Published:Updated:

கொரோனா குவாரன்டைனில் இருப்பவர்களுக்குக் கையில் ஸ்டாம்ப்... மகாராஷ்டிரா அரசின் முயற்சி!

கொரோனா தனிமைப்படுத்துதலில் இருப்பவர்களுக்கு ஸ்டாம்ப்
கொரோனா தனிமைப்படுத்துதலில் இருப்பவர்களுக்கு ஸ்டாம்ப்

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த 13,19,363 இந்தியர்கள் விமான நிலையங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. இதில் 2,221 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள தனிமைப்படுத்துதலை உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்துதலின் பேரில் அனைத்து நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கியது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சில இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Screening
Screening

கொரோனா வைரஸின் அறிகுறிகள் இருப்போர் பெரும்பாலும் தங்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுகின்றனர். அவ்வாறு தனிமைப்படுத்தப்படுவோர் அரசு வழங்கும் அறிவுரையின்படி நடந்துகொள்ளாமல் பொது இடங்களுக்குத் தங்களது அன்றாடத் தேவைகளுக்காகச் சென்று வருகின்றனர். இதனால் தனிமைப்படுத்துதலின் நோக்கமே தோல்வியடைவதுடன், தொற்றுப் பரவலும் கட்டுப்பாட்டை இழக்க வாய்ப்புண்டாகிறது.

இந்த நிலையில், இதைக் கட்டுப்படுத்த பிரஹன் மும்பை மாநகராட்சி நிர்வாகம், முன்னோடி நடவடிக்கையாக வீட்டுத் தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களுக்கு இடது கையின் பின்புறத்தில் நீல மையால் ஆன முத்திரையைப் பதிக்கத் தொடங்கியுள்ளது. அந்த முத்திரையில், `மும்பை மக்களை பாதுகாப்பதில் பெருமை’ என்ற வாக்கியம் எழுதப்பட்டிருக்கிறது. மேலும், வீட்டுத் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் சம்பந்தப்பட்ட அந்த நபர், எந்தத் தேதிவரை அதைப் பின்பற்ற வேண்டும் என்பதும் குறிக்கப்பட்டிருக்கிறது. இந்த முத்திரை மை, தேர்தல் காலங்களில் வாக்காளர்களின் விரலில் அடையாளம் வைக்கப் பயன்படுத்தப்படும் மை என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தனிமைப்படுத்துதலில் இருப்பவர்களுக்கு ஸ்டாம்ப்
கொரோனா தனிமைப்படுத்துதலில் இருப்பவர்களுக்கு ஸ்டாம்ப்

மும்பையில் கடந்த 15-ம் தேதிவரை வெளிநாடுகளிலிருந்து வந்த 528 பேருக்கு 14 நாள்களுக்கு வீட்டுத் தனிமைப்படுத்துதலை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இவர்கள் அனைவருக்கும் கொரோனா அறிகுறிகள் இல்லை என்றாலும்கூட, சுகாதாரப் பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள முதல்வர் உத்தவ் தாக்ரே, அந்த நபர்களுக்குக் கொரோனா அறிகுறிகள் இல்லை என்றாலும்கூட, அவர்களிடையே பொறுப்புணர்வை ஏற்படுத்த இவ்வாறு செய்யப்படுவதாகக் கூறினார்.

மேலும், இந்த நடவடிக்கை குறித்துப் பேசிய மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப், வீட்டுத் தனிமைப்படுத்துதலில் இருக்கும் நபர்கள் வெளியே சென்றால், `இவர்கள் தனிமைப்படுத்துதலுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பவர்கள்' எனப் பிறர் அடையாளம் காணும் வகையில், கைகளில் முத்திரையிடப்படுவதாகத் தெரிவித்தார்.

Airport safety measures
Airport safety measures
காய்ச்சல், இருமல், தொண்டை கரகரப்பு இல்லை... ஆனாலும் கொரோனா அலர்ட்! FightCovid-19

இந்த நிலையில், வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த 13,19,363 இந்தியர்கள் விமான நிலையங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. இதில் 2,221 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு