Published:Updated:

கண் அழுத்தநோய்... அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சைகள்!

இந்தப் பாதிப்புக்குப் பிறகும் சிகிச்சை எடுக்கவில்லை என்றால் கண் பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டாகலாம்.

கண் அழுத்தநோயான கிளாக்கோமா(Glaucoma)வால் பலர் பாதிக்கப்பட்டும், சிலர் பார்வையை இழந்தும் வருகிறார்கள். இந்நோயைப் பற்றிய தகவல்கள்யும் அதிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான வழிகள், சிகிச்சைகள் மற்றும் தீர்வுகள் பற்றியும் விளக்குகிறார் கண் மருத்துவர் சுபா ரகுராமன்

கண்
கண்

கிளாக்கோமா... ஒரு விளக்கம்!

கண்களில் உள்ள பார்வை நரம்புகளில் ஏற்படும் பாதிப்பே கிளாக்கோமா. பொதுவாக, ஆக்குவஸ் ஹூயுமர்( Aqueous humour) என்ற தெளிவான திரவமானது கண்ணின் முன்பகுதிக்குள் சுற்றி வரும். இந்தத் திரவம் அளவில் அதிகமாக உற்பத்தியானாலோ அல்லது முறையாக இது வெளியேறாமல் இருந்தாலோ கண்களில் அழுத்தம் அதிகரிக்கும். இதனால் பார்வை நரம்புகள் பாதிப்படையும். கிளாக்கோமா பிரச்னை ஏற்படும்.

அறிகுறிகள்

* கண் பார்வையில் தொடர்ந்து மாற்றம் ஏற்படுவதால் அடிக்கடி கண்ணாடி மாற்றுதல்.

* காட்சிக் களத்தில் (visual field) ஏற்படும் குறைபாடுகளால் நடக்கும்போது பக்கவாட்டில் இடித்துக்கொள்ளுதல், வாகனம் ஓட்டும்போது பக்கவாட்டுப் பார்வை தெரியாமல் இருத்தல்.

கண் மருத்துவர் சுபா ரகுராமன்
கண் மருத்துவர் சுபா ரகுராமன்

* வண்ண ஒளி வட்டங்கள் தெரிதல்.

* இத்தகைய அறிகுறிகளைத் தொடர்ந்து, குழலின் வழியாகப் பார்ப்பதுபோல் (Tubular Vision) பார்வை இருக்கும். இந்தப் பாதிப்புக்குப் பிறகும் சிகிச்சை எடுக்கவில்லை என்றால் கண் பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டாகலாம்.

"தட்டம்மை தடுப்பூசி... வதந்திகளை நம்பாமல் குழந்தைகளுக்குத் தவறாமல் போடுங்கள்!"- மருத்துவர் அறிவுறுத்தல்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிளாக்கோமாவில் ஆரம்பநிலையில் அறிகுறிகள் சிலருக்குத் தென்படாமலோ அவற்றை கவனிக்காமலோ போகலாம். எனவே, 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் வருடம் ஒரு முறையும் 50 வயதைத் தாண்டியவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையும் கண்ணில் கோளாறு இருப்பவர்கள் நான்கு மாதங்களுக்கு ஒரு முறையும் கண் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இதனால் நோயை ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடித்துவிடலாம். கிளாக்கோமாவை ஆரம்ப நிலையில் கண்டறிய அதிநவீனக் கருவிகள் தற்போது உள்ளன.

கண் பரிசோதனை
கண் பரிசோதனை

கண் அழுத்தம் எவ்வளவு இருக்க வேண்டும்?

* 10 முதல் 21mm Hg வரை சராசரியாக கண் அழுத்தம் இருக்கலாம். 21mm Hg-க்கு மேல் சென்றால், கிளாக்கோமா உள்ளதா என்று அறியும் பரிசோதனையை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

யாருக்கெல்லாம் கிளாக்கோமா வாய்ப்பு அதிகம்?

* 50 வயதிற்கு மேற்பட்டவர்கள்

* கிளாக்கோமாவால் பாதிக்கப்பட்ட குடும்பப் பின்னணி கொண்டவர்கள்

* கண் அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள்

* ரத்த ஓட்டத்தைப் பாதிக்கக்கூடிய நோய்களான ஒற்றைத் தலைவலி, சர்க்கரைநோய், குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள்

* புகை பிடிப்பவர்கள்

கண் அழுத்தம்
கண் அழுத்தம்

* கிட்டப்பார்வை உள்ளவர்கள்

* ஸ்டீராய்டு சொட்டு மருந்தை அதிக நாள்கள் பயன்படுத்திவருபவர்கள்

இவர்களுக்கெல்லாம் கிளாக்கோமா ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

கிளாக்கோமாவால் பச்சிளங் குழந்தைகளும் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. ஆனால் இது மிக அரிதாகவே நடக்கும்.

``8 மணிநேரத்திற்கு ஒருமுறை மாஸ்க்கை மாற்ற வேண்டும்!" - விளக்கங்களும் வழிகாட்டுதலும் #Video

கிளாக்கோமா சிகிச்சை!

கண்களில் ஆக்குவஸ் ஹூயுமர் திரவம் உற்பத்தியைக் குறைப்பது அல்லது அதன் வெளியேற்றத்தை அதிகரிப்பதன் மூலம் கண் அழுத்தத்தைக் குறைக்கமுடியும். அதற்கு, பிரத்யேக கிளாக்கோமா கண் சொட்டு மருந்துகள் சிறந்த சிகிச்சை. கண் மருத்துவரின் அறிவுரையின்படி தினமும் சொட்டு மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வர வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்தின் பயன்பாட்டை நிறுத்தவோ அல்லது மருந்தின் அளவைக் கூட்டுவதோ, குறைப்பதோ நிச்சயமாகக் கூடாது.

சிகிச்சை
சிகிச்சை

பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து மருத்துவர் அடுத்தகட்டமாகத் தேவைப்பட்டால் லேசர் சிகிச்சையையோ அறுவை சிகிச்சையையோ பரிந்துரைப்பார்.

சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஆனால் முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்பதைப்போலத்தான் கிளாக்கோமாவையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். தொடர் பரிசோதனைகள், சிகிச்சைகள் மூலம் கிளாக்கோமாவைக் கட்டுக்குள் வைத்து பார்வையைப் பாதுகாப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு