Published:Updated:

`டெஸ்ட், டெஸ்ட், டெஸ்ட்!' - உலக நாடுகளை வலியுறுத்தும் உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார நிறுவனம்
உலக சுகாதார நிறுவனம்

இந்த வைரஸ் பரவலைத் தடுக்க ஒரே வழி, இதன் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவருவது மட்டும்தான்.

உலகளவில் தற்போது மிகப்பெரும் பேசுபொருளாகியுள்ள கோவிட் - 19 கொரோனா வைரஸ், உலகளவில் ஏற்படுத்திவரும் பாதிப்புகள் குறித்து, அவ்வப்போது பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தி தெரிவித்து வருகின்றனர் உலக சுகாதார நிறுவனத்தினர்.

கோவிட் - 19
கோவிட் - 19

அந்த வகையில் முதன்மை அதிகாரி டெட்ராஸ் அதேனாம் நேற்று முன்தினம் (மார்ச்-16) நிகழ்த்திய உரையில் குறிப்பிட்ட தகவல்களின் சிறு தொகுப்பு இங்கே.

``கை கழுவுதல், ஹேண்ட்வாஷ் மற்றும் ஹேண்ட் சானிட்டைசர், இருமல், தும்மல் இருந்தால் தனிமையில் இருப்பது, இருமும்போதும் தும்மும்போதும் கைக்குட்டை அல்லது டிஷ்யூ பயன்படுத்துவது போன்றவற்றோடு சேர்த்து, அடுத்த சில வாரங்களுக்கு சமூகத் தொடர்பிலிருந்து ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே விடுவித்துக்கொள்வது, கொரோனாவுக்கான சிறந்த தடுப்பு நடவடிக்கையாக இருக்கும். உதாரணமாக, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்படுவது, விளையாட்டு நிகழ்ச்சிகள் நிறுத்தப்படுவது, கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்படுவது, ஒத்திவைக்கப்படுவது போன்றவை உலகம் முழுக்க மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அனைத்து நாடுகளும் அதன் அரசுகளும், அடுத்தடுத்த வாரங்களில் நீங்கள் எதிர்கொள்ளவிருக்கும் சூழலைக் கணக்கில்கொண்டு உங்களின் மருத்துவ சக்திகளை விரிவுபடுத்தவும்.

கொரோனா சந்தேகங்களும் உலக சுகாதார நிறுவனத்தின் விளக்கங்களும்! #VikatanPhotoCards

இந்த வைரஸ் பரவலைத் தடுக்க ஒரே வழி, இதன் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவருவது மட்டும்தான். Just Break the Chain. அதற்கு நாம் அனைவரும் நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களை உடனடியாகத் தனிமைப்படுத்த வேண்டும். ஒருவேளை இதில் பின்னடைவு ஏற்பட்டால், நோய்பரவுதல் மிக மிகத் தீவிரமாக இருக்கும். ஆகவே, அரசுகள் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் இருங்கள்.

கொரோனா
கொரோனா

அனைத்து நாட்டின் அரசுகளுக்கும் எங்களின் கோரிக்கை மற்றும் செய்தி ஒன்றுதான். அது `டெஸ்ட், டெஸ்ட், டெஸ்ட்'. நோய் இருக்கக்கூடுமோ என நீங்கள் சந்தேகிக்கும் ஒவ்வொருவரையும் பரிசோதியுங்கள். அவர்களில் யாருக்கேனும் நோய் உறுதிசெய்யப்பட்டால் அவர்களை உடனடியாகத் தனிமைப்படுத்தி, சிகிச்சை அளியுங்கள். கூடுதலாக, கடந்த நாள்களில் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களுக்கும் கோவிட் - 19 பரிசோதனையைச் செய்யுங்கள்.

மீண்டும் சொல்கிறோம் - டெஸ்ட், டெஸ்ட், டெஸ்ட்!'

இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார் டெட்ராஸ்.

அடுத்த கட்டுரைக்கு