Published:Updated:

தற்கொலை எண்ணத்துல இருக்கிறவங்களுக்கு அட்வைஸ் வேண்டாம், ஆனால்..! #WorldMentalHealthDay

ஆண்டுதோறும் அக்டோபர் 10-ம் தேதி உலக மனநல தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மனநல தினத்துக்கான கருத்தாக்கமாக, `தற்கொலையைத் தடுக்க இணைந்து பணியாற்றுவோம்!' (Working together to prevent suicide) என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

suicide
suicide ( Pixabay )

ஒவ்வொரு 40 நிமிடத்துக்கும் ஓர் உயிர் தற்கொலையால் பறிபோகிறது. உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழக்கின்றனர். 12-29 வயதுக்குட்பட்டவர்களின் இறப்புகளுக்கு இரண்டாவது காரணமாக தற்கொலை அமைகிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

தற்கொலை தடுப்பு
தற்கொலை தடுப்பு
Pixabay

ஆனால், தற்கொலைகளை 100 சதவிகிதம் தடுக்க முடியும். தற்கொலை எண்ணம் தோன்றுபவர்களுக்கு முறையான உளவியல் ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் வழங்குவதன் மூலம் உயிரிழப்பை நிச்சயம் தவிர்க்க முடியும்.

Vikatan

ஆண்டுதோறும் அக்டோபர் 10-ம் தேதி உலக மனநல தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மனநல தினத்துக்கான கருத்தாக்கமாக, 'தற்கொலையைத் தடுக்க இணைந்து பணியாற்றுவோம்!' (Working together to prevent suicide) என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Dr.Lakshmi Vijayakumar
Dr.Lakshmi Vijayakumar

தற்கொலை தடுப்பு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் உலக தற்கொலை தடுப்பு தினம் என்று ஒருநாளை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்காற்றியவரும், சிநேகா தற்கொலை தடுப்பு மையத்தின் நிறுவனருமான டாக்டர் லட்சுமி விஜயகுமாரைச் சந்தித்தோம்.

"இந்தியாவில் 2016-ம் ஆண்டு தரவுகளின்படி 2,30,000 பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர். இளைஞர்கள் மத்தியிலும் குடும்பப் பெண்கள் மத்தியிலும் தற்கொலைகள் அதிகமாக நிகழ்கின்றன. தற்கொலைகளைத் தடுப்பதற்கு முக்கியமான மூன்று நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். தற்கொலை எண்ணம் ஏற்படாமல் இருக்க மனதுக்கு நெருக்கமானவர்களிடமோ, உளவியல் ஆலோசகர்களிடமோ மனம்விட்டுப் பேச வேண்டும்.

stress
stress
Pixabay

மன அழுத்தத்துடனும் தற்கொலை எண்ணத்துடனும் ஒருவர் இருந்தால் அவருடன் இருப்பவர்கள் அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்குத் தேவையற்ற ஆலோசனைகள், அறிவுரைகள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மாறாக, 'நீ தனியாக இல்லை. உனக்காக எப்போதும் நான் இருக்கிறேன்' என்பன போன்ற நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளைப் பேசி, பிரியத்துடன் பழகினால் தற்கொலை எண்ணத்தைத் தவிர்க்க முடியும். இந்தியாவைப் பொறுத்தவரை, தேசிய தற்கொலை தடுப்பு உத்தி (Strategy) ஒன்றை மத்திய அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்" என்றார்.