Published:Updated:

``கொரோனா மிக விரைவில் இரண்டாம் அலை தாக்குதலை ஏற்படுத்தக்கூடும்!" - எச்சரிக்கும் WHO

WHO | கொரோனா
WHO | கொரோனா

நோய் பாதிப்பு குறைந்து வருவதாக சொல்லிக்கொள்ளும் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகள், தங்களின் கொரோனா பரிசோதனையை மீண்டும் அதிகரிக்க வேண்டும் - WHO

கோவிட் - 19 கொரோனா பரவுதலில், பல நாடுகளில் இப்போது நோய் பாதிப்பு கொஞ்சம் கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துவரும் நாடுகள் அனைத்திலும், லாக்டௌன் வேகமாகத் தளர்த்தப்பட்டும் வருகிறது. இவை யாவும் உலகம் முழுக்க, பெரும்பாலான நாடுகள் இயல்புக்குத் திரும்ப வழிவகுத்துள்ளது. ஆனால் லாக்டௌன் தளர்வு, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால மருத்துவரான மைக் ரேயன் இதுகுறித்துப் பேசும்போது, ``ஒரு சில நாடுகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைகிறது என்றாலும் தென் அமெரிக்கா, தெற்கு ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் நோய் தீவிரமடைந்து கொண்டுதான் போகிறது. கொரோனா இத்தனை மாதங்களில் நமக்கு சொல்லிக்கொடுத்துள்ள முக்கியமான பாடமே, இந்த வைரஸ் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பரவும் என்பதுதான். எந்த அடிப்படையில் இந்த வைரஸ் பரவுகிறது என்பதுகூட நமக்குத் தெரியவில்லை.

2-வது அலையைத் தொடங்கிய கொரோனா... மீண்டும் மீளுமா சீனா?| China | Corona

கொரோனாவின் தன்மையை அறிவது, இப்போதும் அறிவியலாளர்களுக்கு சவாலாகவே உள்ளது. அப்படியிருக்கும்போது, உலகம் முழுக்க நோய் குறையத் தொடங்கிய பிறகே லாக்டௌன் விலகலை அமல்படுத்த வேண்டும். இடையிலேயே அதை விலக்குவது, நோயாளிகள் எண்ணிக்கை குறைந்த நாடுகளிலும்கூட உடனடியாக எண்ணிக்கை அதிகரிக்க வழிவகுக்கும்" என்று கூறியுள்ளார்.

கொரோனா
கொரோனா

இந்த வகையில் நோய் பாதிப்பு குறைந்து வருவதாக சொல்லிக்கொள்ளும் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகள், தங்களின் கொரோனா பரிசோதனையை மீண்டும் அதிகரிக்க வேண்டுமென்றும், இப்போது அவர்கள் லாக்டௌன் தளர்வுகளைத்தான் அமல்படுத்த வேண்டுமே தவிர லாக்டௌன் விலகலை அல்ல என்றும் கூறியுள்ளார் மருத்துவர் ரேயன்.

`உலகப்போரைப் போலவே கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்குப் பின் என உலகம் மாறிவிட்டது!’ - பிரதமர் மோடி

இந்த நாடுகள், சமூக இடைவெளியைக் கட்டுக்கோப்புடன் பின்பற்ற வேண்டும் எனச் சொல்லியுள்ள அவர், அடுத்தகட்ட பாதிப்பு ஏற்படுவது தெரியவந்தால் உடனடி நடவடிக்கை தேவை என எச்சரித்தும் உள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு