Published:Updated:

வெயில், வேலை, மேக்கப், மாஸ்க்... சரும மருத்துவரின் டிப்ஸ்!

மாஸ்க்
மாஸ்க்

நீங்கள், முகத்தில் எப்போதும் மாஸ்க் அணிந்தாலும்கூட, வெயில் படுகிற பகுதிகளில் மட்டுமல்லாமல் முகம் முழுக்க சன் ஸ்க்ரீன் அப்ளை செய்ய வேண்டும்.

விடுமுறை காலங்களில், பெண்கள் பியூட்டி பார்லர் செல்வது அல்லது வீட்டில் இருக்கிற பொருள்களை வைத்து சருமத்தைப் பராமரிப்பது என்று அழகு சார்ந்த செயல்களில் ஈடுபடுவார்கள். ஆனால், முழு ஊரடங்கு காலத்தில் பியூட்டி பார்லர்கள் மூடப்பட்டிருக்கின்றன. கொரோனா அச்சத்தில் அழகு பற்றிய எண்ணத்தை மறந்திருந்தார்கள் பெண்கள். இதோ, ஊரடங்குத் தளர ஆரம்பித்துவிட்டது.

மருத்துவர் ஹரால்டு லான்சர்
மருத்துவர் ஹரால்டு லான்சர்

அளவான மேக்கப் மற்றும் அவசியமான ஃபேஸ் மாஸ்க்குடன் பெண்களில் சிலர் வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இது வெயில்காலம். தொடர்ந்து மாஸ்க், கூடவே மேக்கப் என்று இருக்கும்போது பெண்களின் சருமத்தில் என்னென்ன பிரச்னைகள் வரலாம், அவற்றை எப்படித் தடுக்கலாம் என்று சொல்கிறார், பிரபல சரும மருத்துவர் ஹரால்டு லான்சர்.

’நீண்ட நேரம் மாஸ்க் அணிந்திருந்தால், முகத்தில் எண்ணெய்ச்சுரப்பு அதிகரிக்கும். சிந்தெட்டிக் மெட்டீரியல் மாஸ்க் அணிந்தால்,அதிகப்படியான சூட்டை முகத்தில் தக்கவைக்கும். இதனால், முகப்பரு பிரச்னையில் அதிகம் சிக்காதவர்களுக்குக்கூட முகமெங்கும் பருக்கள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஏற்கெனவே, முகப்பருக்கள் உடையவர்களின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். அதனால், வீடுகளில் மாஸ்க் தயாரிப்பவர்கள் காட்டனில் மாஸ்க்குகளை தயாரிப்பது நல்லது.

Makeup Kit
Makeup Kit

ஒருவேளை, உங்கள் வேலை காரணமாக லேயர் லேயராக மேக்கப் போட்டு, அதன் மேலே மாஸ்க் அணிந்தால், அதிக வியர்வை, எண்ணெய்ப்பிசுக்கோடு மேக்கப்பில் இருக்கிற ரசாயனங்களும் கலப்பதால், சருமத்தில் அரிப்பு, தடிப்பு போன்ற உபாதைகள் ஏற்படலாம். வெயில் காலத்தில் மேக்கப் போடுவதைத் தவிர்த்து சன் ஸ்க்ரீன் மட்டும் அப்ளை செய்வது போதுமானது.

நீங்கள் முகத்தில் எப்போதும் மாஸ்க் அணிந்தாலும்கூட, வெயில் படுகிற பகுதிகளில் மட்டுமல்லாமல் முகம் முழுக்க சன் ஸ்க்ரீன் அப்ளை செய்ய வேண்டும்.

ஃபேஷியல் வைப் (Facial wet wipes) பயன்படுத்தினால், முகத்தில் எண்ணெய்ச்சுரப்பை மட்டுப்படுத்த உதவும்.

சிவப்பு, ஆரஞ்சு நிறங்களுக்கு நோ... பச்சை, ஊதா ஓகே! லாக்டௌன் சம்மருக்கான காஸ்ட்யூம் டிப்ஸ்!

கொரோனா பயம் தீரும்வரை, ரெகுலர் ஃபேஸ் வாஷால் முகத்தைக் கழுவாமல், ஆன்டிபாக்டீரியல் ஃபேஸ் வாஷை பயன்படுத்துங்கள். தவிர, ஆன்டிபாக்டீரியல் கிளென்சர் மூலம் சருமத்தை சுத்தம் செய்வதும் பாதுகாப்புதான். இதன்பிறகு மைல்டான மாய்ஸ்ரைசரை முகத்தில் அப்ளை செய்துகொண்டு, அலுவலகத்துக்குக் கிளம்புங்கள்’’ என்கிறார் ஹரால்டு.

கொரோனாவுடன் வாழ பெண்கள் ரெடி!

அடுத்த கட்டுரைக்கு