Published:Updated:

நிமோனியா தொற்று: நினைவில் கொள்ள வேண்டியவை!

கோவிட் நிமோனியா

நிமோனியா பாதிப்பு தீவிரமாகும்போது, ஆக்ஸிஜன், ரத்த அழுத்தம் ஆகியவை குறைந்து நுரையீரல் செயல்படாமல் நின்று விடும். இதனால் வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படும்நிலை ஏற்பட்டுவிடும். சில நேரம் உயிரிழப்பு கூட ஏற்படலாம்.

நிமோனியா தொற்று: நினைவில் கொள்ள வேண்டியவை!

நிமோனியா பாதிப்பு தீவிரமாகும்போது, ஆக்ஸிஜன், ரத்த அழுத்தம் ஆகியவை குறைந்து நுரையீரல் செயல்படாமல் நின்று விடும். இதனால் வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படும்நிலை ஏற்பட்டுவிடும். சில நேரம் உயிரிழப்பு கூட ஏற்படலாம்.

Published:Updated:
கோவிட் நிமோனியா

நிமோனியா என்பது பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றால் நுரையீரலில் ஏற்படும் நோய். கடந்த 2019-ம் ஆண்டு மட்டும், உலகம் முழுவதும் 25,00,000 பேர் நிமோனியா நோயால் உயிரிழந்துள்ளனர். நிமோனியா என்ற நோய் பல வருடங்களாக உலகை அச்சுறுத்திக்கொண்டேதான் இருக்கிறது.ஆனால் பொதுமக்களுக்கு இதை பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.

நிமோனியா
நிமோனியா
The Quint

கடந்த நவம்பர் 12-ம் தேதி  `உலக நிமோனியா தினம்' கடைப்பிடிக்கப்பட்டது. இந்த வருடம் மக்களிடம் நிமோனியாவை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த `Pneumolight - 2022’ என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் பிரசாரத்தின் முழக்கம், நிமோனியா அனைவரையும் பாதிக்கிறது என்பதாகும்.

கோவிட்-19 நிமோனியா தொற்று காரணமாக உலகளவில் 66 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 66.1 லட்சம் பேர் இறந்துள்ளனர். கோவிட்-19 வைரஸால் உலகம் முழுவதுமே முடங்கியது. 2019-ம் ஆண்டு தொடங்கிய கொரோனா பரவல் இன்னும் முழுவதுமாக முடிந்தபாடில்லை. இன்னமும் நாம் கொரோனா பரவல் செய்திகளைக் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும்தான் இருக்கிறோம். இது குறித்த விழிப்புணர்வுக்கு, நிமோனியா(Pneumonia) பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம்.

ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலா
ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலா
காவேரி மருத்துவமனை

நிமோனியாவை பற்றி காவேரி மருத்துவமனையின் மூத்த நுரையீரல் மருத்துவர் ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலா விளக்குகிறார்.

``நிமோனியா என்பது நுரையீரலை பாதிக்கும் தொற்று. குறிப்பாக காற்றில் இருந்து ஆக்ஸிஜனை பிரித்து எடுக்கும் alveoli என்னும் பகுதியில் ஏற்படும் பாதிப்பு. பொதுவாக நிமோனியா எந்தவித கிருமித்தொற்றினாலும் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. நிமோனியாவை ஏற்படுத்தும் பரவலான கிருமிகளில் ஒன்றாக தற்போது கோவிட் வைரஸும் இணைந்துள்ளது. உலகம் முழுவதும், கோவிட்-19 வைரசை தவிர, Pneumococcus, Hemophilus influenzae போன்ற பாக்டீரியாக்களாலும், Influenza A மற்றும் B போன்ற வைரஸ்களாலும் நிமோனியா ஏற்படுகிறது.

இந்த ஏஜெண்டுக்கள் மற்றும் கோவிட் வைரஸால் நுரையீரலில் ஏற்படும் தொற்றை `நிமோனியா' என்று கூறுகிறோம். இந்த தொற்று நுரையீரலை நேரடியாக பாதிக்கும்.

நிமோனியா தொற்று: நினைவில் கொள்ள வேண்டியவை!

முதியோர்கள், இதய நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், புற்றுநோயாளிகள் ஆகியோருக்கு பொதுவாகவே நோய் எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால், இந்த வைரஸ் அவர்களை எளிதாகத் தாக்கும். முதல் மற்றும் இரண்டாம் கொரோனா அலைகளின்போது, பொதுவாக யாருக்கும் கொரோனா வைரஸை எதிர்க்கும் சக்தி இல்லாததால், பெரும்பாலும் அனைவருக்கும் கொரோனா தொற்று பரவியது.

இப்படி தொற்று நுரையீரலை தாக்கும்போது, நுரையீரல் பாதிப்படைகிறது. எளிதாகக் கூறவேண்டுமானால், நுரையீரல் என்பது காற்று இருக்கும் பை. நிமோனியா பாதிக்கும்போது இந்தப் பையில் காற்றுக்கு பதிலாக சீழ் சேர்ந்துவிடுகிறது. இப்படி நுரையீரலின் தன்மையே பாதிக்கப்படுவதால், நுரையீரலால் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்ற முடியாமல் போய்விடுகிறது.

நுரையீரல்
நுரையீரல்

இருமல், சளி, காய்ச்சல் ஆகியவை நிமோனியா தொற்றின் அறிகுறிகள். நிமோனியா பாதிப்பு தீவிரமாகும்போது, ஆக்ஸிஜன், ரத்த அழுத்தம் ஆகியவை குறைந்து நுரையீரல் செயல்படாமல் நின்று விடும். இதனால் தீவிர நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படும் நிலை ஏற்படும். சில நேரம் உயிரிழப்பு கூட ஏற்படலாம். இருமல், மார்பு வலி ஆகியவை நிமோனியாவின் அறிகுறியாக இருக்கலாம். நிமோனியாவை நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் முழுமையாக குணப்படுத்த முடியும். அதனால், உங்கள் அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!

நிமோனியா தொற்றுநோய்தான் என்பதை நினைவில் கொள்வது மிகமிக அவசியம். இது பரவாமல் தடுப்பதற்கு மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி காப்பது, கை கழுவுவது, தனிமைப்படுத்திக் கொள்வது, தடுப்பூசி போட்டுக்கொள்வது ஆகியவற்றை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும்.

நிமோனியா தொற்று: நினைவில் கொள்ள வேண்டியவை!

குழந்தைகள், முதியோர் மற்றும் நிமோனியாவால் எளிதாக பாதிக்கக்கூடியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் நோயில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டம், நிமோனியா நோயில் இருந்து குழந்தைகளை காக்க Pneumococcal (Prevenar-13) மற்றும் H. influenzae ஆகிய தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு செலுத்த பரிந்துரைக்கிறது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 65 வயதுக்குக் கீழுள்ள இதயம்-நுரையீரல் சம்பந்தமான நோய் உள்ளவர்கள், Pneumococcal (Prevenar-13/Pneumovax-23) மற்றும் ஃப்ளு தடுப்பூசிகளை கட்டாயமாக போட்டுக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் தன்னை உருமாற்றிக்கொள்ளும் தன்மை உடையது. உலக சுகாதார அமைப்பு ஒவ்வோர் ஆண்டு மே மற்றும் அக்டோபர் மாதம் செலுத்திக்கொள்ள, 4 வகையான இன்ஃப்ளூயன்சா வைரஸின் ஸ்ட்ரைன்களை கலந்து முறையே தடுப்பூசியை பரிந்துரைக்கிறது. உலகின் தெற்கு அரை கோளத்தில் இருக்கும் மக்களுக்கு மே மாதத்தில், வடக்கு அரை கோளத்தில் இருக்கும் மக்களும் அக்டோபர் மாதத்தில் இந்த பரிந்துரைகள் செய்யப்படுகின்றன.

தடுப்பூசி
தடுப்பூசி
The Economic Times

இதன்படி இந்தியா, உலக சுகாதார அமைப்பு தெற்கு அரைக்கோளத்திற்கு பரிந்துரைத்திருக்கும் தடுப்பூசிகளை பின்பற்றி வருகிறது. ஆனால், இதில் உள்ள சிக்கலே இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை வாழும் மக்கள் அனைவரும் ஒவ்வொரு பகுதிக்கேற்ப மாறுபட்டவர்கள் என்பதே. அதனால், உங்களுக்குகேற்ற சரியான தடுப்பூசிகளை உங்கள் நுரையீரல் நிபுணர் பரிந்துரைப்பார். அதற்கேற்ப கண்டிப்பாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். '' என்கிறார் டாக்டர் ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலா.

வருமுன் காப்போம்!