Published:Updated:

`ஏன் ஊசி போட்டுக்கொள்ள நாம் பயப்படுகிறோம்?' - உளவியல் பின்னணி விளக்கும் மருத்துவர்

A doctor prepares to administer vaccine
News
A doctor prepares to administer vaccine ( AP Photo/Rafiq Maqbool )

ஊசி குறித்த அதீத பயத்தை `ட்ரைபநோபோபியா' (Trypanophobia) என்று சொல்கிறார்கள். ஊசி மீதான பயம் ஒருவருக்கு எதனால் ஏற்படுகிறது, அதிலிருந்து மீள்வது எப்படி?

சிறுவயதில் ஊசி குறித்த பயம் எல்லோருக்கும் இருக்கும். மருத்துவர் சிரிஞ்சில் மருந்தை ஏற்றும்போதே, மருத்துவமனையிலிருந்து தலைதெறிக்க ஓடுபவர்கள் பலர். இதே பயம் பெரியவர்கள் ஆன பிறகும்கூட சிலருக்கு இருக்கும். மற்ற எல்லாவற்றையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் சிலரால் ஊசி மீதான பயத்திலிருந்து மீண்டுவரமுடியாது. கொரோனா தடுப்பூசி போடும் மையங்களில் சிலருக்கு மயக்கம் வந்தது, தலைச்சுற்றல் ஏற்பட்டது என சமீபத்தில் நடந்த பல சம்பவங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

ஊசி குறித்த அதீத பயத்தை `ட்ரைபநோபோபியா' (Trypanophobia) என்று சொல்கிறார்கள். ஊசி மீதான பயம் ஒருவருக்கு எதனால் ஏற்படுகிறது, அதிலிருந்து மீள்வது எப்படி என்பது போன்ற சந்தேகங்களுக்கு மனநல மருத்துவர் சிவபாலன் பகிரும் தகவல்கள்.

Moderna COVID-19 vaccine
Moderna COVID-19 vaccine
AP Photo/Steven Senne

``பயம், போபியா இரண்டுக்குமான வித்தியாசத்தை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். பயம் என்பது ஒன்றை எதிர் கொள்வதில் உள்ள தயக்கம். தயக்கம் காரணமாக ஏற்படும் பதற்றத்தை, பயம் என்று சொல்லலாம். ஒரு சூழலைப் பார்த்து ஒருவருக்கு பயம் உள்ளது எனில், அதே சூழலை மீண்டும் மீண்டும் எதிர்கொள்ளும்போது அந்த பயம் தானே குறையும். சில மாதங்களிலேயே பயம் காணாமல் போகும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

போபியா என்பது பயம் காரணமாக ஒரு குறிப்பிட்ட சூழலை எதிர்கொள்ளவே முடியாத நிலை. திரும்பத் திரும்ப அந்தச் சூழலை அவர்கள் எதிர்கொள்ளும்போது அவர்களுக்கு அந்தச் சூழல் மீதும், அந்தப் பொருளின் மீதும் பயம் இன்னும் அதிகமாகும். மேலும் கவலை, தலைச்சுற்றல், தூக்கமின்மை, குமட்டல், இதயத் துடிப்பு அதிகமாதல், மூச்சிரைப்பு, வியர்த்தல், நடுக்கம் போன்ற உடல் ரீதியான பாதிப்புகளும் ஏற்படும்.

A health worker administers the vaccine
A health worker administers the vaccine
AP Photo / Mahesh Kumar A

உதாரணமாக, சிலருக்குத் தேர்வு மீது அதிக பயம் இருக்கும். தேர்வறைக்குள் நுழையும்போது வியர்த்துக் கொட்டும். ஆனால், அந்தச் சூழலை அவர்கள் எதிர்கொண்டு தேர்வு எழுதிவிடுவார்கள். இதை பயம் என்று சொல்லலாம். போபியா இருப்பவர்களுக்கு தேர்வறைக்குள் செல்லும்போதே மயக்கம், படபடப்பு ஏற்பட்டு அந்தச் சூழலையே எதிர்கொள்ள இயலாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிலருக்கு நாய்களைப் பார்த்தால், சிலருக்கு உயரத்தைப் பார்த்தால் என ஒருவருக்கு ஏற்படும் போபியா வெவ்வேறு காரணங்களுடனும், அறிகுறிகளுடனும் இருக்கலாம். இது போன்று ஊசியைப் பார்த்து ஒருவருக்கும் வரும், பயம், பதற்றம், மூச்சிரைப்பு போன்றவற்றைத்தான் `ட்ரைபநோபோபியா' என்று குறிப்பிடுகிறார்கள்.

A woman receives the  vaccine
A woman receives the vaccine
AP Photo / Aijaz Rahi

கடந்த காலத்தில் ஏற்பட்ட எதிர்மறையான அனுபவம், பெற்றோர் அல்லது நண்பர்களால் ஊசி பற்றி சிறு வயதில் ஏற்படுத்தப்பட்ட தாக்கம், நரம்புக் கோளாறுகள், அட்ரீனல் சுரப்புக் குறைபாடுகள், ஊசி பற்றி தவறான செய்திகளை வாசித்தது, கேட்டது என ஊசி பற்றிய எதிர்மறையான எண்ணங்கள்தான் `ட்ரைபநோபோபியா' ஏற்பட முக்கியமான காரணம்.

கொரோனா தடுப்பூசி போட வந்தவர்கள் நிறைய பேர் மயங்கி விழுந்ததாகத் தகவல்கள் வெளியாகின. மயங்கி விழுந்தவர்கள் அனைவருக்கும் போபியா இருக்கும் என்று சொல்லி விட முடியாது. கொரோனா தடுப்பூசி குறித்து ஆரம்பத்தில் வெளியாகிய சில தவறான செய்திகள் கூட நிறைய பேரின் மனதில் அதீத பயத்தை  ஏற்படுத்தியிருக்கலாம். அதனால் ரத்த அழுத்தம் அதிகமாகி மயக்கம் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பார்கள். உங்களுக்கு இருப்பது பயமா அல்லது போபியாவா என்பதை முதலில் கண்டறியுங்கள். 

 vaccine
vaccine
AP Photo / Manish Swarup

பயம், போபியா, இரண்டுமே குணப்படுத்தக்கூடியவைதான். பயம் என்பதை மனதைரியத்தை ஏற்படுத்துவதன் மூலம், அந்தத் தனிப்பட்ட நபரே சரிசெய்துகொள்ள முடியும். போபியா இருப்பது உறுதியானால் எத்தனை முறை ஒரு சூழலை எவ்வளவு மன தைரியத்துடன் எதிர் கொண்டாலும் மருத்துவரின் உதவியில்லாமல் அதிலிருந்து மீள முடியாது. போபியா இருப்பவர்கள் எந்தத் தயக்கமும் இன்றி மனநல மருத்துவரைச் சந்திக்கலாம். உங்களுக்கு இருக்கும் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து ஆலோசனை, மருந்துகள், தெரபிகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். போபியா இருப்பவர்கள் வாழ்க்கை முழுவதும் பயத்துடன் சிரமப்பட வேண்டும் என்ற அவசியமில்லை. தனக்கு இருக்கும் பிரச்னையைப் புரிந்து கொண்டு மருத்துவரை அணுகினால் சரி செய்து விட இயலும்."