Published:Updated:

எறும்புத் தின்னிகளிடமிருந்து பரவியதா கொரோனா வைரஸ்.. ஆய்வு முடிவு சொல்வது என்ன?

எறும்புத் தின்னி
எறும்புத் தின்னி

நாவல் கொரோனா, எறும்புத் தின்னிகளிடமிருந்து வருகிறது! - தென் சீன ஆய்வாளர்கள்

கொரோனா வைரஸின் தாக்கம் ஒருபக்கம் அதிகரித்துக்கொண்டிருக்க, அதைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் மருந்துகள் யாவும் ஆய்வு நிலையிலேயே தொடர்கின்றன. அடிப்படையில் இந்த வைரஸ் எங்கிருந்து பரவுகிறது என்பதே தெரியவில்லை என்பதுதான் மருந்து கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்படக் காரணம் என ஆய்வாளர்கள் தரப்பில் தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வருகிறது.

Vikatan
எறும்பு தின்னி
எறும்பு தின்னி

ஆய்வாளர்களின் தற்போதைய கணிப்புப்படி, இந்த வைரஸ் வௌவால்களிடமிருந்து பாம்புகளுக்கும், பாம்புகளிடமிருந்து மனிதர்களுக்கும் வந்திருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.

யூகமெல்லாம் ஒருபக்கம் இருக்க, இரு தினங்களுக்கு முன் தென் சீனாவைச் சேர்ந்த விவசாயப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள், எறும்புத் தின்னியின் உடலிலிருக்கும் ஜீனோம் (Genome), நாவல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் உடலிலிருக்கும் கொரோனா வைரஸின் மரபணுவோடு 99 சதவிகிதம் ஒத்துப்போவதைக் கண்டறிந்துள்ளனர்.

எறும்பு தின்னி
எறும்பு தின்னி
அந்தப் பல்கலைக்கழக இயக்குநர் லியூ யஹாங் இதுகுறித்துப் பேசும்போது, ஆய்வாளர்கள் தரப்பில் இதுவரை ஏறத்தாழ 1,000 வனவிலங்கு மரபணுக்களை சோதித்திருப்பதாகவும், அதில் எறும்புத் தின்னிகளின் மரபணுவே இந்தளவுக்கு ஒத்துப்போயிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ்... சீனாவும், உலக சுகாதார நிறுவனமும் எடுக்கத் தவறிய நடவடிக்கைகள்! #CoronaVirus
கொரோனா வைரஸ்  தடுப்பு
கொரோனா வைரஸ் தடுப்பு

ஆகவே, நாவல் கொரோனா வைரஸ் வகை எறும்புத் தின்னிகளிடமிருந்து பரவத்தொடங்கியிருக்கும் என யூகித்து, அறிவித்திருக்கிறார் லியூ யஹாங். இதை அடிப்படையாக வைத்து, அடுத்தகட்டமாக இந்த வைரஸை அழிப்பதற்கான ஆய்வுகள் தொடரப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார் அவர். விரைவில் மருந்து கண்டறியப்பட்டால் மகிழ்ச்சியே!

பின் செல்ல