Published:Updated:

தற்காலிக பார்வையிழப்பு... அறிகுறிகளும் தீர்வுகளும் |கண்கள் பத்திரம் - 27

Eyes

மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியால் சிலருக்கு தற்காலிக பார்வையிழப்பு ஏற்படலாம். தவிர, ஆப்தல்மோப்ளெஜிக் மைக்ரேன் (Ophthalmoplegic migraine) எனும் பிரச்னையாலும், தற்காலிக பார்வையிழப்பு ஏற்படலாம். கண்களில் ஃபிளாஷ் அடிப்பது, பார்வையில் தடுமாற்றம் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்.

தற்காலிக பார்வையிழப்பு... அறிகுறிகளும் தீர்வுகளும் |கண்கள் பத்திரம் - 27

மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியால் சிலருக்கு தற்காலிக பார்வையிழப்பு ஏற்படலாம். தவிர, ஆப்தல்மோப்ளெஜிக் மைக்ரேன் (Ophthalmoplegic migraine) எனும் பிரச்னையாலும், தற்காலிக பார்வையிழப்பு ஏற்படலாம். கண்களில் ஃபிளாஷ் அடிப்பது, பார்வையில் தடுமாற்றம் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்.

Published:Updated:
Eyes

ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் என்றொரு விஷயம் கேள்விப்பட்டிருப்பீர்கள்... ஷார்ட் டேர்ம் விஷன் லாஸ் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

தற்காலிகமாகப் பார்வையிழப்பு ஏற்படும் அந்த பிரச்னை குறித்து விரிவாகப் பேசுகிறார், சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிகிச்சை மருத்துவர் வசுமதி வேதாந்தம்...

கண்கள்
கண்கள்

``குறுகிய காலத்துக்கு நினைவாற்றல் பறிபோய் திரும்புவதை `ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ்' என்கிறோம். அதே போல குறுகிய காலத்துக்கு பார்வையிழப்பு ஏற்படுவதை `ஷார்ட் டேர்ம் விஷன் லாஸ்' என்கிறோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைக் கண் மருத்துவத்தில் `அமௌரோசிஸ் ஃபியூகே' (Amaurosis fugax) என்கிறோம். இந்த பிரச்னையில் கண்ணுக்கு முன்பு மேலிருந்து ஒரு திரை கீழே இறங்கி, கீழிருந்து மேலே போகும். இது சில நொடிகள் முதல் அரிதாகச் சிலருக்கு ஒரு நிமிடம் வரைகூட நீடிக்கலாம். இது பொதுவாக ஒரு கண்ணை மட்டும் பாதிக்கும். ஸ்ட்ரோக் எனும் பக்கவாதம் ஏற்படுவதற்கு முன் ஏற்படும் Transient Ischemic Attacks எனும் நிலையிலும் இப்படி தற்காலிக பார்வையிழப்பு ஏற்படலாம்.

இந்த பிரச்னையை முதல்முறை உணர்ந்தாலே அந்த நபர்கள் உஷாராகி, உடனே கண் மருத்துவரை அணுக வேண்டும். அது தவிர முழுஉடல் பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும். ரத்த அழுத்தமும், ரத்தச் சர்க்கரையும் கட்டுப்பாட்டில் இருக்கின்றனவா, இதயத்தின் செயல்திறன் சரியாக இருக்கிறதா என்றெல்லாம் பார்க்க வேண்டும்.

பார்வை
பார்வை

குறிப்பாக, இதய ஆரோக்கியத்தை உறுதிசெய்ய டிரெட்மில் டெஸ்ட், இசிஜி, எக்கோ கார்டியோகிராபி போன்றவற்றைச் செய்து பார்க்க வேண்டும். ஏனெனில், இத்தகைய பாதிப்புகளின் விளைவாகக்கூட கண்களுக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் திடீர் அடைப்பு ஏற்பட்டு, திடீரென பார்வை மங்குவதும் பிறகு தானாகச் சரியாவதும் நடக்கும்.

இவை தவிர, சில நேரங்களில் கண்களில் ஏற்படும் அதீத வறட்சியின் காரணமாகவும் தற்காலிக பார்வையிழப்பு ஏற்படலாம். கடந்த சில வருடங்களாக மாஸ்க் அணியும் பழக்கத்தைப் பின்பற்றுகிறோம். அதனால் Mask-associated dry eye disease எனும் பிரச்னை ஏற்பட்டு கண்ணின் மேற்பரப்பு மற்றும் கண்ணீர் படலம் பாதிக்கப்பட்டு அதன் விளைவாகக் கண்களில் வறட்சி, எரிச்சல் மற்றும் தற்காலிக பார்வையிழப்பு போன்றவை ஏற்படலாம்.

அடுத்து மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியின் காரணமாகவும் சிலருக்கு இப்படி தற்காலிக பார்வையிழப்பு ஏற்படலாம். தவிர ஆப்தல்மோப்ளெஜிக் மைக்ரேன் (Ophthalmoplegic migraine) எனும் பிரச்னையாலும் தற்காலிக பார்வையிழப்பு ஏற்படலாம். இந்த வகை மைக்ரேனில் தலைவலிதான் வரும் என்றில்லை. கண்களில் ஃபிளாஷ் அடிப்பது, பார்வையில் தடுமாற்றம் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்.

டாக்டர் வசுமதி வேதாந்தம்
டாக்டர் வசுமதி வேதாந்தம்

தீர்வுகள்..?

வாழ்வியல் முறையில் மாற்றங்கள் அவசியம். காபி, டீ அளவை குறைக்க வேண்டும்.

ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கைக்குப் பழக வேண்டும்.

ஆழ்ந்த உறக்கம் மிக அவசியம்.

தற்காலிக பார்வையிழப்புக்கான லேசான அறிகுறியை உணர்ந்தாலே ஓய்வெடுக்க வேண்டும்.

மைக்ரேன் பாதிப்புள்ளவர்களுக்கு அதற்கான அருமையான மருந்துகள் இன்று வந்துவிட்டன. மருத்துவ ஆலோசனையோடு அவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

வருடம் ஒருமுறையாவது முழுஉடல் பரிசோதனை செய்துபார்ப்பது அவசியம்.

- பார்ப்போம்

- ராஜலட்சுமி

பார்வை தொடர்பான உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள். பதில் சொல்லக் காத்திருக்கிறார் டாக்டர் வசுமதி வேதாந்தம்.