங்களுக்கு மட்டுமே மோந்து கொள்ள வேண்டுமாம். அளவு அதிகரிப்பது ஆரோக்கியமற்றது., எனப் பத்திரிகையாளர் பேட்டியொன்றில் நிறுவனத்தாரே குறிப்பிடுகின்றனர்.

காற்று மாசுபாடு
காற்று மாசுபாடு

மேலும் `இப்போதைக்கு ஒரே ஓர் இடத்தில்தான் இந்த விற்பனையகம் இருக்கிறது. வரும் நாள்களில் டெல்லி ஏர்போர்ட்டில் அடுத்த விற்பனையகம் தொடங்கப்படவிருக்கிறதாம்.

பதினைந்து நிமிடங்கள் நீங்கள் சுவாசிக்கப்போகும் இந்த ஆக்ஸிஜனின் விலை, `ஜஸ்ட் ரூ.299' தானாம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு