Published:Updated:

டெல்லியில் சிறப்பு மருத்துவமனை, இத்தாலியில் விமானப் போக்குவரத்து துண்டிப்பு... உலக நாடுகளில் கொரோனா! #CoronaUpdates

கொரோனா அலர்ட்
கொரோனா அலர்ட்

ஓர் இந்தியர் உட்பட, உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 12 ஆயிரத்தை தொட்டுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை சீனாவில் மட்டும் 259.

கொரோனா வைரஸ் குறித்த பயம், சீனாவை மட்டுமன்றி உலக நாடுகள் பலவற்றை ஆட்கொண்டிருக்கிறது. கொரோனாவை `சர்வதேச மருத்துவ அவசரம்' என அறிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். நம் நாட்டின் சுகாதாரத்துறை தரப்பில் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஓர் இந்தியர் உட்பட, உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 12 ஆயிரத்தை தொட்டுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை சீனாவில் மட்டும் 259.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கொரோனா தடுப்புக்காக, இந்திய அளவில் இதுவரை செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கொரோனா குறித்த சர்வதேச அப்டேட்களை இங்கே பார்க்கலாம்.

* ஒவ்வொரு நாளும் சீனாவில் கொரோனாவின் தாக்கமும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டே போவதை தொடர்ந்து, சீனாவின் வூகானில் தங்கியிருக்கும் இந்தியர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு இந்திய வெளியுறவுத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் சிறப்பு மருத்துவமனை, இத்தாலியில் விமானப் போக்குவரத்து துண்டிப்பு... உலக நாடுகளில் கொரோனா! #CoronaUpdates

* சீனாவிலிருந்து அழைத்துவரப்படுபவர்கள், அடுத்த 14 நாள்களுக்குத் தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுவர் என இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

* சீனாவில், வூகானைச் சுற்றி மருத்துவப் படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர்களை அங்கிருந்து வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பதை தடுக்க, வூகான் மட்டுமன்றி, இன்னும் 12 நகரங்கள் சீனாவில் முடக்கப்பட்டுள்ளன.

கொரோனா அலர்ட்
கொரோனா அலர்ட்

* சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு, மக்கள் யாரும் இப்போதைக்கு பயணிக்க வேண்டாம் என இந்திய அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

* சீனா மற்றும் தெற்கு ஆசியாவிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு, கொரோனாவுக்கான பரிசோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

* இந்தியாவில், 21 விமான நிலையங்களில் பயணிகளுக்கான கொரோனா ஸ்க்ரீனிங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜனவரி 27-ம் தேதி வரை 29,707 பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

* விமான நிலையங்கள் அனைத்திலும், தயார் நிலையில் ஆம்புலன்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், துறைமுகங்களும் அலர்ட் செய்யப்பட்டுள்ளன.

* அறிகுறிகள் தெரியவரும் பயணிகளை எப்படி அணுகவேண்டும் என, மருத்துவப் பணியாளர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன.

* இந்தியா முழுவதும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் அனைத்திலும் ஐஸோலேஷன் (Isolation) வார்டுகள் தயார் நிலையில் உள்ளன.

* வூகானிலிருந்த 400 இந்தியர்கள், இந்தியா அனுப்பிய போயிங் 747 ரக விமானம் மூலம் இன்று இந்தியா வந்தடைவர். இவர்களை கண்காணிப்பில் வைக்க, டெல்லியின் மனேசர் பகுதியில் பிரத்யேகமாக இரண்டு சிறப்பு மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

* ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் கொரோனாவைக் கட்டுப்படுத்த முயலுமாறு அத்துறை மருத்துவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது மத்திய அரசாங்கம்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

* யுனானி மருத்துவத்தின் முலம், கொரோனாவுக்கான அறிகுறிகளை ஓரளவு கட்டுப்படுத்த முடிகிறது என்பதால், அதற்கான பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

* தமிழகத்தில் இதுவரை அறிகுறிகளோடு யாரும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், சந்தேகத்தின் பேரில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ்... உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரபூர்வ விளக்கங்கள்! #VikatanPhotoCards

ஜனவரி 28-ம் தேதி வரையில் இந்தியாவில்...

உஜ்ஜான் மாவட்டம், மத்திய பிரதேசம்: வூகானிலிருந்து இந்தியா வந்த தாய் - மகனுக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் தெரியவந்துள்ளன.

ராஜஸ்தான்: சீனாவிலிருந்து வந்திருந்தவர்களில் 19 பேருக்கு கொரோனாவுக்கான தாக்கம் தெரியவந்துள்ளது.

பஞ்சாப் - ஹரியானா: பஞ்சாப்பில் ஒருவருக்கும், ஹரியானாவில் இருவருக்கும் கொரோனாவுக்கான அறிகுறிகள் தெரியவந்துள்ளன.

கொரோனா அலர்ட் - இந்தியா
கொரோனா அலர்ட் - இந்தியா
`காய்ச்சல் இருந்தால் பயணம் செய்யாதீர்கள்!' - டிராவலர்களுக்கான கொரோனா வைரஸ் அலர்ட் #CoronaVirus

கோவா: ஐரோப்பாவிலிருந்து வருகை தந்த சுற்றுலாப்பயணி ஒருவருக்கு, கொரோனா அறிகுறி தெரியவந்துள்ளது.

மும்பை, பூனே, மகாராஷ்ட்ரா: மும்பையில் நான்கு பேருக்கும், பூனேவில் இருவருக்கும் அறிகுறிகள் தெரியவந்துள்ளன.

கேரளா: 806 நபர்களில் 10 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். ஒருவருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்: ஒரே ஒரு பெண்ணுக்கு அறிகுறிகள் தெரியவந்துள்ளன.

அறிகுறிகள் தெரியவந்தவர்கள் அனைவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 28 நாள்களுக்கு, இவர்கள் அனைவருமே கண்காணிக்கப்படுவர்.

பிற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் சிலவற்றின் தொகுப்பு:

இத்தாலியில், சீனாவிலிருந்து தரையிறங்கிய இரண்டு பயணிகளுக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததால், அங்கு விமானப் போக்குவரத்து யாவும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில், சீன விமானப் போக்குவரத்துகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவில், ரஷ்ய, சீனா இடையிலான 4,300 கி.மீ எல்லை மூடப்பட்டுவிட்டது.

கொரோனா அலர்ட்
கொரோனா அலர்ட்
`கொரோனா வைரஸ்.. முடக்கப்பட்ட நகரம்.. வுகானின் திடீர் அமைதி!’- ஒரு இளம்பெண்ணின் டைரிக் குறிப்புகள்

வூகான் நகரத்தில் வசித்துவந்த 250 பிரெஞ்சுகாரர்கள், அவர்களது நாட்டுக்கே அனுப்பிவைக்கப்பட்டுவிட்டனர்

பப்புவா நியூ கினியா (Papua New Guinea) நாட்டில், ஆசியாவிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

வட கொரியாவில், சீனாவிலிருந்து வரும் விமானம் மற்றும் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன.

அடுத்த கட்டுரைக்கு