இந்தியாவில், `கஃபே காஃபி டே' எனும் பெயரை உச்சரிக்காத நகர்ப்புற இளைஞர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்குப் பிரபலமான நிறுவனத்தின் உரிமையாளர் சித்தார்த்தா, சில நாள்களுக்கு முன்னால் கர்நாடகாவிலுள்ள நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். காபி தொழிலைப் பின்னணியாகக்கொண்ட குடும்பத்திலிருந்து வந்து, இந்தியாவின் மிகப்பெரிய உணவுத்தொடர் நிறுவனங்களில் ஒன்றாக, உலகின் பல்வேறு நாடுகளில் 'காஃபி டே'வின் கிளைகளைப் பரப்பிய சித்தார்த்தா, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1996-ம் ஆண்டு, பெங்களூரு பிரிகேட் ரோட்டில் முதல் 'காஃபி டே' கடையைத் திறந்த சித்தார்த்தா, மார்ச் 2019-ன் நிலவரப்படி இந்தியா முழுவதும் 1,752 காஃபி டே-க்களை நடத்திவந்தார். 2015-ம் ஆண்டு Forbes இதழ், இந்தியாவின் 75-வது பணக்காரராக சித்தார்த்தாவைத் தேர்வுசெய்திருந்தது. 2018-ம் நிதியாண்டில், இந்த நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 1,814 கோடி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி, உலகின் இளம் முன்மாதிரி தொழிலதிபராக வளர்ந்து நின்ற சித்தார்த்தா, நிதி நெருக்கடி காரணமாகத் தன்னையே மாய்த்துக்கொண்டிருக்கிறார். எவ்வளவோ தடைகளையும் இடர்களையும் கடந்து, புதியதொரு தொழிலில் நுழைந்து, உலக அளவில் பெரும் அங்கீகாரத்தை எட்டிய ஒரு மனிதர், திடீரென தற்கொலை முடிவை எடுத்ததன் பின்னால் இருக்கும் உளவியல் என்ன?

“பெரும்பாலான தற்கொலைகளை ஆய்வுசெய்தால், மனச்சோர்வுதான் முக்கியக் காரணமாக இருக்கிறது. மனச்சோர்வு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். தொழிலதிபர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. சித்தார்த்தா தற்கொலைசெய்துகொண்டதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றைத் தவிர்த்து, மேலும் இரு காரணங்கள் உள்ளன. அதை, `பயோசைக்கோசோஷியல் ஃபேக்டர்’ (Biopsychosocial factor) என்போம்.
தற்கொலை முடிவை எடுப்பவர்கள் பெரும்பாலும் சென்சிட்டிவ்வான நபர்களாக இருப்பார்கள். பெரிய பெரிய தோல்விகளில் இருந்து மீண்டு வந்திருப்பார்கள். ஆனால், சிறு தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாது. இது ஒரு வகையான ஆளுமை.மனநல ஆலோசகர் வந்தனா
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஒரு விஷயம் நடக்கும்போது, மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களைப் 'பயோலாஜிக்கல் ஃபேக்டர்' என்றும் அதனால் ஏற்படும் மனச்சோர்வை சைக்கலாஜிக்கல் ஃபேக்டர் என்றும் குறிப்பிடுவோம். மனச்சோர்வின் இறுதி நிலை, தற்கொலை எண்ணங்கள் தோன்றுவதுதான்.

சிலர், பிரச்னைகளை எதிர்கொள்ளப் பழகியிருப்பார்கள். 'என்னால் முடியும்... எதையும் வெல்லும் ஆற்றல் என்னிடம் இருக்கிறது' என்று அவர்கள் தன்னம்பிக்கை மனிதர்களாக, நேர்மறை எண்ணம்கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால், மனச்சோர்வில் இருக்கும்போது நேர்மறை எண்ணங்கள் எல்லாம் மறைந்து, எதிர்மறை எண்ணங்களே மேலோங்கி இருக்கும்.
சித்தார்த்தாவுக்கு, `மன முறிவு’ (Mind Fracture) ஏற்பட்டிருந்திருக்கலாம். அந்த வலியை அவர் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை. குறிப்பாக, தன் உறவினர்களிடம்கூட அவர் தெரிவிக்கவில்லை. தொழில்முறை மற்றும் உணர்வுபூர்வமான உதவியை அவர் நாடாமல் போனதாலேயே இவ்வளவு பெரிய முடிவை எடுத்திருக்கிறார். தற்கொலை முடிவை எடுப்பவர்களின் உளவியலை ஆராய்ந்தால், `என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. என்னை யாராவது காப்பாற்ற மாட்டார்களா?’ என்பன போன்ற எண்ணங்களைக் கொண்டிருந்திருப்பார்கள்.
அறிகுறிகள்
தற்கொலை எண்ணம் உள்ளவர்களை அடையாளம் காண்பது எளிது. அவர்களது பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் தென்படும். முகம் வாடிப்போயிருக்கும். சமூக வலைதளங்களில், சில குறிப்புகளின்மூலம் தங்கள் எண்ணத்தை மறைமுகமாகத் தெரிவிப்பார்கள். இதுபோன்ற மாற்றங்கள் தென்பட்டால், அவர் மனத்தளவில் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார் என்பதை உறவினர்கள், நண்பர்கள் உணர வேண்டும்.
சிலர், உளவியல் ரீதியான பிரச்னைகள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் இருப்பார்கள். எந்தப் பிரச்னையும் இல்லாததுபோல சிரித்த முகத்துடன் காணப்படுவார்கள். ஆனால், அவர்களது மனத்தில் ஒரு போராட்டம் நடந்துகொண்டேயிருக்கும். இதை, `மாஸ்க் டிப்ரஷன்’ (Mask depression) என்று குறிப்பிடுவோம். இத்தகையோர், தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் ஏதோ ஓர் அறிகுறியை வெளிப்படுத்துவார்கள். சித்தார்த்தாவும் அப்படித்தான் செய்திருக்கிறார். இறப்பதற்கு முன்பாக அவர் எழுதிய கடிதத்தில், தன் கடன்களை அடைக்க நெருக்கமான நண்பரிடம் பெரியதொகை கடன் பெற்றதைக் குறிப்பிட்டிருக்கிறார். நிச்சயமாக, கடன் கொடுத்தவர் சித்தார்த்தாவின் மனநிலையை அறிந்திருக்க முடியும். குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நலத்தில் பிரச்னை என்றால், குடும்ப உறுப்பினர்கள் அருகிலிருந்து கவனித்துக்கொள்வதுபோல மனச்சோர்வு ஏற்படும்போதும் உடனிருந்து கவனித்து, அரவணைக்க வேண்டும். பிரச்னையைச் சரிசெய்ய உரிய மருத்துவர்கள், மனநல ஆலோசகர்களை அணுக வேண்டியது அவசியம்.

தற்கொலை முடிவை எடுப்பவர்கள் பெரும்பாலும் சென்சிட்டிவ்வான நபர்களாக இருப்பார்கள். பெரிய பெரிய தோல்விகளில் இருந்து மீண்டு வந்திருப்பார்கள். ஆனால், சிறு தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாது. இது, ஒரு வகையான ஆளுமை. சித்தார்த்தாவின் விவகாரத்தில் இதைக் கவனிக்க முடியும்.
குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நலத்தில் பிரச்னை என்றால் குடும்ப உறுப்பினர்கள் அருகிலிருந்து கவனித்துக்கொள்வதுபோல மனச்சோர்வு ஏற்படும்போதும் உடனிருந்து கவனித்து, அரவணைக்க வேண்டும். பிரச்னையைச் சரிசெய்ய உரிய மருத்துவர்கள், மனநல ஆலோசகர்களை அணுக வேண்டியது அவசியம்.மனநல ஆலோசகர் வந்தனா
தடுப்பது எப்படி?
தற்கொலை செய்துகொள்வது என்பது 'சட்'டென எடுக்கும் ஒரு முடிவு. அந்த முடிவைத் தள்ளிப்போடுவதால், தற்கொலையைத் தவிர்க்கலாம். இந்த மாதிரியான எண்ணம் உள்ளவர்களால் உறவினர், நண்பர்களிடம் மனம்விட்டுப் பேசமுடியாது. ஆனால், அவர்களால் முகம் தெரியாத நபரிடம் செல்போனில் பேச முடியும் என்பதால், தற்கொலை தடுப்பு மையங்களைத் தொடர்புகொள்ளலாம். இதைத் தற்கொலை எண்ணம் உடையவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

இன்றைய சூழலில், தொழில் முனைவோருக்கு அரசின் புதிய திட்டங்கள், கொள்கை முடிவுகள் மனத்தளவில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அவற்றை எதிர்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்வது தொழில்முனைவோருக்கு அவசியம்.
தெலங்கானா மாநிலத்தில், எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் பள்ளிக்கூட தேர்தலில் சக மாணவியிடம் தோற்றுப்போய்விட்டதற்காக, ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருக்கிறான். இவ்வளவு தீவிரமான நிலைக்குப் போவதை மனநல ஆலோசனைகளால் தடுக்க முடியும். மனநலம் சார்ந்த விஷயங்களில், பள்ளிப் பருவத்திலேயே கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால், பள்ளிப் பருவத்தில்தான் ஒருவரது ஆளுமை தீர்மானிக்கப்படுகிறது. அரசின் 104 இலவச ஹெல்ப்- லைன் வசதி இருக்கிறது. தற்கொலை எண்ணங்கள் வரும்போது அழைத்துப் பேசலாம். தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள். தவிர, சிநேகா- தற்கொலை தடுப்பு மையம் - 044-24640050 இந்த எண்ணில் அழைத்தால், தற்கொலை என்ணத்திலிருந்து விடுபட தகுந்த ஆலோசனைகள் வழங்குவார்கள். 24 மணி நேரமும் செயல்படுகிறது.

விபத்தில் காயமடைந்தால் உடனே மருத்துவரை அணுகுகிறோம். ஆனால், மனச்சோர்வு ஏற்பட்டால், பெரும்பாலானோர் மனநல மருத்துவரை அணுகுவதில்லை. குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நலத்தில் பிரச்னை என்றால், குடும்ப உறுப்பினர்கள் அருகிலிருந்து கவனித்துக்கொள்வதுபோல மனச்சோர்வு ஏற்படும்போதும் உடனிருந்து கவனித்து, அரவணைக்க வேண்டும். பிரச்னையைச் சரிசெய்ய உரிய மருத்துவர்கள், மனநல ஆலோசகர்களை அணுகவேண்டியது அவசியம். அப்படிச் செய்தால், பெரும்பாலான தற்கொலைகளைத் தடுக்கலாம்” என்கிறார், வந்தனா.