Published:Updated:

``எங்க வலியை நீங்க புரிஞ்சுக்க 20 வருஷம் உழைச்சிருக்கோம்!" - தூய்மைப் பணியாளர் சூர்யா

தூய்மைப் பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர்கள்

நாங்க எங்க உயிரைப் பணயம் வெச்சு ஊரைச் சுத்தம் செய்யுறோம். சில தெருக்களில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் இருக்கு. மனசுக்குள்ள பயம் இருந்தாலும் அங்கேயும் நாங்க தினமும் குப்பைகள் வாங்கத்தான் செய்றோம்.

"ஊரடங்கு விதிக்கப்பட்டு ஜனங்க எல்லாரும் வீட்டுக்குள்ள இருந்தாலும், தெருக்களில் குப்பை சேராமலா இருக்கு, வழக்கம்போல தினமும் வண்டிக் கணக்கில் குப்பைகளை அள்ளத்தான் செய்றோம். நாங்க வேலைக்கு வரலைனா குவியுற குப்பையில் இருந்து வேற எதாவது புது வியாதி வந்துரும். கடைகள் எதுவும் இல்லை. திறந்திருக்கும் சில கடைகளில்கூட விலைவாசி அதிகமா இருக்கிறதால், வாங்குற சம்பளம் வாய்க்கும் வயித்துக்குமே பத்தல.

இத்தனை கஷ்டத்தை மறக்கடிக்கிற மாதிரி நல்ல விஷயம் ஒண்ணு நடந்திருக்கு. மக்கள் எங்களையும் மனுஷங்களா பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. மரியாதை கொடுக்குறாங்க. ஏய், இந்தான்னு சொல்லிக் கூப்பிட்டவங்க அக்கான்னு கூப்பிடுறாங்க. ஆச்சர்யமா இருக்கு." - தூய்மைப் பணியாளர் செல்வி அக்கா

தூய்மைப் பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர்கள்

"எங்களுக்கும் குழந்தைகள் இருக்காங்க. வேலை முடிச்சுப் போனதும் ஓடி வரும் குழந்தைகளைத் தூக்கக்கூட பயமாதான் இருக்கு. ஆனால் இப்போ வேலை செய்யணுங்கிறது அவசியமான ஒண்ணு. எங்களை மனுஷங்களா பாக்கணுங்கிறது மக்களுக்கு வேணும்னா சாதாரண விஷயமா இருக்கும். அவசியம் இல்லாத ஒண்ணுன்னுகூடத் தோணலாம். ஆனா எங்களுக்கு அது ஒரு ஆசை. இப்போ அந்த ஆசை நிறைவேறியிருக்கு.

டாக்டருக படிச்சுட்டு உயிரைக் காப்பாதுறாங்கனா, நாங்க எங்க உயிரைப் பணயம் வெச்சு ஊரைச் சுத்தம் செய்யுறோம். சில தெருக்களில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் இருக்கு. மனசுக்குள்ள பயம் இருந்தாலும் அங்கேயும் நாங்க தினமும் குப்பைகள் வாங்கத்தான் செய்றோம்.

ஒதுக்கப்படுறதோட வலி என்னன்னு எங்களுக்குத் தெரியும். அதை நாங்க யாருக்கும் எப்போதும் கொடுக்க மாட்டோம். நாங்க செய்யுற வேலைக்காக யாரும் பத்துப் பைசா எங்களுக்குக் கொடுக்க வேணாம். மனுஷங்களா பாருங்க போதும். இப்ப டிவியில காட்டுறதனால எங்க கஷ்டம் உங்களுக்குப் புரியுது. மரியாதை கொடுக்குறீங்க. ஆனா இத்தனை வருஷமாகவும் நாங்க இதே வேலையைத்தான் செஞ்சுட்டிருந்தோம். எங்க வலியை நீங்க புரிஞ்சுக்க 20 வருஷம் உழைச்சிருக்கோம்." - தூய்மைப் பணியாளர் சூர்யா.

தூய்மைப் பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர்கள்

- தூய்மைப் பணியாளர்களின் அசாதாரண அனுபவங்களை முழுமையாக வாசிக்க > கொரோனாவுக்குப் பிறகும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்! https://bit.ly/2WupZmw

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம்.

குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு