Published:Updated:

`தமிழகம் இரண்டாம் கட்டத்தில் இல்லை, நான்காம் கட்டத்துக்கு நகர்ந்துவிட்டது!'- அதிரவைக்கும் மருத்துவர்

கொரோனா
News
கொரோனா

லாக்டௌனால் நோய் பரவும் விகிதம் குறைந்துவிட்டதா? - ஆய்வு சொல்லும் செய்தியும் உண்மைத்தன்மையும்!

இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, சீனாவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. மத்திய சுகாதாரத்துறையோ, `கொரோனாவோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள்' எனச் சொல்லிவிட்டது. `கொரோனாவோடு நாம் வாழவேண்டுமென்றால், மூன்று தொடர் லாக்டௌனுக்குள் இந்தியா சென்றது எதற்கு? முதல் நாளே, இதைச் செய்திருக்கலாமே' என்ற கேள்வியும் நமக்கு எழத்தான் செய்கிறது.

கொரோனா
கொரோனா

இதன் பின்னணியாக மருத்துவர்கள் தரும் விளக்கம், `இடைப்பட்ட இந்தக் காலத்தில், கொரோனாவின் தன்மையை நம்மால் ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடிந்தது. மேலும், தொடக்க காலத்தில் இருந்த அளவுக்கு இப்போது கொரோனா வீரியமாக இல்லை' என்பது. இது ஒரு பக்கம் இருந்தாலும், லாக்டௌன் தளர்வுக்குப் பிறகு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு மிக வேகமாக இருக்கும் என்ற கருத்தும் பரவலாகச் சொல்லப்பட்டு வருகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

லாக்டௌன் நேரத்தில் கொரோனாவின் தன்மை எந்தளவுக்கு மாறியுள்ளது - ஆர்.நாட் எனப்படும் நோய்ப்பரவும் விகிதத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் என்ன என்பது குறித்தும், வருங்காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை எப்படி மாறும் என்பது குறித்தும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின்கீழ் பணிபுரிந்த மூத்த மருத்துவர் சுந்தரராமனிடம் கேட்டோம்.

மருத்துவர் சுந்தரராமன்
மருத்துவர் சுந்தரராமன்

தமிழகம் இரண்டாம் நிலையைத் தாண்டவில்லை என்பது உண்மையா பொய்யா?

பொய். இதன் காரணத்தை அறிந்துகொள்ள, இரண்டாம் நிலைக்கான விளக்கத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

இரண்டாவது நிலை - தொற்றோடு தரையிறங்கிய பயணியொருவர், அதைத் தனது வட்டத்துக்குள் பரப்புவதுதான் லோக்கல் ட்ரான்ஸ்மிஷன் எனப்படும் இரண்டாவது நிலை. இந்த நிலையோடு வைரஸைத் தடுக்க வேண்டுமாயின், பாதிப்புடன் இருக்கும் முதல் நபருக்கு முதல் நிலையிலேயே சிகிச்சை அளிக்க வேண்டும். அவர் யாருடனாவது தொடர்பில் இருந்தால், அவர்களையும் கண்டறிந்து, தனிமைப்படுத்தி, அவர்களுக்கும் ஓய்வுகொடுத்து அடுத்தடுத்த நாள்களில் அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். இப்படிச் செய்யும்போது, தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு கொரோனா இருந்தாலும்கூட, கடந்த நாள்களில் அவர் தனிமைப்படுத்தப்பட்ட காரணத்தால் சமூகத்தில் யாருக்கும் தொற்றைப் பரப்பியிருக்க மாட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் இன்றைக்கு இதுவா நடக்கிறது? கண்டறியப்படும் நபர், ஏற்கெனவே பல நாள்கள் தனிமைப்படுகிறாரா? இல்லையே...! தனிமைப்படுத்தப்பட்ட அடுத்த ஓரிருநாள்களிலேயே தொற்று உறுதிசெய்யப்படுகின்றாரே... அப்படிப் பார்க்கும்போது, நாம் எப்போதோ அடுத்த நிலைக்குச் சென்றுவிட்டோம்.
கொரோனா
கொரோனா

``இன்னும் நாம் இரண்டாவது நிலையிலிருக்கிறோம் என்பதற்கு அரசு வைக்கும் வாதம் என்ன?

கண்டறியப்படும் தொற்றாளர்கள் அனைவருக்குமே, எங்கிருந்து நோய் வந்ததென அரசு கண்டறிந்து விடுவதாகச் சொல்கிறது. அனைவருக்குமே, `தொற்றைத் தந்தவர் யார்' எனக் கண்டறியப்படுவதால், சமூகத்தொற்று இல்லையெனக் கூறி வாதிடுகிறது அரசு.

ஆனால், இப்படி கான்டாக்ட் ட்ரேசிங் மூலம் தொற்றைத் தந்தவரை அறிவதென்பது, எல்லா நிலையிலுமே ஓரளவுக்குச் சாத்தியமான விஷயம்தான். ஏனெனில் கோவிட் - 19 கொரோனா, ஒரு தொற்றுநோய். அதனால், எப்படிப் பார்த்தாலும் யாரேனும் ஒருவரிடமிருந்துதான் இது வந்திருக்க வேண்டும். அந்த யாரோ ஒருவரை அடையாளம் கண்டறிவது இயலாத விஷயமல்ல. ஆகவே, அவரைக் கண்டறிந்துவிட்டால் நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டதெனப் பொருள் கொள்வது தவறு.

தொற்றைத் தந்த நபரை எவ்வளவு சீக்கிரமாக கண்டறிகிறோம் என்பதில்தான் விஷயமே இருக்கிறது. ஏனெனில் அப்போதுதான் தொற்றுக்கு சாத்தியமுள்ள மற்ற நபர்களை நம்மால் விரைந்து கண்காணிப்புக்குள் கொண்டுவர முடியும். ஆகவே, அதில்தான் அரசு கவனம் செலுத்த வேண்டும். விரைவாகக் கண்டறிந்துவிட்டால், விரைவாகத் தனிமைப்படுத்தவும் முடியும். இப்படிச் செய்யும்போது, தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு மட்டுமே தொற்று வரும். சமூகத்துக்குள்ளும் யாருக்கும் வராது. அப்படி ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நபர்களுக்குத் தொற்று ஏற்படுவது மட்டுமே, இரண்டாவது நிலை.

கொரோனா
கொரோனா
இதில் கான்டாக்ட் ட்ரேசிங் செய்யப்படும்போது, கண்டறியப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் - அப்படிக் கண்டறியப்பட்டவருக்கு அடுத்தடுத்த நாள்களில் தொற்று உறுதிசெய்யப்படுவதும் நிலைமை அடுத்தடுத்த கட்டத்துக்கு சென்றதையே குறிக்கும்.
மருத்துவர் சுந்தரராமன்

இந்த இடத்தில், கோயம்பேடு மார்க்கெட்டை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோமே... கோயம்பேடு மார்க்கெட் மூலமாகப் பரவத்தொடங்கியது தெரியவந்து சில நாள்களுக்குப் பிறகுதான், அதாவது தொற்றைப் பெற்றவர்கள் சமூகத்துக்குள் சென்று வாழத்தொடங்கிய பின்னர்தான் அவர்கள் கண்டறியப்பட்டார்கள். அதன்பின்னரே அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அடுத்தடுத்த நாள்களில் பரிசோதிக்கவும் படுகின்றனர். இதில் தொற்றைப் பெற்றதற்கும் - கண்டறியப்பட்டதற்கும் இடைப்பட்ட நாள்களில், சமூகத்தில் அவர்களே நோயைப் பரப்பியிருப்பார்கள். அதுதான் சமூகப் பரவல். மீண்டும் சொல்கிறேன், சமூகப் பரவலிலும் கான்டாக்ட் ட்ரேசிங் சாத்தியம்தான். ஆகவே கான்டாக்ட்டை ட்ரேஸ் செய்துவிட்டோம் என்பதால் மட்டுமே, நாம் இரண்டாம் கட்டத்தில் இருக்கிறோம் எனப் பொருள் இல்லை.

சமீபத்திய ஆய்வொன்றில், நீங்கள் குறிப்பிடும் ஆர்.நாட். எண், லாக்டௌனுக்கு முன் 3.69 என்றிருந்ததாகவும், இப்போது லாக்டௌன் முடிவில் 1.09 என்றாகிவிட்டதாகவும் கூறியிருக்கிறார்கள். இதன்படி, இப்போதே ஆர்.நாட் 1-க்கு வந்துவிட்டது. எனில், விரைவில் பூஜ்ஜியத்தை நோக்கி நாம் சென்றுவிடுவோமா?

இந்த எண்ணிக்கை, தமிழகத்துக்கான ஆய்வு முடிவாக இருக்கக்கூடுமென நான் நினைக்கிறேன். இதிலுள்ள சிக்கல் என்னவென்றால், ஆர்.நாட் எண்ணை நாம் நம் ஊருக்கு மட்டும் என சராசரியாகப் பார்க்கக் கூடாது. இந்திய அளவில்தான் பார்க்க வேண்டும்.

இந்தியா என எடுத்துக்கொண்டால், முதல் நூறு நோயாளிகள் வருவதற்கு, நமக்கு இரண்டு மாதங்கள் ஆயின. ஆனால், அடுத்த ஒரு மாதத்தில் (ஏப்ரல் தொடக்கத்தில்) இந்த எண்ணிக்கை 5,000 என்பதைத் தாண்டியது. அடுத்த ஒரு மாதத்தில் (மே தொடக்கத்தில்), இது 60,000 என்றானது. இந்த வேகத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இவை எல்லாம், லாக்டௌன் அமலில் இருந்த காலத்தில் நடந்தவை. லாக்டௌன் தளர்வுக்குப் பின், எண்ணிக்கை அதிகரிப்பதையும் நாம் பார்க்கத்தான் போகிறோம். எண்ணிக்கை அதிகரிக்கும்போது, ஒருவரிடமிருந்து எத்தனை பேருக்குப் பரவியுள்ளது என்ற எண்ணும் (ஆர்.நாட்) மாறும். பெரும்பாலும் அது அதிகரிக்கவே செய்யும்.

கொரோனா
கொரோனா

பரிசோதனை விஷயத்தில் இந்தியா இன்னும் வேகம் காட்டினால்தான் இன்னும் பல நோயாளிகளைக் கண்டறிய முடியும்.

ஆகவே லாக்டௌன் தளர்வுக்குப் பிறகு பரவும் எண்ணிக்கை, பரிசோதனை அதிகரித்த பின் வரும் எண்ணிக்கை போன்றவற்றையெல்லாம் வைத்துதான் நாம் ஆர்.நாட்டை கணக்கிட வேண்டுமே தவிர, இப்போதே தோராயமாகக் கணக்கிடுவது, சரியல்ல. மேலும், அந்தக் கணிப்பை வைத்து வருங்காலத்தில் நாம் சரியாகிவிடுவோம் என நம்புவதும் சரியல்ல.

நோயானது, ஒருவரிடமிருந்து எத்தனை பேருக்குப் பரவுகிறது என்பதை ஆர். நாட் என்ற எண்ணின் அடிப்படையில் சொல்வோம். இந்த ஆர்.நாட் எண், 1 என்பதற்குக் குறைவாக மாற வேண்டும். அதாவது, ஒருவரிடமிருந்து பூஜ்ஜியத்து சொச்சம் பேருக்கு நோய் பரவுகிற நிலையை நாம் எட்ட வேண்டும். அப்போதுதான் எண்டெமிக் என்ற இறுதி நிலையை நாம் அடைந்துள்ளோம் என அர்த்தம்

``நோயாளிகள் எண்ணிக்கையைத் தாமதப்படுத்த, லாக்டௌன் நீட்டிப்பு இல்லாமல் வேறென்ன வழிகளெல்லாம் இருக்கின்றன?"

இந்தியா முழுவதும் பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். மூன்று நாள்களுக்கு மேல் காய்ச்சல் - இருமல் தெரிய வருபவர்களை, உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துத் தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும். அந்த நோயாளிக்கு பாதிப்பு எவ்வளவு குறைவாக இருந்தாலும், மருத்துவ சிகிச்சை அவசியம். இதற்கு, மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்

நாட்டில் எந்த இடத்தில் நோயாளி தெரியவந்தாலும், அவரோடு தொடர்பிலிருந்த அத்தனை பேரும் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கும் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். கோயம்பேடு சூழலைப் போல கொத்துக் கொத்தாக நோயாளிகள் வரும் வரையில், பிரச்னையை வளர்க்கக் கூடாது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இதற்கிடையில், அறிகுறிகளற்றவர்கள் நம்மிடையே அதிகமென்பதையும் யோசிக்க வேண்டியுள்ளது. விஷயம் என்னவென்றால், பெரும்பாலான நேரத்தில் கான்டாக்ட் ட்ரேசிங் மூலம் இவர்களைக் கண்டறிந்துவிடலாம் என்பதால் இவர்களை நினைத்துக் கவலைகொள்ள வேண்டியதில்லை. ஒருவேளை இவர்கள் கண்டறியப்படாமல் விடப்பட்டாலும், இவர்கள் தீவிர சிக்கலைத் தர மாட்டார்கள். காரணம், ஒப்பீட்டளவில் இவர்கள் நோயைப் பரப்பும் விகிதம் குறைவுதான்.