Published:Updated:

உடல் எடை குறைத்து ஆரோக்கியம் தரும் எட்டு வடிவ வர்ம நடைபாதை!

8 வடிவ நடைபாதை
News
8 வடிவ நடைபாதை

‘வர்ம மருத்துவம்’ என்பது சித்த மருத்துவத்தின் முக்கிய அங்கம். சித்த மருத்துவக் கட்டமைப்புகளுள் ஒன்றான வர்ம மருத்துவத்தின் அடிப்படையில், இந்த வர்ம நடைபாதை செயல்படுகிறது. வர்மம் என்றதும் ’இந்தியன் தாத்தா’ அடித்து வீழ்த்தும் ’படு வர்ம’ செயல்பாடுகளை நினைத்து அச்சப்பட வேண்டாம்.

நடப்பதுதான் மனிதனின் இயல்பு. அதற்கேற்பவே அவனது உடல் படைக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று நிகழ்ந்துள்ள வாழ்க்கை முறை மாற்றம், நடையைத் தேவையற்றதாக்கிவிட்டது. நடக்கும் தூரத்தில் இருக்கும் கடைக்குக்கூட, வாகனங்களில் ஏறிப் பயணிக்கும் அளவுக்குச் சோம்பேறிகளாகிவிட்டோம்.

நடைப்பயிற்சி
நடைப்பயிற்சி

இதன் காரணமாகப் பல்வேறு நோய்கள் நம் உடலின் கதவை தட்டத் தொடங்கிவிட்டன. நோய்களிலிருந்து தப்ப, கட்டாயம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். நடைப்பயிற்சியில், புதுவிதமாக எட்டு வடிவ வர்ம நடைபாதையை முயன்று பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும். எட்டு வடிவ வர்ம நடைபாதை என்றால் என்ன?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

எப்படி அமைப்பது?

எட்டு வடிவத்தில் பாதை அமைத்து, அதில் கூழாங்கற்களைப் பதித்து, அதில் நடைப்பயிற்சி செய்வதே எட்டு வடிவ நடைபாதை. எட்டு முதல் 10 அடி நீளத்தில் வடக்கு தெற்கு முகமாக எட்டு வடிவத்தில் பாதை அமைத்துக்கொள்ள வேண்டும். அகலம் ஆறு அடியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். அதன்பிறகு, மிதமான வேகத்தில் நடைப்பயிற்சி செய்யலாம்.

8 வடிவ நடைபாதை
8 வடிவ நடைபாதை

எட்டு வடிவ வர்ம நடைமேடை அமைக்க, சில ஆயிரங்கள் செலவு செய்தால், பல லட்சங்கள் செலவுவைக்கும் நோய்களிலிருந்து உங்களை தற்காத்துக்கொள்ள முடியும். பொருட்செல்வத்தைவிட, பல நோய்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம். வீட்டின் மொட்டைமாடி, தோட்டப் பகுதி, முன்புறம் போன்ற இடங்களில் இந்த எட்டு வடிவ வர்ம நடைபாதையை அமைக்கலாம். இல்லையென்றால், சில குடும்பங்கள் ஒன்றிணைந்து பொது இடத்தில் இந்த நடைபாதையை அமைக்கலாம். இந்த நடைப்பயிற்சி, இயற்கையுடன் நமது உடலை நெருக்கமாக்கும். இந்த எட்டு, உடலை வருத்தும் நோய்களின் தாக்கத்துக்கு வைக்கும் ஒரு குட்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பலன்கள் என்னென்ன?

காலணிகள் இல்லாமல், பாதங்களை இயற்கையின் அதிசயமான கூழாங்கற்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும்படி நடக்க வேண்டும். 10 நிமிடம் வலச்சுழி நடை, பத்து நிமிடம் இடச்சுழி நடை, நோய்களுக்கு நிரந்தர விடைதரும். தொடர்ந்து இந்தப் பயிற்சியை மேற்கொள்ளும்போது, உடல் எடையைக் குறைத்து ஆரோக்கிய வாழ்வை மீட்டெடுக்க முடியும். செரிமான உறுப்புகளின் திறன் கூடும்; சர்க்கரை நோய்க்கு கசப்பைக் காட்டும். அதிக ரத்தஅழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும்.

ரத்தஅழுத்தம்
ரத்தஅழுத்தம்

உடலில் ஏற்படும் சோர்வை நீக்குவதுடன், மனத்தில் ஏற்படும் சோர்வையும் நீக்கி உற்சாகமளிக்கும். வாத நோய்களுக்கான முதன்மையான எதிரி, இந்த எட்டு வடிவ வர்ம நடைபாதை. கூழாங்கற்கள் பொருத்திய நடைபாதையில் தினமும் நடக்கும் முதியவர்களின் ரத்தஅழுத்தம் ஓரளவு குறைந்ததாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அதனை முழுமையாகப் பரிசோதித்துப் பார்க்கவேண்டியது அவசியம்.

நான் பணிபுரியும் ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவப் பிரிவில், 8 வடிவ வர்ம நடைபாதை அமைத்துள்ளேன். இது, அப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தினமும், காலையிலும் மாலையிலும் ஊர்ப் பொதுமக்கள் இந்த வர்ம நடைபாதையைப் பயன்படுத்தி, சிறப்பாக உணர்வதாகத் தெரிவிக்கிறார்கள். குதிகால் வலி, இடுப்பு வலி, அதிக ரத்தஅழுத்த நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் ஆகியோரை அதில் நடக்கச் சொல்லி அறிவுறுத்துகிறோம்.

உடல் எடை குறைத்து ஆரோக்கியம் தரும் எட்டு வடிவ வர்ம நடைபாதை!

அடிப்படை என்ன?

எட்டு வடிவ நடைபாதையின் அடிப்படை வர்மம்! ‘வர்ம மருத்துவம்’ என்பது சித்த மருத்துவத்தின் முக்கிய அங்கம். சித்த மருத்துவ கட்டமைப்புகளுள் ஒன்றான வர்ம மருத்துவத்தின் அடிப்படையில் இந்த வர்ம நடைபாதை செயல்படுகிறது. வர்மம் என்றதும் ’இந்தியன் தாத்தா’ அடித்து வீழ்த்தும் ’படு வர்ம’ செயல்பாடுகளை நினைத்து அச்சப்பட வேண்டாம். வர்மத்தில் பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. அதில், நோய்களைக் குணமாக்கும் வர்ம ஆற்றலைத் தூண்டும் புள்ளிகளை அடிப்படையாகக்கொண்டு இந்த வர்ம நடைபாதை செயல்படுவதாகச் சொல்லலாம்.

எட்டு வடிவ நடைபாதை
எட்டு வடிவ நடைபாதை

வர்மப் புள்ளிகளை மருத்துவ முறைப்படி தூண்டுவதன் மூலம், பல்வேறு நோய்களைக் கட்டுக்குள் வைக்கலாம். பழங்கால யுத்தங்களின்போது, அடிபட்ட வீரர்களுக்கு முதலுதவி மருத்துவமாக வர்மம் இருந்தது குறிப்பிடத்தக்கது. நமது உடலின் பல்வேறு பகுதிகளில் `வர்மம்’ எனப்படும் ஆற்றல் புள்ளிகள் குவிந்துகிடக்கின்றன. அந்த வகையில், நமது உள்ளங்காலில் எண்ணற்ற வர்மப் புள்ளிகள் இருக்கின்றன. எட்டு வடிவ நடைபாதையில் உள்ள கூழாங்கற்களின்மீது நடப்பதன் மூலம், உள்ளங்காலில் உள்ள வர்ம ஆற்றல் புள்ளிகள் தூண்டப்படும்.

பொதுமக்களிடையே ‘பெபிள் ஸ்டோன் வாக்கிங்’ எனப்படும் இந்த வர்ம நடைபாதை இப்போது பிரபலமடையத் தொடங்கியிருக்கிறது. ‘அக்குபிரஷர்’, `ரிஃப்ளெக்சாலஜி’ எனப் பல வகைகளில் இம்முறைக்கு நாமகரணம் சூட்டினாலும், நமது பாரம்பர்ய சித்த மருத்துவத்தின் உட்பிரிவான வர்மத்தை முன்னிலைப்படுத்தி, இதை ‘வர்ம நடைபாதை’ என்று அழைப்பதே சிறப்பு! வர்மம், சித்த மருத்துவத்தின் அறிவியலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!

வர்மம்
வர்மம்

8 வடிவத்தின் நீளத்தை ஆறு அடிக்கும் கீழே சுருக்குவதால் அமையப்பெற்றுள்ள சிறிய வட்டப்பாதையில் நடக்கும்போது சிலருக்கு தலைச்சுற்றல் ஏற்படலாம். புதிதாக நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள், கொஞ்சம் கவனமாகச் செய்ய வேண்டும். அளவைச் சுருக்காமல் 10 அடிக்கும் குறையாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த வட்ட வடிவ நடைபாதையின் திசைகள், காந்த அலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும் மித வேகத்தில் நடப்பதே சிறப்பு. வேகமாக நடக்கக்கூடாது. எட்டு, அபசகுனமான எண் அல்ல என்பதற்கு, இந்த எட்டு வடிவ வர்ம நடைபாதை சிறந்த எடுத்துக்காட்டு.

எட்டு வடிவ நடைபாதை
எட்டு வடிவ நடைபாதை

வீடுகள், பூங்காக்கள், மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் இந்த வர்ம நடைபாதையை அமைக்க தொற்றா நோய்கள் யாரையும் நெருங்காது. எட்டு வடிவ வர்ம நடைபாதை... ஆரோக்கியத்தின் குறியீடு.