Published:Updated:

Doctor Vikatan: கர்ப்பப்பை கட்டிகளுக்கு கர்ப்பப்பையை நீக்குவதுதான் தீர்வா?

Woman (Representational Image) ( Photo by Alex Green from Pexels )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: கர்ப்பப்பை கட்டிகளுக்கு கர்ப்பப்பையை நீக்குவதுதான் தீர்வா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
Woman (Representational Image) ( Photo by Alex Green from Pexels )

என் வயது 34. ஃபைப்ராய்டு எனப்படும் கட்டிகள் இருக்கின்றன. இதற்கு கர்ப்பப்பையை நீக்குவதுதான் தீர்வு என்கிறார்கள். அது உண்மையா? எனக்கு வேறு ஆப்ஷன் இல்லையா?

- வித்யா (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் ஸ்ரீதேவி
மருத்துவர் ஸ்ரீதேவி

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

கர்ப்பப்பையின் தசைப்பகுதியான மயோமெட்ரியம் பகுதியில் உருவாகக்கூடிய கேன்சர் அல்லாத கட்டிகள்தான் ஃபைப்ராய்ட்ஸ் எனப்படுகின்றன. இந்தக் கட்டிகள் கர்ப்பப்பையின் வெளிப்பகுதி மற்றும் உள்பகுதிகளை நோக்கியும் வளரக்கூடும். தசைப்பகுதியில் இருக்கும் ஃபைப்ராய்டு கட்டிகளும், உள்நோக்கி வளரும் கட்டிகளும்தான் அதிக பிரச்னைக்குரியவை.

பரம்பரைத்தன்மை, மிக இளவயதில் பூப்பெய்துதல், உடல் பருமன், புகைப்பழக்கம், மன அழுத்தம் போன்றவை ஃபைப்ராய்டு கட்டிகள் உருவாகக் காரணங்களாகலாம்.

ஒருசிலருக்கு இது எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தாது. அதை `ஏசிம்டமேட்டிக் ஃபைப்ராய்டு' என்று சொல்வோம். வேறு பிரச்னைகளுக்காக ஸ்கேன் செய்யும்போது இதைக் கண்டுபிடிப்பார்கள். கட்டிகள் அளவில் சிறியதாக இருந்தால் சிகிச்சை தேவையில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபைப்ராய்ட்ஸ் பிரச்னை உள்ளவர்களில் சிலருக்கு அதீத ரத்தப்போக்கு, கட்டிகளாக ரத்தம் வெளியேறுதல், பீரியட்ஸின்போது கடுமையான வலி, அடிவயிற்றுவலி, 7 முதல் 10 நாள்கள் வரை ப்ளீடிங், பீரியட்ஸ் இல்லாத நாள்களிலும் ப்ளீடிங் போன்றவை இருக்கும். சிறுநீர்ப்பை அல்லது மலப்பையில் அழுத்தம் ஏற்பட்டு, சிறுநீர், மலம் கழிப்பதில் சிரமங்கள் வரலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஃபைப்ராய்டு கட்டிகளின் அளவு பெரிதாக இருந்தால் வயிறு பெரிதாகத் தெரியலாம். சிலருக்கு குழந்தையின்மை பிரச்னை வரலாம். அடிக்கடி கருக்கலைதல் நிகழலாம்.

பிரத்யேக ஸ்கேன் பரிசோதனை மூலம் ஃபைப்ராய்டு இருப்பதை மருத்துவர் உறுதிப்படுத்துவார். அறிகுறிகளின் தீவிரத்துக்கேற்ப சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார். அதிக ரத்தப்போக்கு போன்ற சில அறிகுறிகளுக்கு மருந்து, மாத்திரைகளே போதும். சிலருக்கு கர்ப்பப்பையின் உள்ளே பொருத்தக்கூடிய இன்ட்ரா யூட்ரைன் புரொஜெஸ்ட்ரான் ரிலீசிங் கருவி பரிந்துரைக்கப்படும்.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Image by StockSnap from Pixabay

அதை அதிகபட்சமாக 5 வருடங்கள்தான் பொருத்திக்கொள்ள முடியும். அறுவை சிகிச்சை இல்லாத மாற்று வழி இது. சிலருக்கு பிரத்யேக ஊசிகள் போடப்பட்டு, பாதிப்பு சரிசெய்யப்படும்.

மயோமெக்டமி அல்லது ஹிஸ்ட்ரெக்டமி அறுவை சிகிச்சைகளும் இந்தப் பிரச்னைக்கான தீர்வாக அமையும். கர்ப்பப்பையில் உள்ள கட்டியை மட்டும் அகற்றுவது மயோமெக்டமி. கட்டிகளோடு சேர்த்து கர்ப்பப்பையையும் அகற்றுவது ஹிஸ்ட்ரெக்டமி. குழந்தைபெற்ற பெண்களுக்கு ஹிஸ்ட்ரெக்டமி பரிந்துரைக்கப்படும். அறுவை சிகிச்சை தேவைப்படாத இன்னும் சில நவீன சிகிச்சைகளும் இன்று வந்திருக்கின்றன. உங்கள் மருத்துவர் உங்கள் பிரச்னையின் தீவிரத்தைப் பார்த்து அதற்கேற்ற சிகிச்சையைப் பரிந்துரைப்பார்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism