Published:Updated:

Doctor Vikatan: 2 வருடங்களாகத் தவிர்த்த மருத்துவமனை விசிட்; இன்னும் தள்ளிப்போட வேண்டுமா?

Health check up (Representational Image ) ( Pixabay )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: 2 வருடங்களாகத் தவிர்த்த மருத்துவமனை விசிட்; இன்னும் தள்ளிப்போட வேண்டுமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
Health check up (Representational Image ) ( Pixabay )

கடந்த இரண்டு வருடங்களாக வழக்கமான ஹெல்த் செக்கப், சில சிகிச்சைகள் என மருத்துவமனை விசிட் தேவைப்படுகிற விஷயங்களைத் தள்ளிப்போட்டுக்கொண்டிருக்கிறேன். இப்போது பரவிக்கொண்டிருக்கும் ஒமிக்ரான், இதை மேலும் நீட்டிக்குமா?

- பாஸ்கர் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் அருணாசலம்
மருத்துவர் அருணாசலம்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.

``உலகம் முழுக்க ஒமிக்ரான் வைரஸ் பரவல் தலைவிரித் தாடுகிறது. அதி வேகத்தில் பரவுவதைப் பார்க்கிறோம். இறப்புகளே இல்லை என்று சொல்ல முடியாது. மிகக் குறைந்த அளவில் மரணவிகிதங்களும் பதிவாகத் தொடங்கியிருக்கின்றன. அடுத்த சில நாள்களில் ஒமிக்ரான் பரவல் மேலும் உச்சம் தொடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த சில வாரங்கள், ஏன் மாதங்கள்கூட நமக்கு மிகச் சவாலாகத்தான் இருக்கப் போகின்றன.

ஒமிக்ரான் வீரியமற்றது, ஒன்றும் செய்யாது என்ற அலட்சியத்தில் வெளியே செல்வது, கூட்டங்களில் பங்கேற்பது போன்ற எதையும் செய்ய வேண்டாம். முகக் கவசம் அணிவதை மிக அவசியமாகப் பின்பற்ற வேண்டும். தேவையற்ற பயணங்களை, அது மருத்துவமனைக்காக இருந்தாலுமே சில நாள்களுக்குத் தவிர்ப்பது நல்லது. சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டியது மிகமிக முக்கியம். அடிக்கடி கைகளைக் கழுவுவதையும் மறக்க வேண்டாம்.

People queue up for COVID-19 vaccine
People queue up for COVID-19 vaccine
AP Photo / Rafiq Maqbool

இன்னும் குறைந்தபட்சம் அடுத்த ஆறு மாதங்களுக்காவது இந்த நெறிமுறைகளை மிகவும் ஸ்ட்ரிக்ட்டாகப் பின்பற்றித்தான் ஆக வேண்டும். மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு எனப் பல இடங்களிலும் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் இரண்டு மடங்காக, மும்மடங்காகப் பெருகிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நீங்கள் உங்கள் மருத்துவ ஆலோசனைகளை உங்கள் மருத்துவருடன் ஆன்லைனில் அல்லது தொலைபேசியில் வைத்துக்கொள்ளலாம். அவசரமற்ற சிகிச்சைகளுக்கு இன்னும் சில நாள்கள் காத்திருக்கலாம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?