Published:Updated:

கொரோனா வரும் முன் போர்ட்டபுள் வாஷ் பேஸின்கள்... `சபாஷ்' ருவாண்டா

கொரோனா வரும் முன் போர்ட்டபுள் வாஷ் பேஸின்கள்
கொரோனா வரும் முன் போர்ட்டபுள் வாஷ் பேஸின்கள்

வரும் முன் காப்போம் எனும் நோக்கில் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள்.

நைஜீரியா, செனகல், கேமரூன், டோகோ, புர்கினா பாசோ மற்றும் காங்கோ ஆகிய ஆப்பிரிக்க நாடுகள் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. ஐவரி கோஸ்ட் கடந்த புதன்கிழமை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தனது முதல் பதிவை உறுதிப்படுத்தியது.

கொரோனா
கொரோனா

தென் ஆப்பிரிக்காவின் சப்-சஹாரன் ஆப்பிரிக்காவில் (Sub-Saharan Africa) கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை எனப் பதிவு கூறுகிறது. ஆனாலும், வரும் முன் காப்போம் எனும் நோக்கில் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள்.

Wash basin at Rwanda
Wash basin at Rwanda

ருவாண்டாவில் (Rwanda) எளிதில் நகர்த்திச் செல்லும் வகையில் வாஷ் பேஸின்கள் மக்கள் அதிகம் புழங்கும் இடங்களான ரெஸ்ட்டாரன்ட்கள், வங்கிகள், பஸ் ஸ்டாப்புகள், பார்கள், கடைகளில் அமைக்கப்பட்டுள்ளன.

ருவாண்டாவின் தலைநகரான கிகாலியில், பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளில் ஏறுவதற்கு முன்பு மக்கள் அனைவரும் கட்டாயம் கை கழுவ வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள், அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Portable wash basins
Portable wash basins
`1 கிலோ கோழி ரூ.10 ; உயிருடன் புதைக்கப்பட்ட 6000 கோழிகள்!’ -வியாபாரிகளை உறையவைத்த கொரோனா வதந்தி

வரும் முன் காக்கும் விதமாக ருவாண்டா முதல் பல கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை.

அடுத்த கட்டுரைக்கு