Published:Updated:

`கஷ்டம் எவ்ளோ பெருசோ வெற்றியும் அவ்ளோ பெருசா இருக்கும்!' - எஸ்.ஜே.சூர்யா

எல்லோருமே கஷ்டப்பட்டுத்தான் வேலை பார்க்கிறார்கள்; திறமைசாலிகளாகவும் இருக்கிறார்கள். ஆனால், சிலருக்கு மட்டும் வெற்றி கிடைக்க இரு காரணங்கள் உண்டு. ஒன்று பூர்வ ஜென்ம புண்ணியங்கள். மற்றொன்று நமக்குக் கிடைத்த வெற்றியை மற்றவரோடு எந்தளவுக்குப் பகிர்ந்துகொண்டோம் என்பது.

Actor SJ Surya
Actor SJ Surya

குஷி', `வாலி' படங்களின் மூலமாகத் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா. பின்னர் 'நியூ' படத்தின் மூலமாகக் கதாநாயகனாகவும் அறிமுகமானவர், 'இறைவி' படத்தின் மூலமாக குணச்சித்திர வேடங்களில் கலக்கினார். சமீபத்தில் வெளியான 'மான்ஸ்டர்' படம் மூலம் குழந்தைகளின் மனதிலும் இடம் பிடித்தார். செப்டம்பர் 22-ம் தேதி சென்னை தேனாம்பேட்டையிலுள்ள தனியார் புற்றுநோய் மருத்துவமனையில் `ரோஜா தினம்’ அனுசரிக்கப்பட்டது. இந்த தினத்தையொட்டி மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு ரோஜாப்பூ கொடுத்து நம்பிக்கை அளித்தார். அதையொட்டி நமக்கு அளித்த சிறப்புப் பேட்டி இது.

Actor SJ Surya
Actor SJ Surya

உங்கள் வாழ்க்கையை மாற்றிய வாக்கியம் எது?

```நீ எதைக் கொடுத்தாயோ அதுதான் உனக்குத் திரும்பக் கிடைக்கும்’ இதுதான் என்னுடைய வாழ்க்கையை மாற்றிய வாக்கியம். வாழ்க்கையில் சோதனைகளும் வேதனைகளும் வரத்தான் செய்யும். அவற்றை எதிர்கொள்ளப் பழக வேண்டும். அப்படிச் செயல்படும்போதுதான் வெற்றி கிடைக்கும். சிறிய கஷ்டங்கள் வந்தபோது அவற்றை எதிர்கொண்டு போராடினேன். அப்போது எனக்குச் சிறிய வெற்றி கிடைத்தது. இன்னும் பெரிய கஷ்டம் வரும்போது அவற்றை எதிர்த்துப் போராடினால் இன்னும் பெரிய வெற்றி கிடைக்கும். சினிமா, விளையாட்டு, மருத்துவம் என எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்!

ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டா?

எல்லோருமே கஷ்டப்பட்டுத்தான் வேலை பார்க்கிறார்கள்; திறமைசாலிகளாகவும் இருக்கிறார்கள். ஆனால், சிலருக்கு மட்டும் வெற்றி கிடைக்க இரு காரணங்கள் உண்டு. ஒன்று பூர்வ ஜென்ம புண்ணியங்கள்; மற்றொன்று நமக்குக் கிடைத்த வெற்றியை மற்றவரோடு எந்தளவிற்குப் பகிர்ந்துகொண்டோம் என்பது. இந்த இரண்டிலிருந்தே ஒருவருக்கு வெற்றி என்பது அமைகிறது. திறமை, உழைப்புக்கெல்லாம் அப்பாற்பட்டு மனமும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது. அந்த மனமே ஆன்மிகம்.. எனது ஆன்மிகமும் அதுதான்!

Actor SJ Surya
Actor SJ Surya

உடம்பை ஃபிட்டாக வைத்திருப்பது எப்படி?

உடம்பை ஃபிட்டாக வைத்திருப்பதற்குக் காரணம் மனம்தான். ஏதாவது பிரச்னை வரும்போது அதனால் ஏற்படும் மன அழுத்தத்தில் சிக்கி, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்வேன். அப்படிச் செய்வதால் மன அழுத்தம் நீங்கி, உடலும் உறுதியாகிவிடும்.

'கத்துக்கறேன் தலைவரே' சூர்யா; 'நான் வில்லன் இல்லை' எஸ்.ஜே சூர்யா! #TweetsOfTheDay

தினசரி உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்துக்கும் பயிற்சி தேவை என்றே நினைக்கிறேன். அப்படிச் செய்யும்போது ஆரோக்கியமான உடல்நலனைப் பெற முடியும்.

Actor SJ Surya
Actor SJ Surya

உணவுப்பழக்கத்தை கடைப்பிடிக்கிறீர்களா?

உடல் ஆரோக்கியத்துக்கு உணவுப்பழக்கத்தில் கவனம் செலுத்துவது ரொம்ப முக்கியம். புரதச்சத்துகள், ஊட்டச்சத்துகள், நார்ச்சத்துகள் நிறைந்த உணவுகளைத் தேவையான அளவுக்குச் சாப்பிடுவேன். பொதுவாக எந்த உணவையும் அளவாக எடுத்துக்கொள்வது நல்லது. அதே சமயத்தில் அளவு குறைவாக உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். அதைத்தான் நம் முன்னோர்கள் `சுவரின்றி சித்திரம் வரைய முடியாது’ என்று குறிப்பால் உணர்த்தினார்கள். அது எல்லாக் காலத்துக்கும் பொருந்தும். எல்லோரும் உடம்பையும் மனதையும் நன்றாக வைத்துக்கொள்ளுங்கள்.. சந்தோஷமாக வாழுங்கள்!” என்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

இப்படித்தான் உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்கிறார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா! #SJSurya #FitnessTips வீடியோ : கிராபியென் ப்ளாக், கானப்ரியா

Posted by Vikatan EMagazine on Monday, September 23, 2019