Published:Updated:

ஆட்டிசத்தை குணப்படுத்துமா ஸ்டெம்செல் தெரபி? ஏமாறாதே... ஏமாற்றாதே அறிக்கை!

புற்றுநோய் முதல் தாலசீமியா வரை தீர்வளிக்கும் ஸ்டெம்செல் தெரபி... ஆட்டிசத்துக்கு உதவாது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவில், விழிப்புணர்வு குறைவாக இருக்கும் முக்கியமான நோய் பாதிப்புகளில் ஆட்டிசம் குறைபாடும் ஒன்று. ஆட்டிசத்தை முழுமையாகக் குணப்படுத்த முடியாது எனும் அடிப்படை விழிப்புணர்வே, இங்கு குறைவுதான். `ஏதேனுமொரு சிகிச்சை ஆட்டிசம் பாதித்த தம் குழந்தைக்கு கைகொடுத்துவிடாதா' என ஏங்கும் பெற்றோர்கள் இங்கு ஏராளம்.

ஆட்டிசம்
ஆட்டிசம்

சமீபகாலமாக இப்படியானவர்களைக் குறிவைத்து இயங்குகின்றன சில சிகிச்சை மையங்கள். சில மாதங்களுக்கு முன்னர் மும்பையைச் சேர்ந்த மூளை நரம்பியல் மருத்துவர், ஸ்டெம்செல் தெரபி ஆட்டிசக்குறைபாட்டுக்கான சிறந்த சிகிச்சையாக இருக்குமென ஆங்கில தளம் ஒன்றில் பேட்டி அளித்திருந்தார். அப்படி குணப்படுத்தப்பட்ட சிறுவன் குறித்த தகவல்களையும் அந்த மருத்துவமனை பகிர்ந்திருந்தது.

இந்த நிலையில், இந்தியன் சைக்யாட்ரிக் சொசைட்டி, முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் `ஆட்டிசக் குறைபாடு, மனநலம் மற்றும் மூளை நரம்பியல் தொடர்பான ஒரு பிரச்னை. எந்தவொரு மனநல பிரச்னையையுமே, ஸ்டெம்செல் தெரபியால் சரிசெய்யவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியும் என்பது மருத்துவ ரீதியாக இதுவரையில் முழுமையாக நிரூபிக்கப்படாத விஷயம்.

ஆட்டிசம் - Indian Psychatric Society
ஆட்டிசம் - Indian Psychatric Society
`ஆட்டிசம் குழந்தைக்குத் தூக்கமின்மை ஒரு பெரும் பிரச்னை..!' - எவ்வாறு சரிசெய்வது?#DoubtOfCommonMan

ஆகவே மனநல சிக்கலுள்ளவர்கள், மூளை நரம்பியலுக்கான பிரச்னை உள்ளவர்கள் யாரும், ஸ்டெம்செல் தெரபி தங்களுக்கான தீர்வாக இருக்குமென நினைத்து முயல வேண்டாம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பலதரப்பட்ட மருத்துவர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த அறிக்கை குறித்து, ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் நித்யா டேனியலிடம் பேசினோம்.

ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் நித்யா டேனியல்
ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் நித்யா டேனியல்

"இதுவரை ஆட்டிசத்துக்காகச் செய்யப்பட்ட ஸ்டெம்செல் தெரபி சிகிச்சைகள் சிலவற்றின் முடிவில், ஸ்டெம்செல் தெரபி மூலமாகக் குழந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பது தெரியவந்துள்ளது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதைத் தற்காலிகமாகத்தான் முன்னேற்ற முடிந்துள்ளது.

ஆட்டிசம்
இருப்பவர்களுக்கு, சென்சரி 'இன்ட்டக்ரேஷன் தெரபி' தரப்பட வேண்டும்

இப்போதைக்கு ஸ்டெம்செல் தெரபி என்பது மனநல சிக்கல்களுக்கான சிகிச்சையாக இருக்கும் என்பது எந்த ஆய்விலும் நிரூபணமாகவில்லை. ஆகவே, அதை மேற்கொள்ளக் கூடாது என்ற கருத்து, உறுதியானது. இதையே இந்தியன் சைக்யாட்ரிக் சொசைட்டியும் இந்த அறிக்கை வழியாகத் தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஸ்டெம்செல் தெரபி பாதி நிலைக்கு வெற்றிகண்டு, அதன்பின் தேங்கியதால், இதன் அடுத்தகட்ட ஆய்வுகள் இங்கு அவசியமாகின்றன. பொதுவாக உடல் கூறுகளில் (உறுப்புகளில்) ஏதாவது பிரச்னை ஏற்பட்டிருந்தால் ஸ்டெம்செல் தெரபி மூலமாக அதைக் குணப்படுத்த முடியும்.

ஆட்டிசம்
ஆட்டிசம்
ADHD குழந்தைகளுக்கு சித்தா, அலோபதி மற்றும் தெரபி சிகிச்சைகள் தரும் பலன்கள் என்னென்ன?!

ஆனால், ஆட்டிசம் என்பது மனநலம் மற்றும் நரம்பியல் சம்பந்தப்பட்டது என்பதால்தான் ஸ்டெம்செல் தெரபி மூலம் குணப்படுத்த முடியுமா என்பது தற்போதைக்கு கேள்விக்குறியாக இருக்கிறது. ஸ்டெம் செல் தெரபி பற்றிய ஆராய்ச்சிகள் மேலும் தொடரப்பட்டு நிரூபிக்கப்பட்ட பின்னரே, ஆட்டிசத்திற்கு தீர்வாக அதை செயல்முறைப்படுத்த முடியும்.

ஆட்டிசத்தை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்றாலும், தற்போதைய மருத்துவ வளர்ச்சிகளின் மூலம், கட்டுப்படுத்த முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்குபேஷனல் தெரபி (Occupational therapy) மற்றும் பிஹேவியர் தெரபி (behaviour therapy) தொடர்ச்சியாகத் தரப்பட வேண்டும். பொதுவாகவே ஆட்டிசம் இருப்பவர்களுக்கு, அவர்களின் மூளை, முன் ஈடுபாட்டில் (pre-occupied) இருக்கும் என்பதால், அவர்களை நாம் உணர்வு ரீதியாகவே அணுக வேண்டும்.

ஆட்டிசம்
ஆட்டிசம்
ஆட்டிசத்தை கட்டுப்படுத்த, ஆக்குபேஷனல் தெரபிதான் உதவும் என்ற விழிப்புணர்வை நாம் அதிகப்படுத்த வேண்டும்.
மனநல மருத்துவர் பூங்கொடி பாலா

அதற்கு `சென்சரி இன்ட்டக்ரேஷன் தெரபி' (sensory integration therapy)-யும் தரப்பட வேண்டும். ஆட்டிசம் சிக்கல் உள்ளவர்களுக்கு, நடத்தைப் பிரச்னைகளும் இருக்கும் என்பதால் அவற்றைச் சரிசெய்ய, Behavioural therapy கொடுப்போம் ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் (Occupational therapist) மூலமாக இந்த தெரபிகளைக் கொடுப்பதுதான் சரியான வழிமுறை" என்கிறார் நித்யா.

இந்த அறிக்கை குறித்து சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் பூங்கொடியிடம் பேசினோம்.

மனநல மருத்துவர் பூங்கொடி பாலா
மனநல மருத்துவர் பூங்கொடி பாலா

"ஆட்டிசக் குறைபாடென்பது, பிறவியிலேயே ஏற்படும் ஒரு பிரச்னை. இதை, மனநலச் சிக்கல் என்று சொல்வதைவிடவும், மூளை நரம்பியல் சார்ந்த சிக்கல் என்று சொல்வதே சரியாக இருக்கும். குறிப்பிட்ட இந்த நரம்புதான் சிக்கலைத் தருகிறது என்றோ, இந்த நியூரான்தான் பிரச்னைக்கான வேர் என்றோ எதுவும் இன்னமும் கண்டறியப்படவில்லை. அதனாலேயே இதற்கான சிகிச்சையும் கண்டறியப்படாமல் இருக்கிறது. ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வும், மக்களிடையே மிகக்குறைவு.

ஸ்டெம்செல் தெரபி, வளர்ந்து வரும் முக்கியமான ஒரு மருத்துவத்துறை. இந்த தெரபி மூலம் புற்றுநோய், தாலசீமியா போன்ற பிரச்னைகளைக்கூட குணப்படுத்த முடியும் என்பதுதான், இதை துஷ்பிரயோகம் செய்ய முயல்பவர்களுக்கு வசதியான விஷயமாக இருக்கிறது.

Vikatan
ஆட்டிசத்தை மூளை நரம்பியல் சார்ந்த சிக்கல் என்று சொல்வதே சரியாக இருக்கும்.
மனநல மருத்துவர் பூங்கொடி பாலா

`ஸ்டெம்செல் மூலம் ஆட்டிசத்தைக் கட்டுப்படுத்தலாம் / குணப்படுத்தலாம்' என்பவர்களின் வாதத்தை உடைக்க, இதை எதிர்க்கும் வகையில் வலுவான ஒரு குரல் தேவை. அதுவே இந்தியன் சைக்யாட்ரிக் சொசைட்டியின் அறிக்கையென நான் நம்புகிறேன்.

Stem cell Therapy
Stem cell Therapy

ஆட்டிசத்தைக் கட்டுப்படுத்த, ஆக்குபேஷனல் தெரபி மட்டும்தான் உதவும் என்ற விழிப்புணர்வை நாம் அதிகப்படுத்த வேண்டும் என்பதையும் இந்த அறிக்கை நமக்குச் சொல்கிறது. அரசும் மக்களும் இணைந்து, வருங்காலங்களில் அதைச் செய்ய வேண்டும்" என்றார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு