Published:Updated:

ஃபைஸர், மார்டனா தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் செயல்படுமா? - ஆய்வு சொல்வதென்ன?

Pfizer-BioNTech COVID-19 vaccine
Pfizer-BioNTech COVID-19 vaccine ( AP Photo/Frank Augstein, Pool )

தற்போது பரவி வரும் வைரஸ் மிக அதிக அளவு உருமாற்றம் அடையாதபட்சத்தில் mRNA வகை தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வோருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி தேவைப்படாமல் போவதற்கு வாய்ப்புள்ளது.

கோவிட் தொற்றுக்கு தடுப்பூசியினால் உருவாகும் ஆன்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்புத் திறன் எத்தனை நாள்கள் நீடிக்கும் என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், அமெரிக்காவின் ஃபைஸர் மற்றும் மார்டனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பல ஆண்டுகளுக்கு அல்லது வாழ்நாளுக்கும் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடி நீடிக்கலாம் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Moderna COVID-19 vaccine
Moderna COVID-19 vaccine
AP Photo/Matt Slocum
மூன்றாம் அலை பீதியை வலுப்படுத்தியிருக்கும் டெல்டா ப்ளஸ் வைரஸ்; யாரையெல்லாம் தாக்கும்?

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில் 14 பேர் பங்கேற்றனர். அவர்களில் 8 பேர் கோவிட் தொற்றிலிருந்து மீண்டு ஃபைஸர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். மீதமுள்ளவர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களே. முதல் தடுப்பூசி போட்ட மூன்று, நான்கு, ஐந்து, ஏழு மற்றும் 15 வாரங்களில் இவர்களின் நிணநீர்க் கணுக்களிலிருந்து (Lymph Nodes) மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

அந்த ஆய்வின்படி, தடுப்பூசி போட்டுக்கொண்டதற்குப் பிறகு நிணநீர்க்கணுக்களில் `Germinal centre' என்ற ஒரு குறிப்பிட்ட அமைப்பு (structure) உருவாகிறது. இந்த அமைப்பு செல்களில் கொரோனா வைரஸை நினைவு வைத்துக்கொள்ளும் திறனை உருவாக்குகிறது.

corona vaccine second dose
corona vaccine second dose

இந்த ஆய்வில் பங்கேற்ற 14 பேரையும் பரிசோதித்ததில் அனைவருக்கும் `Germinal Centre' என்ற அமைப்பு தொடர்ந்து அதி தீவிரமாகச் செயலாற்றுகிறது என்றும் கொரோனா வைரஸை அடையாளம் கண்டறியும் மெமரி செல்களின் எண்ணிக்கையும் குறையவே இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் mRNA வகை தடுப்பூசியான ஃபைஸர் மற்றும் மார்டனா ஆகியவற்றைப் போட்டுக்கொண்டவர்களுக்கு, சில ஆண்டுகளுக்கு அல்லது வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்புத் திறன் நீடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிப் பேசியுள்ள ஆய்வுக் குழுவின் தலைவர் ஆலி எல்லிபெடி, நமது உடலில் நோய் எதிர்ப்புத் திறன் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதற்கு நல்ல அறிகுறி தென்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

Moderna COVID-19 vaccine
Moderna COVID-19 vaccine
AP Photo/Steven Senne
நீலகிரி: பழங்குடிகளுக்கு 100% தடுப்பூசி; இலக்கை எட்டிய முதல் மாவட்டம்!

தற்போது பரவி வரும் வைரஸ் மிக அதிக அளவு உருமாற்றம் அடையாதபட்சத்தில் mRNA வகை தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வோருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி தேவைப்படாமல் போவதற்கு வாய்ப்புள்ளது. எனினும் வைரஸ் உருமாற்றத்தைப் பற்றி உறுதியாகக் கணிக்க முடியாது. கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு மீண்டு, அதற்குப் பிறகு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு வைரஸ் அதிக அளவு உருமாற்றம் அடைந்தால்கூட இரண்டாம் தவணை தேவைப்படாமல் போகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இவர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி தேவையில்லை என்பதை அறுதியிட்டுக்கூறவில்லை.

அடுத்த கட்டுரைக்கு