Published:Updated:

`இது முடிவல்ல, ஆரம்பம்!' - கேட்ஜெட் ஃப்ரீ ஹவர் குறித்து  `பேரன்ட் சர்க்கிள்' நளினா!

பேரன்ட் சர்க்கிள்
பேரன்ட் சர்க்கிள்

``65,000 பள்ளிகளைச் சென்றடைந்துள்ளோம்" - மனம் திறக்கும் 'பேரன்ட் சர்க்கிள்' நளினா ராமலக்‌ஷ்மி.

கால்பந்து, கைப்பந்து விளையாட்டுகள்தான் என்றில்லை... இப்போதெல்லாம் பல்லாங்குழிகூட ஆன்லைனில் வந்துவிட்டது. அந்த அளவுக்கு குழந்தைகளின் உலகம் முழுவதுமாக இணைய மயமாகிவருகிறது. சாமான்ய வீடு தொடங்கி உயர்தர அடுக்குமாடிகளிலுள்ள வீடுகள்வரை, பெரும்பான்மையான குடும்பங்களில் அறைக் கதவுகளுக்குப் பின்னிருந்து பதின்பருவ குரல்கள் ஓங்குகின்றன.

குழந்தை
குழந்தை

குறிப்பாக, பப்ஜி குரல்களின் சத்தம் அதிகரித்துவிட்டது. குழந்தைகளின் இந்த மொபைல் அடிமைத்தனத்துக்கு, பெற்றோர் முக்கியக் காரணம் என்கின்றனர், குழந்தைகள் உளவியல் ஆலோசகர்கள். காரணம், `எனக்கிருக்கிற ஆபீஸ் ஸ்ட்ரெஸ்ல இவன்/ள் வேற...' எனப் புலம்பிக்கொண்டே லேப்டாப் முன்னரோ மொபைலுக்கு முன்னரோ தங்களைச் சுருக்கிக்கொள்ளும் அம்மா அப்பாக்களே இங்கு அதிகம் என்கின்றனர் அவர்கள்.

Vikatan

`நண்பன்' பட வைரஸ் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால், `ரன் ரன் ரன், லைஃப் இஸ் எ ரேஸ். நீ ஓடலைனா, பின்னாடி வர்றவன் உன்ன ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இருப்பான்' என்பது போன்ற வாழ்க்கையைத்தான் பெரும்பான்மையான பெற்றோர் வாழ்கின்றனர். தங்களின் அந்த வாழ்க்கையையே வருங்காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்தைத் தருமென்றும் அவர்கள் நம்புகின்றனர்.

பேரன்ட் சர்க்கிள்
பேரன்ட் சர்க்கிள்

"ஆனால், பிள்ளைகளின் உண்மையான தேவை பெற்றோரின் நேரம்" என அழுத்தமாகச் சொல்கிறார், `பேரன்ட் சர்க்கிள்' அமைப்பின் தலைவர் நளினா ராமலக்‌ஷ்மி. இவரது இந்த அமைப்பு, இந்த வருடம் குழந்தைகள் தினத்துக்கு கேட்ஜெட் ஃப்ரீ ஹவர் என்ற முக்கியமான முன்னெடுப்பு ஒன்றைத் தொடங்கியுள்ளது.

`இந்த வருட குழந்தைகள் தினத்தில், பெரியவர்கள் அனைவரும் இரவு 7.30 முதல் 8.30 மணி வரை, தங்களின் கேட்ஜெட்களை அணைத்து வைத்துவிட்டு, அந்த நேரத்தை குழந்தைகளுடன் பேசி, சிரித்துச் செலவிட வேண்டும்' என்பதே அது.
பேரன்ட் சர்க்கிள்
பேரன்ட் சர்க்கிள்

இதன் ஒரு பகுதியாக, பேரன்ட் சர்க்கிளின் இணையதளம், அந்நேரத்தில் முடக்கிவைக்கப்படும் எனக் கூறியுள்ளார், அதன் நிறுவனர் நளினா ராமலக்‌ஷ்மி.

இந்த முன்னெடுப்பின் நன்மைகள் குறித்தும், பயனாளர்கள் குறித்தும் நளினா ராமலக்‌ஷ்மியிடம் பேசினோம்.

நளினா ராமலக்‌ஷ்மி
நளினா ராமலக்‌ஷ்மி

அதென்ன கேட்ஜெட் ஃப்ரீ ஹவர்? இதனால் என்ன பயன்?

"குழந்தைகள் தினத்தன்று, ஒரு மணி நேரம் கேட்ஜெட் உபயோகமின்றி இயங்க வேண்டும். அதுதான் கேட்ஜெட் ஃப்ரீ ஹவர். எங்களின் இந்த `கேட்ஜெட் ஃப்ரீ ஹவர்' முன்னெடுப்பு, குழந்தை - பெற்றோருக்கு இடையிலுள்ள தூரத்தை நிச்சயமாகக் குறைக்கும். இதைவிட சிறந்த பயன் என்ன இருந்துவிட முடியும்? எங்களின் டேக் லைன், `Disconnect 2 Reconnect' என்பது. அதாவது, `இணைப்பைத் துண்டியுங்கள்... இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள...' கேட்ஜெட்களுடனான இணக்கத்தைத் துண்டித்து, குழந்தைகளுடனான இணக்கத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள் என்பதுதான் நாங்கள் சொல்லவரும் விஷயம்.

எங்களின் இந்த முன்னெடுப்பை, `குழந்தைகள் தினத்தன்று மட்டும் செய்ய வேண்டும்' எனப் பெற்றோர்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏதோ ஒரு நாள் மட்டும் செய்யும் விஷயமில்லை இது. தினம் தினம் ஒரு மணி நேரம் கேட்ஜெட்டுக்கு நோ சொல்லிப் பழகுங்கள். அந்தப் பழக்கத்துக்கான தொடக்க நாளாக இந்த வருட குழந்தைகள் தினத்தை வைத்துக்கொள்ளுங்கள். இந்த முன்னெடுப்பு, முடிவல்ல. ஆரம்பம்!"

பேரண்ட் சர்க்கிள்
பேரண்ட் சர்க்கிள்

`உங்களின் இந்த முன்னெடுப்பு, இதுவரை எத்தனை குழந்தைகளை எட்டியுள்ளது?'

"இந்திய அளவில் ஏறத்தாழ 58,000 - க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சென்றடைந்திருக்கிறோம். தமிழகத்தில், பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து செயல்பட்டதால், பல்வேறு கடைநிலை கிராமப்புற பள்ளிகளுக்கும், அங்கு பயிலும் குழந்தைகளின் பெற்றோருக்கும் இந்த விழிப்புணர்வைக் கொண்டு சேர்க்க முடிந்துள்ளது.

செலிபிரிட்டிகளைப் பொறுத்தவரை சமீரா ரெட்டி, ஆர்.ஜே.பாலாஜி, பாடகி மகதி, செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் எனப் பலரும் தங்களின் ஆதரவைப் பதிவுசெய்து வருகின்றனர். சில ஐந்து ஸ்டார் ஹோட்டல்களில் `கேட்ஜெட் ஃப்ரீ ஹவருக்கு' ஆதரவு தெரிவிக்கும் பயனாளர்களுக்கு, உணவில் 10 -20 சதவிகிதம் தள்ளுபடி தரப்படுகிறது.

பேரன்ட் சர்க்கிள்
பேரன்ட் சர்க்கிள்

பலதரப்பட்ட ஊடகங்களின் புரொமோஷன்களால், எங்களின் இந்த முயற்சிக்கான ஆதரவு நீண்டுகொண்டேபோகிறது. இணைய வழியில் மட்டும் இதுவரை 28,000-க்கும் மேற்பட்ட பதிவுகள் வந்துள்ளன. `கேட்ஜெட் ஃப்ரீ ஹவர்' முன்னெடுப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் பெற்றோர், http://www.gadgetfreehour.com/ என்ற தளத்தில் தங்களைப் பதிவுசெய்துகொண்டு ஆதரவைத் தெரிவிக்கலாம்" என்கிறார் அவர்.

பெரியவர்கள்தான் என்றில்லை, இன்றைய குழந்தைகளுக்கும் டென்ஷன் இருக்கிறது. சொல்லப்போனால், பெரியவர்களைவிட குழந்தைகள்தான் அதிக மன அழுத்தத்திலும், வயதுக்கு மீறிய பரபரப்பான வாழ்க்கை ஓட்டத்திலும் இருக்கின்றனர். `Feeling Stressed, Depressed, Annoyed' என எளிதில் கடக்க முடியாத கடுமையான வார்த்தைகளைச் சட்டெனச் சொல்லிக் கடக்கும் சுட்டிகளைப் பார்க்கும்போது, `நல்ல வேளையாக, நம்முடைய குழந்தைப் பருவம் இத்தனை பரபரப்புக்கு மத்தியில் நிகழவில்லை' என ஒருபக்கம் மகிழ்ச்சி. ஆனால், அடுத்த தலைமுறை சுமக்கும் இந்த சீரியஸ் பிரச்னையை எளிதில் கடந்துவிட முடியவில்லை.

பேரண்ட் சர்க்கிள்
பேரண்ட் சர்க்கிள்

``குழந்தைகளின் மன அழுத்தப் பிரச்னைகளுக்கான தீர்வாக, `கேட்ஜெட் ஃப்ரீ ஹவர்' இருக்கும்" என்கிறார் நளினா ராமலக்‌ஷ்மி.

மேலும் பேசியவர், ``தினம் ஒரு மணி நேரம் எந்த கேட்ஜெட்டும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது, கேட்கும்போது எளிமையான விஷயமாகத் தோன்றலாம். உண்மையில், கேட்ஜெட்டோடு பழகிவிட்டவர்களுக்கு இது அவ்வளவு சிரமமான விஷயம்! ஆனால், குழந்தைகளுடன் தரமான நேரத்தைச் செலவிடுபவர்களுக்கு இந்தச் சிரமம் இருக்காது.

பேரன்ட் சர்க்கிள்
பேரன்ட் சர்க்கிள்

குழந்தைகள், எளிமையானவர்கள். அவர்களுக்குத் தேவை, நீங்கள் மட்டும்தான். நீங்களென்பது உங்களின் நேரமும், புன்னகையும், பொறுமையும், அன்பும், ஆலோசனைகளும்தான்" அழுத்தமாகச் சொல்கிறார் நளினா.

அடுத்த கட்டுரைக்கு