Published:Updated:

`ஒமிக்ரான் வேரியன்ட் நமது சருமத்தில் 21 மணி நேரம் உயிருடன் இருக்கும்!' - ஆய்வு சொல்வது என்ன?

Covid 19 Outbreak (Representational Image) ( Photo by engin akyurt on Unsplash )

கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாடு சருமத்தில் 21 மணி நேரத்திற்கு மேலாகவும், பிளாஸ்டிக் பரப்புகளில் எட்டு நாள்களுக்கு மேலாகவும் உயிருடன் இருக்கும், மற்ற உருமாற்றங்களுடன் ஒப்பிடும்போது இது வேகமாகப் பரவுவதற்கு இதுவே காரணமாக இருக்கலாம் என்று ஓர் ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

`ஒமிக்ரான் வேரியன்ட் நமது சருமத்தில் 21 மணி நேரம் உயிருடன் இருக்கும்!' - ஆய்வு சொல்வது என்ன?

கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாடு சருமத்தில் 21 மணி நேரத்திற்கு மேலாகவும், பிளாஸ்டிக் பரப்புகளில் எட்டு நாள்களுக்கு மேலாகவும் உயிருடன் இருக்கும், மற்ற உருமாற்றங்களுடன் ஒப்பிடும்போது இது வேகமாகப் பரவுவதற்கு இதுவே காரணமாக இருக்கலாம் என்று ஓர் ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

Published:Updated:
Covid 19 Outbreak (Representational Image) ( Photo by engin akyurt on Unsplash )

கொரோனா பரவ ஆரம்பித்த புதிதில் அந்த வைரஸ் கிருமியானது நாம் கையாளும் பொருள்களில், பரப்புகளில் எல்லாம் இருக்கும் என்று சொல்லப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பொருள்கள், பரப்புகள் போன்றவை அடிக்கடி சுத்தம் செய்யப்பட அறிவுறுத்தப்பட்டது. பிறகு சில மாதங்கள் கழித்து பரப்புகளைச் சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை, கொரோனா வைரஸானது காற்றில்தான் பரவும் என்று சொல்லப்பட்டது. இப்போது வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் ஒமிக்ரான், நம் சருமத்திலும் பிளாஸ்டிக் பரப்புகளிலும் நீண்டநேரம் உயிருடன் இருக்கும் என்ற தகவல் கிளம்பியுள்ளது.

corona virus
corona virus
Pixabay

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாடு சருமத்தில் 21 மணி நேரத்திற்கு மேலாகவும், பிளாஸ்டிக் பரப்புகளில் எட்டு நாள்களுக்கு மேலாகவும் உயிருடன் இருக்கும், மற்ற உருமாற்றங்களுடன் ஒப்பிடும்போது இது வேகமாகப் பரவுவதற்கு இதுவே காரணமாக இருக்கலாம் என்று ஓர் ஆய்வு குறிப்பிட்டுள்ளது. ஜப்பானின் கியோட்டோ ப்ரீஃபெக்சுரல் யுனிவர்சிட்டி ஆஃப் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள், வுஹானில் தோன்றிய SARS-CoV-2 உருமாற்றத்திற்கும், கவலைக்குரிய அனைத்து உருமாற்றங்களுக்கும் இடையிலான வைரஸ் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையில் உள்ள வேறுபாடுகளை ஆய்வு செய்தனர். அதன்படி , ஆல்பா, பீட்டா, டெல்டா மற்றும் ஒமிக்ரான் திரிபுகள் சருமம் மற்றும் பிளாஸ்டிக் பரப்புகளில் இரண்டு மடங்குக்கும் அதிக நேரம் உயிர்வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது. அதன் விளைவாக தொற்றுப் பரவும் வேகம் பெரிய அளவில் இருக்கும் என்று தெரிகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வுஹானில் கண்டறியப்பட்ட வைரஸ் மற்றும் ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா திரிபுகள் பிளாஸ்டிக் பரப்புகளில் சராசரியாக முறையே 56 மணிநேரம், 191.3 மணி நேரம், 156.6 மணி நேரம், 59.3 மணி நேரம் மற்றும் 114 மணி நேரம் உயிருடன் இருப்பதாகவும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. ஒமிக்ரான் மாறுபாடு 193.5 மணி நேரம் உயிர்வாழ முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதுவே சருமத்தில் இவை முறையே 8.6 மணி நேரம் (வுஹான் வைரஸ்), 19.6 மணி நேரம் (ஆல்பா), 19.1 மணி நேரம் (பீட்டா), 11 மணி நேரம் (காமா),16.8 மணி நேரம் (டெல்டா) மற்றும் 21.1 மணி நேரம் (ஒமிக்ரான்) உயிருடன் இருக்கு என்று குறிப்பிடுகிறது.

Corona (Representational Image)
Corona (Representational Image)

எனவே தற்போதைய தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியபடி அடிக்கடி கைகளைக் கழுவுவது, கிருமி நாசினிகளைப் பயன்படுத்துவது போன்றவை பின்பற்றப்பட வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

`தொட்டா பரவாது' என கைகழுவுவதையும், சானிட்டைஸர் உபயோகிப்பதையும் மறந்த மக்கள், இனியும் அப்படி அலட்சியமாக இருப்பது ஆகாது.

- ராஜலட்சுமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism