Published:Updated:

கொரோனா பரிசோதனைக்கு முன்வருபவர்களுக்கு சோதனைகள் மறுக்கப்படுகிறதா?! FightCovid-19

``கொரோனா தொற்று இருக்கிற நாடுகளிலிருந்து வந்தவர்கள், சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனை செய்துகொள்ள வந்தாலும் அவர்களைத் தனிமைப்படுத்தி, 14 நாள்கள் கண்காணிப்பில் வைத்து, தொற்று இல்லையென்பது உறுதியான பிறகுதான் அனுப்புவோம்.''

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகளைத் தெரிந்துகொள்வதோடு, தனக்கும் தொற்றியிருக்கலாமோ என்று சந்தேகப்படுபவர்கள் தமிழ்நாட்டில் எங்கெங்கு சென்று மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளலாம், தமிழ்நாட்டில் எத்தனை கொரோனா பரிசோதனை மையங்கள் இருக்கின்றன, யாரெல்லாம் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை, தமிழ்நாட்டின் மாநில தொற்றுநோய் கண்காணிப்பு அலுவலர் சம்பத்திடம் பேசினோம்.

2
corona

தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனை மையங்கள் எத்தனை இருக்கின்றன?

``தமிழ்நாடு முழுக்க மொத்தம் 4 பரிசோதனை மையங்கள் இருக்கின்றன. இது இன்றைய நிலைமை. தொற்றின் பரவலைப் பொறுத்து வருங்காலத்தில் மாறுபடும்."

3
corona

கொரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனை மையங்கள் இருக்கிற மருத்துவமனைகள்..

``சென்னையில் கிண்டியில் இருக்கிற கிங் இன்ஸ்ட்டிடியூட், தவிர திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் இருக்கின்றன."

4
corona

யாரெல்லாம் கட்டாயம் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்?

``சீனா, இத்தாலி, இரான், பிரான்ஸ் உள்ளிட்ட கொரோனா பாதிப்புள்ள நாடுகளுக்கு சமீபத்தில் சென்று வந்தவர்கள், தங்களுக்கு கொரோனா அறிகுறிகள் தெரிந்தால், மேலே சொல்லியுள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று உடனடியாக டெஸ்ட் எடுத்துப் பார்த்துவிடுங்கள். இவர்களைத் தவிர, இவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று நெருங்கிப் பழகிய அத்தனை பேரும், கொரோனா அறிகுறிகள் தெரியும்பட்சத்தில், தாங்களாகவே முன்வந்து உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வதுதான் உங்களுக்கும் நாட்டுக்கும் நல்லது."

5
கொரோனா

ரிசல்ட் பாசிட்டிவ் என்று வந்தால்..?

``கொரோனா தொற்று இருக்கிற நாடுகளிலிருந்து வந்தவர்கள், சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனை செய்துகொள்ள வந்தாலும் அவர்களைத் தனிமைப்படுத்தி, 14 நாள்கள் கண்காணிப்பில் வைத்து, தொற்று இல்லையென்பது உறுதியான பிறகுதான் அனுப்புவோம். பரிசோதனைக்கு மாதிரியை எடுத்துக்கொண்டதும் வீட்டுக்கு அனுப்ப மாட்டோம். அதேபோல் ரிசல்ட் பாசிட்டிவ் என்று வரும் வரையெல்லாம், சம்பந்தப்பட்ட நபரைத் தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்குக் காத்திருக்கவும் மாட்டோம். ஒருவேளை கொரோனா தொற்று உறுதியானால் சிகிச்சையை ஆரம்பித்துவிடுவோம்."

6
corona

சிலருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மறுக்கப்படுவதாகக் கேள்விப்பட்டோமே...

``இதில் உண்மையில்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கும் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் நாங்கள் மருத்துவப் பரிசோதனை செய்துபார்க்க மறுப்பதே இல்லை. வெளிநாட்டுக்குச் சென்று வராமலும், சென்று வந்தவர்களுடன் எந்தவிதத் தொடர்பிலும் இல்லாமலும் இருப்பவர்கள்கூட வெறும் பயத்தின் காரணமாகப் பரிசோதனை செய்துகொள்ள வருகிறார்கள். அவர்களைத் தனிமையில் ஓய்வெடுக்கச் சொல்லி அறிவுறுத்துகிறோம். தவிர, சாதாரண சளி, இருமல் பிரச்னை இருப்பவர்களெல்லாம் வந்து குவிந்துவிட்டால், உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்வது தாமதமாகலாம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்."

7
corona

தமிழ்நாட்டில் எங்கெல்லாம் தொற்று பரவுவதற்கு வாய்ப்பு அதிகமிருப்பதாக நினைக்கிறீர்கள்?

``அப்படிக் குறிப்பிட்டு இடங்களைச் சொல்ல முடியாது. ஆனால், சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் இருக்கிற கிராமங்களில் பரவுவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது."

8
corona

வெளிநாட்டில் இருந்து கிராமத்துக்கு ஒருவர் வந்தால், மற்றவர்கள் எப்படிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும்?

"வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை 14 நாள்கள் வரைக்கும் நேரில் சென்று பார்க்காமல் இருந்தாலே போதும்."

9
corona

ஒரு கிராமத்திலோ, ஒரு பகுதியிலோ கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக சந்தேகம் வந்தால், உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

``உடனடியாக கொரோனா தொற்றுக்கான டோல் ஃப்ரீ நம்பர் மூலம் (தமிழக அரசின் 24 மணி நேர கொரோனா ஹெல்ப் லைன் 044 - 29510400, 29510500, 94443 40496, 87544 48477) எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். எங்கள் ஹெல்த் டிபார்ட்மென்ட்டைச் சேர்ந்தவர்கள் உடனடியாக உங்கள் பகுதிக்கு வந்து ஆய்வு செய்து, அடுத்து செய்ய வேண்டியவை குறித்த முடிவை எடுப்பார்கள்."

10
corona

ஐசோலேஷன் மற்றும் குவாரன்ட்டைன் பற்றி பொதுமக்கள் பீதியடைந்திருப்பது பற்றி...

`ஜஸ்டின் ட்ரூடோ மனைவி முதல் ஈரான் அதிபரின் ஆலோசகர் வரை..!' -தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா
அச்சுறுத்தும் கொரோனா... அரசு, நிறுவனங்கள், பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன?#LetsFightCovid-19

"அம்மை வந்தால் குழந்தைகளைக்கூடத் தனிமையில் வைத்துதானே சிகிச்சையளிப்போம். அதுபோலத்தான் இதுவும். இதில் பயப்படுவதற்கு எதுவுமில்லை."

அடுத்த கட்டுரைக்கு