Published:Updated:

உலகிலேயே முதல்முறை - சிகரெட் பழக்கத்தால் சிறுவனுக்கு ஏற்பட்ட `பாப்கார்ன் நுரையீரல்!’

சிகரெட் பழக்கம்
சிகரெட் பழக்கம்

சிறுவனுக்கு ஏற்பட்டிருப்பது என்ன வகையான சுவாசப் பிரச்னை என்பதைக் கண்டறிவதற்காக மருத்துவமனையில் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அனைத்திலும் முடிவு `நெகட்டிவ்' என்றே வந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சிகரெட் மட்டுமல்லாமல் இ-சிகரெட் புகைப்பழக்கத்தால் பல்வேறு நோய்களுக்கும் மக்கள் ஆளாகி வருகின்றனர். ஆபத்து குறைவு என்று விளம்பரப்படுத்தப்பட்ட இ-சிகரெட்டிலும் சாதாரண சிகரட்டைப் போன்றே ஆபத்துகள் நிறைந்திருக்கின்றன என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.

e-cigarette
e-cigarette

இந்நிலையில் இ-சிகரெட் பழக்கத்தால் ஏற்படும் வியாதிகளின் பட்டியலில் தற்போது புதிதாகச் சேர்ந்திருக்கிறது, பாப்கார்ன் நுரையீரல் (Popcorn Lung) எனும் நோய். கனடாவைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவனுக்கு உலகத்திலேயே முதன்முறையாக, இ-சிகரெட் புகைத்ததால் இந்த நோய் ஏற்பட்டிருக்கிறது. இதைச் சிறுவனிடம் கண்டறிந்த மருத்துவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட சிறுவன் கடந்த ஐந்து மாதங்களாகத் தொடர்ந்து தினமும் இ-சிகரெட் புகைத்து வந்துள்ளான். இதனால் கடும் இருமலுடன்கூடிய காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்னை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சிறுவனுக்கு ஏற்பட்டிருப்பது என்ன வகையான சுவாசப் பிரச்னை என்பதைக் கண்டறிவதற்காக மருத்துவமனையில் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அனைத்திலும் முடிவு `நெகட்டிவ்' என்றே வந்தது.

Lungs
Lungs

இறுதியாக இமேஜிங் பரிசோதனை செய்தபோது மூச்சு நுண்குழாய் அழற்சி (Bronchiolitis) எனக் காட்டியது. இதனால் குழப்பமடைந்த மருத்துவர்கள், ஒருவேளை இது 'பாப்கார்ன் நுரையீரல்' பிரச்னையாக இருக்குமோ எனச் சந்தேகித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அது என்ன பாப்கார்ன் நுரையீரல்?

மருத்துவத் துறையில் இந்தப் பிரச்னையை 'ப்ரான்குலைட்டிஸ் ஆப்லிடெரன்ஸ் (Bronchiolitis obliterans)' என்றழைப்பர். ரசாயனங்களை நுகர்வதால் நுரையீரலில் இருக்கும் நுண்துளைகள் (Bronchioles) சேதமடைந்து, வீங்கிப்போவதுதான் இந்தப் பிரச்னை.

e-cigarette
e-cigarette

பத்தாண்டுகளுக்கு முன்பு 'மைக்ரோவேவ் பாப்கார்ன்' தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இந்த நோய் வந்தது. பாப்கார்ன் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் டைஅசிடைல்(Diacetyl) எனும் வேதிப்பொருளை நுகர்ந்ததால் இந்தப் பிரச்னை ஏற்பட்டது. முதன்முதலில் பாப்கார்ன் தொழில்சாறை பணியாளர்களிடம் இதைக் கண்டறிந்ததால், அதன் பெயராலேயே இந்த நோய் அழைக்கப்படுகிறது. பாப்கார்ன் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் இ-சிகரெட்டிலும் பயன்படுத்தப்படுகிறது.

Vikatan

இந்த நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன், 47 நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டது. நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்வதிலிருந்து நூலிழையில் சிறுவன் தப்பித்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

e-cigarette
e-cigarette

இந்திய அரசு, கடந்த செப்டம்பர் மாதம் இ-சிகரெட் பயன்பாட்டுக்குத் தடை விதித்தது. எனினும், நிகோட்டின்(Nicotine) சிகரெட் பயன்பாடு இளைஞர்களிடமும் பெரியவர்களிடமும் பெருகி வருவது ஆரோக்கியமான எதிர்காலத்தின் மீது கேள்விக்குறியை உண்டாக்குகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு