Published:Updated:

`ஜிம் முதல்... ஹேர்கட் வரை' - கொரோனாவிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? #SocialDistancingIsGood

சுரங்கப்பாதைகள் அல்லது பேருந்துகளில் செல்லும்போது மற்றவர்களிடமிருந்து முடிந்தவரை விலகி நிற்க முயலுங்கள்.

லக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700-ஐ கடந்து சென்று கொண்டிருக்கையில் மக்களிடையே கொரோனா வைரஸ் விழிப்புணர்வு அதிகளவில் ஒருபக்கம் ஏற்படுத்தப்பட்டாலும், மற்றொரு பக்கம் அது பற்றிய சந்தேகங்களும், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்... என்னவெல்லாம் செய்யக் கூடாது... தற்போது வெளியில், மக்கள் கூட்டம் இருக்கும் இடங்களுக்குச் செல்லலாமா... போன்ற அடுக்கடுக்கான கேள்விகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

இதுபோன்ற சந்தேகங்களுக்கு நிபுணர்கள் தரும் ஆலோசனைகள் இதோ உங்களுக்காக...

கொரோனா வீட்டுக்குள் வருவதைத் தடுக்க... நீங்கள் செய்ய வேண்டியவை!
2
உணவகம்

நான் கொரோனா பாதிப்பு இல்லாதவராக இருந்தாலும் வெளியில் உணவகங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டுமா?

நிச்சயமாக மக்கள் பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். மக்கள் முடிந்தவரை வீட்டில் இருக்க வேண்டும். பொதுவாக நாம் வெளியிடங்களுக்குச் செல்ல நேர்கையில் மற்றவர்களிடமிருந்து 6 முதல் 10 அடி தூரத்தில் இடைவெளிவிட்டு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் கொரோனா பாதிப்பு இல்லாதவராக இருக்கும் நிலையில் வெளியில் உணவகங்களுக்குச் செல்லத் தடை எதுவுமில்லை. ஆனால் தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் தவிர்க்கும் தற்காப்பு முறைகளில் வெளியில் உணவகங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பதும் முக்கியமானது.

3
டின்னர் பார்ட்டி

ஒரு டின்னர் பார்ட்டி... என் வீட்டிற்கு நண்பர்களை அழைக்கலாமா?

அழைக்கலாம். ஆனால் நீங்கள் அழைக்க விரும்பும் நண்பர்களுக்குக் காய்ச்சல், இருமல் போன்ற நோய் அறிகுறிகள் இல்லாமல் இருக்க வேண்டும். சிலருக்கு நோய்த்தொற்றோ, அறிகுறியோ இல்லாவிட்டாலும் நோய்க்கிருமிகளைக் கடத்தும் கடத்திகளாக (carrier) அவர்கள் இருக்கக்கூடும். அவர்களின் உடலில் வைரஸ் இருந்தாலும் அது அவர்களைப் பாதிக்காது. ஆனால் மற்றவர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தும். எனவே எந்த இடமாக இருந்தாலும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.

4
ஜிம்

நான் ஜிம்மிற்கு செல்லலாமா?

நீங்கள் ஜிம்மிற்குச் செல்லப் போகிறீர்கள் என்றால், அங்கே மிகக் குறைவான நபர்கள் இருக்கும் நேரத்தில் செல்லவும். ஜிம்மில் உள்ள சாதனங்களை மற்றவர்கள் பயன்படுத்தியிருப்பார்கள் என்பதால் அவற்றை நீங்கள் பயன்படுத்திய பிறகு கைகளை சானிடைஸர் கொண்டு கண்டிப்பாகத் சுத்தப்படுத்த வேண்டும். எப்போதும் கூட்டமாக இருக்கும் ஜிம் என்றால் அங்குச் செல்வதைத் தவிர்ப்பது நலம். வீட்டிலேயே உடற்பயிற்சிகள் செய்ய முயலலாம்.

5
பொதுப் போக்குவரத்து

நான் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தலாமா?

பெரும்பாலும் பணி செய்யும் இடத்திற்கோ அல்லது வெளியில் எங்கேயாவது அத்தியாவசிய இடங்களுக்கோ செல்ல நீங்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவேண்டிய நிலை ஏற்படலாம். ஒருவேளை உங்களுக்கு வீட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்பு இருந்தால் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சுரங்கப்பாதைகள் அல்லது பேருந்துகளில் செல்லும்போது மற்றவர்களிடமிருந்து முடிந்தவரை விலகி நிற்க முயலுங்கள். பேருந்துகளிலும், கூட்டம் நிறைந்த இடங்களிலும் செல்லும்போது மாஸ்க் அணிந்திருப்பது அவசியமானது.

6
திருமணம்

திருமணம், பிறந்தநாள் போன்ற விழாக்களில் கலந்துகொள்வதை ரத்து செய்ய வேண்டுமா?

உங்கள் உறவினர்களோ அல்லது நண்பர்களோ அவர்கள் வீட்டுத் திருமணத்திற்கு உங்களை அழைக்கும்போது அதைத் தவிர்ப்பது சிரமம்தான். ஆனால் அந்த விழாக்கள் நடைபெறும் சூழல் எவ்வாறு இருக்கிறது என்று கவனியுங்கள். ஒருவேளை நோய்த்தொற்று அதிகம் உள்ள இடங்களில் அந்த விழாக்கள் நடைபெற இருந்தாலோ அல்லது நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த விழாவிற்கு வரலாம் என்று உங்களால் யூகிக்க முடிந்தாலோ அங்கு செல்லாமல் இருப்பது சிறந்தது. ஒருவேளை நீங்களே இது போன்ற விழாக்களை நடத்த ஏற்பாடு செய்திருக்கும் பட்சத்தில் வாய்ப்பிருந்தால் அவற்றைத் தற்காலிகமாக ஒத்திவைக்கலாம்.

7
முதியவர்கள்

இந்த வைரஸ், வயதானவர்களுக்கு அதிகம் பரவ வாய்ப்புள்ளது என்பதால் அவர்களைச் சந்திப்பதைத் தவிர்க்க வேண்டுமா?

`கொரோனா அறிகுறி உறுதியானதும் சிரித்தேன்!'- பாதிப்பிலிருந்து மீண்டுவந்த  பெண்ணின் வைரல் பதிவு

ஒருவேளை உங்கள் வீட்டில் உள்ள முதியவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அவர்களை மருத்துவமனையிலோ அல்லது வீட்டின் ஒரு பகுதியிலோ தனிமைப்படுத்தித் தகுந்த சிகிச்சைகள் வழங்கலாம். தொற்று ஏற்பட்டிருக்கும் முதியவர்களிடமிருந்து குழந்தைகள் தொலைவில் இருக்க வேண்டும். மற்றபடி ஆரோக்கியமாக இருக்கும் பெரியவர்களைைைச் சந்திப்பதைத் தவிர்க்க அவசியம் எதுவுமில்லை.

8
ஹேர்கட்

நோய் பரவும் இவ்வேளையில் நான் ஹேர்கட் செய்வதைத் தவிர்க்க வேண்டுமா?

ஹேர்கட் செய்வதால் நோய் பரவும் என்று எதுவுமில்லை. ஆனால் நீங்கள் முடிவெட்டச் செல்லும் கடையில் ஹேர்கட் செய்பவர் சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்துகொள்வது சிறந்தது. கடையில் கூட்டமாக இருக்கும் சமயத்தில் அங்கு செல்லாமல் இருப்பது நலம்.

9
தொடுதல்

கைகுலுக்குவது, அணைப்பது போன்ற தொடுதல் தொற்றை ஏற்படுத்துமா?

`கொரோனா வைரஸ் சாதாரண தொற்றல்ல ட்ரம்ப்...' - அமெரிக்காவை அன்றே எச்சரித்த மருத்துவர்கள்!

தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ், தொடுதல் மூலமே அதிகம் பரவ வாய்ப்புள்ளது என்பதால் கைகுலுக்குவது, அணைப்பது போன்ற தொடுதல்களைத் தவிர்ப்பது அவசியம். ஒருவேளை வியாபார ரீதியாக மற்றவர்களுடன் கைகுலுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் பின்னர் ஹேண்ட் சானிடைஸர்கள் பயன்படுத்த வேண்டியது அவசியம்.

அடுத்த கட்டுரைக்கு