Published:Updated:

Doctor Vikatan: கண்ணில் கொசு பறப்பது போன்ற உணர்வு; பரிசோதனை செய்து பார்க்க வேண்டுமா?

Eyes (Representational Image) ( Photo by Craig Adderley from Pexels )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: கண்ணில் கொசு பறப்பது போன்ற உணர்வு; பரிசோதனை செய்து பார்க்க வேண்டுமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
Eyes (Representational Image) ( Photo by Craig Adderley from Pexels )

என் வலது கண்ணின் முன்னால் கொசு பறப்பதுபோல ஒரு தோற்றம் தெரிகிறது. ஏன் இப்படி? என் வயது 62. கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமா?

- சந்திரசேகர் ஷங்கர் (விகடன் இணையத்திலிருந்து)

கண் மருத்துவர் பிரவீன் கிருஷ்ணா
கண் மருத்துவர் பிரவீன் கிருஷ்ணா

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் பிரவீன் கிருஷ்ணா.

``நம் எல்லோர் கண்களிலும் `விட்ரியஸ்' (vitreous) எனப்படும் விழித்திரவம் இருக்கும். அது டிரான்ஸ்பரன்ட்டான ஜெல்லி வடிவில் இருக்கும். வயதானால் தலைமுடி நரைப்பது போல, முதுமையின் காரணமாகவோ, கண்களுக்குள் ரத்தக் கசிவு இருந்தாலோ, ரத்தக் குழாய் வெடிப்பதாலோ, உயர் ரத்த அழுத்தம், கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு போன்றவற்றாலோ, அடிபட்டிருந்தாலோ, கண்களுக்குள் வீக்கம் ஏற்பட்டிருந்தாலோ, விட்ரியஸ் எனப்படும் விழித்திரவம் நீர்த்துவிடும். அப்படி நீர்த்துப்போனால், அது டிரான்ஸ்பரன்ட்டாக இருக்காது. அதில் நிறைய நார்த்தன்மை இருக்கும். அதன் பின்தான் ரெட்டினா எனப்படும் விழித்திரை இருக்கும். அந்த விழித்திரைதான் கேமரா மாதிரி உங்களுக்கு காட்சிகளைப் படம்பிடித்துக் காட்டும். உங்களுக்கு கொசு பறப்பது போல தெரிவது, வேறு ஒருவருக்கு ஈ பறப்பது மாதிரியோ. ஒட்டடை மாதிரியோ தெரியலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த உணர்வை பலரும் முதுமையின் அறிகுறியாக நினைத்து அலட்சியம் செய்கிறார்கள். எல்லா நேரத்திலும் இது அப்படித்தான் இருக்க வேண்டும் என்றில்லை. எனவே, முதுமையின் அடையாளம் எனத் தவிர்க்காமல், கண் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதிலும் குறிப்பாக, ரெட்டினா ஸ்பெஷலிஸ்ட் எனப்படும் விழித்திரை சிறப்பு மருத்துவரை அணுகுவது சிறந்தது. ஏனெனில், சில நேரம், விழித்திரவம் பிரியும்போது நரம்பின் ஓரங்கள் இழுக்கப்பட்டால், ரெட்டினல் டிடாச்மென்ட் (Retinal detachment) எனப்படும் விழித்திரை விலகல் பாதிப்பு ஏற்படலாம்.

Eye testing (Representational Image)
Eye testing (Representational Image)
Photo: Pixabay

பார்வைத்திறனையே பாதிக்கும் பிரச்னை அது என்பதால் ஆரம்பத்திலேயே மருத்துவப் பரிசோதனையும் ஆலோசனையும் தகுந்த சிகிச்சையும் அவசியம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?