Published:Updated:

`கொரோனாவைத் தொடர்ந்து பன்றிக் காய்ச்சல் பீதி!' - பெங்களூரில் தற்காலிகமாக மூடப்பட்ட நிறுவனங்கள்

காய்ச்சல்
காய்ச்சல்

பிப்ரவரி 20 முதல் 28 வரை ஊழியர்கள் யாரும் அலுவலகத்துக்கு வர வேண்டாமென்றும், வீட்டில் இருந்தே பணி புரியுமாறும் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் உலகமெங்கும் பரவியுள்ள நிலையில், சீனாவில் கொரோன வைரஸ் தாக்குதலிலிருந்து தங்கள் ஊழியர்களை தற்காக்கும்விதமாகப் பல நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலகங்களை தற்காலிகமாக மூடியுள்ளன. இதேபோன்று பெங்களூரிலும் நடந்துள்ளது. ஆனால், கொரோனாவுக்காக இல்லை, பன்றிக் காய்ச்சலுக்காக.

Mask
Mask

ஜெர்மனைச் சார்ந்த மென்பொருள் நிறுவனம் ஒன்று டெல்லி, கொல்கத்தா மற்றும் பெங்களூரு நகரங்களில் இயங்கிவருகிறது.

பெங்களூரைத் தலைமை இடமாகக்கொண்டு இயங்கும் அந்த மென்பொருள் நிறுவனத்தில், ஆயிரக்கணக்கானோர் பணி புரிந்துவருகின்றனர். இந்நிலையில், அந்நிறுவனத்தின் பெங்களூரு அலுவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இரண்டு பேருக்கு H1N1 பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அந்நிறுவனம், தன் கொல்கத்தா மற்றும் டெல்லி அலுவகங்களையும் தற்காலிகமாக மூடியுள்ளது.

Representational Image
Representational Image

மேலும், பிப்ரவரி 20 முதல் 28 வரை ஊழியர்கள் யாரும் அலுவலகத்துக்கு வர வேண்டாமென்றும், வீட்டில் இருந்தே பணி புரியுமாறும் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தி நிறுவனத்திடம் பேசிய நிறுவன நிர்வாகத்தினர், ``பெங்களூரு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இரண்டு பேருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இரண்டு பேரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

`சீன அரசைக் கொந்தளிக்க வைத்த கொரோனா செய்தி!' - மூன்று பத்திரிகையாளர்களுக்குக் கெடு

மேலும், அவர்களிடமிருந்து, நோய்த்தொற்று நிறுவனத்தில் வேறு யாருக்காவது பரவியிருக்கிறதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். எங்கள் நிறுவன ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்துகிறோம். எனவே, எங்கள் நிறுவனத்தின் கொல்கத்தா, பெங்களூரு மற்றும் டெல்லி அலுவலகக் கிளைகளை தற்காலிகமாக மூடியுள்ளோம். மீண்டும் திறப்பது குறித்து ஊழியர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும். அதுவரை அவர்களை வீட்டிலிருந்தே பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளோம்" என்று குறிப்பிட்டிருந்தனர்.

Lab
Lab

கடந்த 2016-ம் ஆண்டு, பன்றிக் காய்ச்சல் நோயால் இந்தியாவில் மட்டும் சுமார் 42,500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஹைதராபாத்தில், இந்த மாதம் மட்டும் சுமார் 20 பேருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 20 நபர்களும் சீனாவிலிருந்து வந்தவர்கள் என்பதும், கொரோனா வைரஸ் பரிசோதனை செய்துகொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

flu
flu

சீனாவிலிருந்து உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், பெங்களூரில் பன்றிக்காய்ச்சல் பரவியிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. N95 வகை மாஸ்க் பயன்படுத்துவது பன்றிக்காய்ச்சல் வைரஸ் பரவுவதைத் தடுக்கும் என்பதால் மருத்துவர்கள், மக்களை மாஸ்க் அணிந்து கொள்ளுமாறு வலியுறுத்திவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு