Published:Updated:

`ஊரடங்கு தளர்விலும் சுய பொறுப்பு அவசியம்!' - அறிவுறுத்தும் மருத்துவர்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ஒருவர் மட்டும் முகக்கவசம் அணிவதை விட சமூகமே அணிவதுதான், நோயை எதிர்க்கும் நம் போருக்குத் தேவை.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஐந்தாம்கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஊரடங்கில் பாதிப்பு குறைவான பகுதிகளில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வரும் சூழலில், தங்களையும் சமூகத்தையும் பாதுகாக்க மக்கள் எவ்வாறு சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று விளக்குகிறார் பொது மருத்துவர் மற்றும் ஆய்வாளர் நாகார்ஜுனா .

Lockdown relaxation
Lockdown relaxation

``கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நோய் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே மிக அவசியம். இன்னும் பலர் நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் அறியாமையுடன் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த அறியாமையைப் போக்க நோய் குறித்த விவரம் அறிந்தவர்கள், விவரம் அறியாத மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கொரோனா தொற்று பிரச்னை தனிப்பட்ட நபரின் உடல் பிரச்னை அல்ல, அது சமூகப் பிரச்னை. இந்த சமூகப் பிரச்னையை எதிர்த்துப் போராட மக்களின் பங்களிப்பு அவசியம்.

வெளியில் கடைகளுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கை உறைகளும் அணியலாம். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் வேலை முடிந்தவுடன் குளிப்பது, தங்களைத் தனிமைப் படுத்திக்கொள்வது என இருக்க வேண்டும்.

Dr.nagarjuna
Dr.nagarjuna

வீட்டிற்கு அருகில் இருப்பவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களை தீண்டத்தகாதவர்கள் போல் நடத்தாமல் அனுசரணையாக அவர்களுக்கு உதவ வேண்டும். எந்த மருத்துவமனைக்குச் செல்லலாம் போன்ற ஆலோசனைகளை வழங்கலாம் . ஒருவர் இறந்தால் அவர் உடலுக்குச் செய்யக்கூடிய சடங்குகளை முழுவதுமாகச் செய்யாமல், முக்கியமானவற்றை மட்டும் செய்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் உடலைத் தகனம் செய்ய வேண்டும்.

கொரோனா தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்க எதிர்ப்பு சக்தி நிறைந்த மருந்துகள் அவசியம். வைட்டமின், மினரல் நிறைந்த உணவுகள் அவசியம். இஞ்சி மற்றும் பூண்டை அதிகமாகச் சேர்ப்பது எதிர்ப்பு சக்தியைக் கூட்டும். நம் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதால், சமூகத்தின் கூட்டு எதிர்ப்பு சக்தியும் கூடுகிறது. அதனால் நம்மைப் பாதுகாப்பதன் மூலம் சமூகத்தையும் பாதுகாக்கிறோம்.

hand wash
hand wash
வெயில் காலத்தில் 20 அடி தூரத்துக்குப் பரவும் கொரோனா வைரஸ்... எப்படி தப்பிப்பது? #ExpertOpinion

நாம் பின்பற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நம் சுற்றத்தாரும் பின்பற்ற உதவி செய்ய வேண்டும் . ஒருவர் மட்டும் முகக்கவசம் அணிவதை விட சமூகமே அணிவதுதான், நோயை எதிர்க்கும் நம் போருக்குத் தேவை" என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு