Published:Updated:

டீன் ஏஜ் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து விலகுவது ஏன்? #LifeStartsAt40 #நலம்நாற்பது

டீன் ஏஜ் ( Pixabay )

அரவணைப்பிலிருந்து விலகும் டீன் ஏஜ் பிள்ளைகளை கையாள்வது எப்படி?

டீன் ஏஜ் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து விலகுவது ஏன்? #LifeStartsAt40 #நலம்நாற்பது

அரவணைப்பிலிருந்து விலகும் டீன் ஏஜ் பிள்ளைகளை கையாள்வது எப்படி?

Published:Updated:
டீன் ஏஜ் ( Pixabay )

அலுவலகத்தில் உடன் பணிபுரியும் அந்த அக்கா கடந்த சில மாதங்களாகவே கொஞ்சம் வாடிய முகத்துடன் காணப்பட்டார். அன்றையதினம் அவரது முகத்தில் மேலும் சோகம் அப்பியிருந்தது.

டீன் ஏஜ்
டீன் ஏஜ்
Pixabay

மதிய உணவு இடைவேளையின்போது, பேச்சோடு பேச்சாக 'அக்கா, உங்களுக்கு என்னதான் பிரச்னை? நானும் உங்களை கவனிச்சிட்டுதான் இருக்கேன். கொஞ்ச நாளாவே ரொம்ப சோகமா இருக்கீங்க? வீட்டுக்காரர் ஏதும் சொல்லிட்டாரா?' என்று கொஞ்சம் உரிமையுடன் கேட்டேன். 'வீட்டுக்காரர்கிட்ட எதுவும் பிரச்னை இல்லம்மா. என் பொண்ண பத்திதான் ரொம்ப கவலையா இருக்கு. அடுத்த மாசத்தோட அவளுக்கு பதினைஞ்சு வயசு முடியப்போகுது. கொஞ்சம்கூட அவளுக்கு பொறுப்புங்கிறதே இல்ல. ஆறு மாசமா, அவளை தொடர்ச்சியா கவனிச்சிட்டிருக்கேன். ஃப்ரெண்ட்ஸ்கிட்டதான் ரொம்ப நெருக்கமா இருக்கா. ஆனா எங்கக்கிட்ட பேச மாட்டேங்குறா. நான் பேசலாம்னு அவக்கிட்ட போனா, அவாய்ட் பண்றா. என்ன பிரச்னைனு தெரியல. இந்த காலத்துப் பிள்ளைங்க கொஞ்சம் வளர்ந்ததும் பெத்தவங்களை விட்டு தூரமா போயிடுதுங்க' என்று ஒரே மூச்சில் வருத்தத்தைக் கொட்டினார்.

"இந்த காலத்துப் பிள்ளைங்க கொஞ்சம் வளர்ந்ததும் பெத்தவங்களை விட்டு தூரமா போயிடுதுங்க..."

இவர் மட்டுமல்ல... டீன் ஏஜ் வயதையொட்டிய பிள்ளைகளைக் கொண்ட பெற்றோர் பலருக்கும் இதுபோன்ற பதற்றம் இருப்பதை புரிந்து கொள்ளமுடிகிறது.

'வர வர, சொல் பேச்சு கேட்க மாட்டேங்கறான் என் பையன்...'

'என்னமோ தெரியல. என் பிள்ளை அதிகமா தனிமையைத்தான் விரும்புறான். வீட்டோட கொஞ்சங்கூட ஒட்ட மாட்டேங்குறான். இவனை வெச்சுக்கிட்டு ரொம்ப கஷ்டமா இருக்கு...'

'என் புள்ள எப்பப் பாத்தாலும், செல்ஃபோன், கம்ப்யூட்டர்னுதான் இருக்கான். எங்களை யாரையும் மதிக்கிறதே இல்ல...'

டீன் ஏஜ் குழந்தைகள், அவர்களுக்கான தனித்துவத்துவத்தை பெறத் தொடங்குகிறார்கள் என்பதுதான் உண்மை!
குழந்தைகள் மனநல மருத்துவர்

'எதை செய்யாதேனு சொல்றேனோ, அதைத்தான் சரியா செய்றான் என் புள்ள...'

'என் பிள்ளைக்கு ஒழுக்கம்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியல... நேரங்கெட்ட நேரத்துல எழுந்திருக்கான், வீட்டுல அதிகம் சாப்பிடுறதில்ல...' என்பதுபோன்ற வசனங்கள்...

வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு சற்று நகைச்சுவையாகத் தெரியலாம். ஆனால், டீன் ஏஜ் குழந்தைகளைக் கொண்ட பெற்றோரின் மனதில், 'பிள்ளை தன் சொல் பேச்சு கேட்பதில்லை. தன்னைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறான்' என்ற எண்ணம் மேலோங்கியிருக்கும். உண்மையில், டீன் ஏஜ் பிள்ளைகள் தங்களது பெற்றோரை விட்டு விலகிச் செல்கிறார்களா?

உண்மையில், டீன் ஏஜ் பிள்ளைகள் தங்களது பெற்றோரை விட்டு விலகிச் செல்கிறார்களா?

"பிள்ளைகள் யாரும் பெற்றோரிடமிருந்து விலகிச் செல்வதில்லை. ஒன்று, பெற்றோர் தங்களது வார்த்தை மற்றும் செயல் வன்முறைகளால் பிள்ளைகளை விலக வைக்கின்றனர் அல்லது இல்லாத விரிசலை இருக்கிறதென்று புரிந்து கொள்கின்றனர்" என்கிறார் குழந்தைகள் மனநல மருத்துவர் பூங்கொடி பாலா.

டீன் ஏஜ்
டீன் ஏஜ்
Pixabay

இதுபற்றி தொடர்ந்து விரிவாகப் பேசுகிறார் அவர்.

"பிள்ளைகள் டீன் ஏஜை நெருங்குகின்றனர் என்பதைக் கண்டு பல பெற்றோர் பயப்படுகின்றனர். என்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு அம்மா, 'பத்து வயசுதான் ஆகுது... இப்பவே எங்களோட சொல்பேச்சை இவன் கேட்கிறதில்ல. வயசு ஏற ஏற, அவனோட கோபமும், பிடிவாதமும் ஜாஸ்தியாகிட்டே இருக்குது. வளர வளர பசங்களோட நடவடிக்கைல மாற்றம் வரும்னு வேற சொல்றாங்க. இப்பவே இப்படின்னா, டீன் ஏஜ் ஆனதும் இவன் எப்படி நடந்துக்குவான்னு தெரியல' என்றார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் குழந்தைகள், உங்களிடமிருந்து விலகுவதில்லை பெற்றோர்களே! அவர்கள் தனித்துவம் பெறத் தொடங்குகிறார்கள், அவ்வளவுதான்.

"டீன்ஏஜ் பிள்ளைகளை எப்போதும் கிண்டல் செய்யாதீர்கள்!"

குழந்தைகளின் வளரிளம் பருவத்தில்தான் அவர்களது உடலும், மூளையும் வளர்ச்சியடைகிறது. பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் வருவதையும், ஆண் குழந்தைகளுக்கு குரலில் ஏற்படும் மாற்றத்தையும் எப்படி பெற்றோர் ஏற்றுக்கொள்கிறார்களோ, அதேபோல மூளை வளர்ச்சி ஏற்படுத்தும் மாற்றங்களையும் நாம் ஏற்கவேண்டும். மூளை வளர்ச்சி அடையும்போது, 'எல்லாவற்றையும் சுயமாக செய்துகொள்ள வேண்டும்' என்ற எண்ணம் அதிகமாக இருக்கும். மேலும் உணர்ச்சி வெளிப்பாடுகள் அதிகமாக இருக்கும். அதனால்தான் டீன்ஏஜ் குழந்தைகள், எந்தவொரு முடிவையும் உணர்ச்சிப் பூர்வமாக மட்டுமே அணுகுகின்றனர்.

உணர்ச்சி வேகத்தில் இவர்கள் எடுக்கும் முடிவுகள் யாவும், பெரும்பாலான நேரங்களில் சரியாக இருக்காது. ஆனாலும் தங்களது உணர்ச்சி வேகம் சரிதான் என்று அவர்கள் வாதாடுவார்கள். ஒருவேளை அவர்கள் ஒப்புக்கொண்டாலும், அதை தங்களின் அதீத முயற்சிக்குக் கிடைத்த தோல்வியாகவே பார்ப்பார்கள். அதுநாள்வரை தோல்வியைச் சந்திக்கும் மனநிலைக்கு அவர்களைப் பழக்கியிருந்தால் மட்டுமே, இந்தத் தோல்வியை ஏற்றுக்கொள்வர். இல்லையென்றால் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் கத்துவது, அடிப்பது, பொருள்களைத் தூக்கி எறிவது போன்ற செயல்களில் ஈடுபடுவர்.

இவர்களை அமைதியாக்குவது கொஞ்சம் சவாலானதுதான். ஆனால் அதுதான் பெற்றோரின் கடமை, திறமை எல்லாமே. எனவே பெற்றோர்தான் குழந்தைக்கு என்ன தேவை என்ற புரிதலுடன் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

எந்தச் சூழலிலும், உங்கள் முடிவுக்கு உடன்படும்படி குழந்தைகளை வற்புறுத்தாதீர்கள்.
குழந்தைகள் மனநல மருத்துவர்

எந்தச் சூழலிலும், டீன்ஏஜ் குழந்தைகளை உங்கள் முடிவுக்கு உடன்படும்படி சொல்லி வற்புறுத்தாதீர்கள். மீறிச் செய்தால், குழந்தை திணறத்தொடங்கும். சில நேரங்களில், அவர்கள்மீது உங்கள் விருப்பத்தை நீங்கள் திணிக்கிறீர்கள் என்று அவர்கள் நினைத்துக் கொள்வார்கள். எனவே எப்போதும், உங்கள் தரப்பு நியாயத்தைக் கூற முயலுங்கள். அதிகமாகப் பேசும் பெற்றோரிடம், சில குழந்தைகள் எரிச்சலை வெளிப்படுத்துவார்கள். ஆனால், தனிமையில் இருக்கும்போது அதுகுறித்து யோசிப்பார்கள். எனவே, உங்களது எந்தவொரு செய்கைக்கும் விளக்கங்களைத் தவிர்க்க வேண்டாம்.

குழந்தை வளர்ப்பு
குழந்தை வளர்ப்பு
Pixabay

'நீ சொல்வதைக் கேட்க முடியாது' என அடம்பிடிக்கும் பிள்ளைகளை, ஓரிருமுறை 'இதற்கு மேல் உன் விருப்பம்' எனக்கூறி சுதந்திரமாக செயல்பட விடலாம். ஒருவேளை அவர்கள் எடுத்த முடிவு தவறாக இருந்தால், முதல்முறை விட்டுவிடுங்கள். சரியான விஷயத்தைத் தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவத்தை, முன்பைவிட எளிதாக அவர்களுக்குப் புரியவைக்கலாம்.

குழந்தைகளுக்குப் புரியவைக்க முயலும்போது, கேலி கிண்டலுக்கு உள்ளாகும் குழந்தைகள், இரண்டுவிதமாக ரியாக்ட் ஆவார்கள். முதல் வகை குழந்தைகள், கிண்டலை சீரியசாக எடுத்துக்கொண்டு அடுத்தமுறைகாதை முயற்சிக்க மாட்டார்கள். அடுத்தவகை பிள்ளைகள், நாம் சொன்னபிறகு ஆக்ரோஷமாக அடுத்தமுறை அதைச் செய்ய முயல்வார்கள். எனவே, டீன்ஏஜ் பிள்ளைகளை எப்போதும் கிண்டல் செய்யாதீர்கள்.நேரம் கிடைக்கும்போது, குடும்பம் சகிதமாக குழந்தைகளுடன் பயணம் மேற்கொள்ளுங்கள். பயணப்படும்போது, ஒருவருக்கொருவர் பேசுவதற்கான வாய்ப்பு அமையும். அப்போது குழந்தைகளுக்கும், உங்களுக்குமான நெருக்கம் அதிகரிக்கும், இடைவெளியும் குறையும்.

'நீ சொல்வதைக் கேட்க முடியாது' என அடம்பிடிக்கும் பிள்ளைகளை, ஓரிருமுறை 'இதற்கு மேல் உன் விருப்பம்' எனக்கூறி சுதந்திரமாக செயல்பட விடலாம்.
குழந்தைகள் மனநல மருத்துவர்

நேரம் கிடைக்கும்போது, குடும்பம் சகிதமாக குழந்தைகளுடன் பயணம் மேற்கொள்ளுங்கள். பயணப்படும்போது, ஒருவருக்கொருவர் பேசுவதற்கான வாய்ப்பு அமையும். அப்போது குழந்தைகளுக்கும், உங்களுக்குமான நெருக்கம் அதிகரிக்கும், இடைவெளியும் குறையும்.

அன்றாட வாழ்வில், உங்களுக்கு எவ்வளவு மனக்கசப்புகள் இருந்தாலும் சரி... இரவு உணவை குடும்பமாக அமர்ந்து சாப்பிடுங்கள். அலுவலகத்தில் உங்களுக்கு என்ன நடந்தது, வழியில் நீங்கள் யாரையெல்லாம் சந்தித்தீர்கள் என்பதுபோன்ற விஷயங்களைப் பேசுங்கள்.

பெற்றோராகிய நீங்கள் இப்படிச் செய்யும்போது, குழந்தைகள் அவர்களாகவே முன்வந்து சில விஷயங்களைப் பேசத் தொடங்குவார்கள். இடைவெளி தானாகவே குறையும்!" என்கிறார் அவர்.