Published:Updated:

`ஆய்வுகளுக்குப் பின்னரும் கொரோனா வைரஸின் தன்மை புரியாத புதிர்!' - மிரளும் ஆய்வாளர்கள்

 Test
Test

இத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்பதே, சமீபத்திய ஆராய்ச்சிகள் தரும் முடிவுகள் என்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஊரடங்கு பரவலாகத் தளர்த்தப்பட்டுவரும் போதிலும் நாம் நமது சுயகட்டுப்பாடுகளைத் தளர்த்திவிடக் கூடாது என எச்சரிக்கும் வகையில் வெளியாகி வருகின்றன, கோவிட்-19 தொடர்பான பல ஆய்வு முடிவுகள்.

corona
corona

மிகச் சிறந்த பாதுகாப்பை வழங்கும் N95 வகை மாஸ்க்குகள் மருத்துவத்துறையின் பயன்பாட்டுக்குரியது என்பதால், பொதுமக்கள் மற்ற மாஸ்க்குகளைப் பயன்படுத்தலாம். பொதுவாக நாம் அணியும் ஒரு லேயர் கொண்ட முகக்கவசங்கள் வைரஸ் பரவலைத் தடுப்பதில் மிகக் குறைந்த செயல்திறனே பெற்றிருக்கும்.

செந்தில் பாலாஜிக்குப் புது `செக்', ராமதாஸ் சொன்ன அந்தத் தலைவர் யார்? - கழுகார் அப்டேட்ஸ்!

எனவே, இரண்டடுக்கு, மூன்றடுக்கு மாஸ்க்குகளே சிறந்தவை. மாஸ்க் அணிந்தாலும்கூட மக்கள் ஒருவரைவிட்டு ஒருவர் குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு நிற்கும் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். இரண்டு மீட்டர் இடைவெளி இன்னும் நல்லது. கண் மூலமும் கொரோனா வைரஸ் உடலுக்குள் நுழையும் ஆபத்து உள்ளதால் கண்ணாடி அணிவதையும் வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

Testing lab
Testing lab

இத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்பதே, சமீபத்திய ஆராய்ச்சிகள் தரும் முடிவுகள். அவை அதிர்ச்சியளிக்கின்றன

இத்தனை நாள்கள் கடந்தும், கொரோனா வைரஸின் தன்மையும் பரவும் விதமும் புதிராகவே உள்ளன. இதனால் குழப்பமடைந்துள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸுடன் தொடர்புடைய சார்ஸ் மற்றும் மெர்ஸ் போன்ற வைரஸ்கள் மீதான ஆய்வுகளில் மேலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

test
test

கொரோனா வைரஸ் தொடர்பான 7 நேரடி ஆய்வுகள் உட்பட 44 ஆய்வுகளின் முடிவுகள், மீண்டும் சார்ஸ், மெர்ஸ் மீதான கவனத்தையே அதிகரிக்கத் தூண்டுகின்றன.

ஆய்வின் திசையை இனியும் மாற்றுமா கொரோனா..?

அடுத்த கட்டுரைக்கு