Published:Updated:

இவர்கள் இருப்பதால் நாம் இருக்கிறோம்!

கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா

மாநிலங்களில் கொரோனா பாசிட்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது

இவர்கள் இருப்பதால் நாம் இருக்கிறோம்!

மாநிலங்களில் கொரோனா பாசிட்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது

Published:Updated:
கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா
இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் - 19 பாதிப்பாளர்களின் எண்ணிக்கை குறித்த கட்டுரையை எழுத ஆரம்பித்து முடிப்பதற்குள், எண்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன.

மாநிலங்களில் கொரோனா பாசிட்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. கொரோனா பரவலின் முக்கியமான நான்காவது வாரத்துக்குள் பயணிக்கிறது இந்தியா. கொரோனா பாதித்தவர்களுக்கான சிகிச்சைப்பணிகளில் தீவிரமாக இருக்கும் இவர்களிடம் பேசினோம்.

இவர்கள் இருப்பதால் நாம்
இருக்கிறோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘`மூன்று ஷிஃப்ட் வேலை!’’

மதுரை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் ஒருவரிடம் பேசினோம். ‘`இந்தப் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரின் சேவை இணையற்றது. இச்சேவையில் யாருடைய பங்களிப்பையும் தனித்துக் கூற முடியாது. தினந்தோறும் வருகிற செய்திகளைப் பார்த்து மருத்துவத்துறைப் பணியாளர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். ஆனால், நாங்கள் மக்களைக் காக்கும் முனைப்புடன் போருக்குத் தயாரான மனநிலையிலேயே இருக்கிறோம். மருத்துவப் பேரிடர்ச் சூழலில் விடுப்பைப் பற்றி நினைக்காமல், வீட்டுக்குச் சென்ற பிறகும் உடலிலும் உடையிலும் மருந்துகளை அடித்துக்கொள்கிறோம். குழந்தைகளிடம்கூட நெருங்காமல் எங்களைத் தனிமைப்படுத்திக்கொள்கிறோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
இவர்கள் இருப்பதால் நாம்
இருக்கிறோம்!

கொரோனா சிறப்புப் பிரிவில் மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் மூன்று ஷிஃப்ட்களாக வேலைசெய்கிறோம். இவர்கள், கொரோனா பாதிப்பாளர்களைவிட அதிக பாதுகாப்புடன் இருக்க வேண்டியவர்கள். ஏனெனில் இவர்கள் பாதிக்கப்பட்டால் சிகிச்சைச் சங்கிலியும் பாதிக்கப்படும். கேரளாவில் ஒரு டாக்டருக்குக் கொரோனா தொற்று ஏற்பட, அவருடன் இருந்த 25 டாக்டர்களையும் தனிமைப்படுத்தியது நினைவிருக்கலாம். நாங்கள் கோருவது ஒன்றுதான்... மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, கொரோனா பரவலைத் தடுக்கக் கைகொடுங்கள். ‘உங்களுக்காக நாங்கள் இங்கே இருக்கிறோம், எங்களுக்காக நீங்கள் வீட்டில் இருங்கள்’ என்று மருத்துவர்கள் கைகூப்பும் வாட்ஸப் ஃபார்வர்டுகளைப் பார்த்திருப்பீர்கள். நிலைமை அதுதான்’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘`சிக்குன் குனியா, டெங்கு காலங்களைவிட இரண்டு மடங்கு உழைக்கிறோம்!”

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையின் மூத்த மருத்துவ அலுவலர் ஒருவர், “காலரா, சிக்குன் குனியா, டெங்கு, பன்றிக்காய்ச்சல் எனப் பல நோய்களைக் கடந்து வந்துள்ளோம். அந்த நோய்களுக்கெல்லாம் உழைத்ததைவிட, இரண்டு மடங்கு அதிகமாகக் கொரோனா பரவலைத் தடுக்க உழைக்கிறோம். கொரோனா அறிகுறிகளாகச் சொல்லப்படும் சாதாரண இருமல், சளி, காய்ச்சலுடன் நாளொன்றுக்கு 5,000 பேர் வருகிறார்கள். அவர்களில் தீவிரப் பிரச்னை உள்ளவர்களுக்குப் பரிசோதனை செய்யப்படுகிறது. இப்போது ஒரு பாசிட்டிவ் கேஸ் கண்டறியப்பட்டு சிகிச்சையில் உள்ளார். கொரோனா சிறப்பு வார்டில் வென்டிலேட்டர், மானிட்டர் என்று அனைத்து வசதிகளும் உள்ளன. கலெக்டர், சுகாதாரத்துறைத் துணை இயக்குநர், கோவை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர், அனைத்துத்துறைத் தலைவர்கள், மூத்த பேராசிரியர்கள் என அனைவரும் தினசரி வார்டைப் பார்வையி டுகின்றனர். அனுபவமிக்க மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

இவர்கள் இருப்பதால் நாம்
இருக்கிறோம்!

கொரோனா பரிசோதனையில், சிலருக்கு மற்ற நோய்கள் அடையாளம் காணப்படுகின்றன. சமீபத்தில் ஒரு நோயாளிக்குக் கொரோனா சோதனை செய்தபோது, அவருக்கு ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் எனத் தெரியவந்து சிகிச்சை ஆரம்பிக்கப் பட்டது. கொரோனா பரிசோதனைக்கு வரும் நோயாளிகளுக்கு நம்பிக்கை கொடுத்து உறுதுணையாக இருக்கிறோம். இந்தச் சூழலை அலர்ட்டாகவும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்வோம்’’ என்றார்.

‘`ஒரே நேரத்தில் 30 மாதிரிகளைச் சோதிக்கிறோம்!”

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், கொரோனா பரிசோதனைக்காக இந்தியா முழுக்க 111 ஆய்வகங்களை அனுமதித்துள்ளது. தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்ட ஏழு ஆய்வகங்களில், தேனி, கானாவிலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் உள்ள ஆய்வகமும் ஒன்று. அங்கு நடக்கும் பணிகள் குறித்து, அங்கு பணியாற்றும் மருத்துவர் ஒருவரிடம் கேட்டறிந்தோம். ‘`சந்தேகிக்கப்படும் நபரின் ரத்த மாதிரிகளும், மூக்கு மற்றும் அடித்தொண் டையில் உள்ள சளி மாதிரிகளும் சேகரிக்கப்படும். அவை, காற்றுப்புகாத டப்பாக்களில் வைக்கப்பட்டு, ஆய்வகத்துக்கு அனுப்பப்படும்.

இவர்கள் இருப்பதால் நாம்
இருக்கிறோம்!

இங்கு, மாதிரிகளை பி.சி.ஆர் அல்லது ரியல் டைம் பி.சி.ஆர்(Polymerase Chain Reaction – PCR) என அழைக்கப்படும் கருவியில் வைத்து சோதனை செய்வோம். இக்கருவியில் வைக்கப்படும் மாதிரிகளின் மரபணுக்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு, அதில் உள்ள கோவிட்-19 வைரஸ் இனம் காணப்படும். இக்கருவியில் அனைத்து விதமான வைரஸ்களையும் கண்டுபிடிக்க முடியும். பரிசோதனைக்கு நான்கு மணி நேரம் ஆகும். ஒரு கருவியில் ஒரே நேரத்தில் 40 மாதிரிகளைச் சோதிக்க முடியும். ஆனால், 20 முதல் 30 மாதிரிகள்வரை சோதித்தால், முடிவு துல்லியமாக இருக்கும். இப்பரிசோதனையைத் தனியார் மருத்துவமனை ஆய்வகங்களில் மேற்கொள்ள 4500ரூ என நிர்ணயம் செய்திருக்கிறது மத்திய அரசு. ” என்றார்.

‘`நிபா அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம்!”

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்கியபோது சுகாதாரத்துறைச் செயலாளராக இருந்தவர் ராஜிவ் சதானந்தன். நிபா பாதிப்பின்போது, ‘வைரஸ் தொற்று பாதித்தவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும். தொற்று உள்ளதாகக் கண்டறியப் பட்டவர்கள் 14 நாள்களில் சென்ற இடங்கள், தொடர்பு கொண்ட நபர்கள் ஆகியோரைக் கண்டறிந்து அவர்களையும் கண்காணிக்க வேண்டும்’ என்ற உத்தியைக் கையாண்டவர் ராஜிவ் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் பேசினோம், “சார்ஸ் நோய் 2002-ம் ஆண்டு சீனாவைத் தாக்கியபோது அவர்கள் கடைப்பிடித்த உத்தியைத்தான், இம்முறையும் அவர்கள் கையாள்கிறார்கள். அதேபோல, நாங்கள் கேரளாவில், கடந்த ஆண்டு நிபா வைரஸ் தாக்கியபோது பெற்ற அனுபவங்களைத் தற்போது பயன்படுத்துகிறோம்.

இவர்கள் இருப்பதால் நாம்
இருக்கிறோம்!

கொரோனா பரவ ஆரம்பித்த காலங்களில் சீனாவிலிருந்து வந்தவர்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்ததால் முதல் கட்டத்தில் பெரிதாகப் பரவவில்லை. ஆனால், இத்தாலியிலிருந்து வந்தவர்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் வராததால், கொரோனா பரவிவிட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கு முந்தைய 14 நாள்களில் சென்ற இடங்களின் ரூட் மேப் தயாரித்து வெளியிடுகிறோம். அதைப் பார்த்து, அந்த நேரங்களில், அந்த இடங்களிலெல்லாம் இருந்தவர்கள் தாங்களாகவே மருத்துவமனைக்கு வந்து சோதனை செய்துகொள்கிறார்கள். மேலும் நாங்களும் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டுபிடித்து 14 நாள்கள் கண்காணித்து, அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்று மாதிரிகளைச் சோதனைக்கு அனுப்புகிறோம். மாநிலம் முழுவதும் 50 ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளன. கொச்சி விமான நிலையத்தில் மட்டும் 27 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன’’ என்றார்.

‘`வீட்டுக்குப் போகமாட்டோம்!”

கொச்சி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் ஒன்றின் டிரைவர் அபிஜித்திடம் பேசினோம். “மார்ச் 10-ம் தேதி முதல் கொரோனா நோய்க்கான ஆம்புலன்ஸ் டிரைவராகப் பணிபுரிந்துவருகிறேன். விமான நிலையப் பரிசோ தனையில் கொரோனா அறிகுறி உள்ளவர்களை உடனடியாக எர்ணாகுளம் களமசேரி மெடிக்கல் காலேஜுக்குக் கொண்டுசெல்கிறோம். அங்கேயே காத்திருந்து, நெகட்டிவ் ரிசல்ட் வருபவர்களைக் கோழிக்கோடு, திருவனந்தபுரம்வரையெல்லாம் சென்று வீடுவரை விடுகிறோம். 10, 15 மணி நேர வேலையாகிவிடும். பிறகு ஆம்புலன்ஸில் கிருமிநாசினி உள்ளிட்டவற்றைத் தெளித்து, இரண்டு மணி நேரம் கதவுகளைத் திறந்து வெயில் படும்படி விடுகிறோம்.

இவர்கள் இருப்பதால் நாம்
இருக்கிறோம்!

எங்களுக்கு முகம், கண், உடல் முழுவதும் மறைக்கக் கிட் வழங்கப்பட்டுள்ளது. என்றாலும், பரவல் அச்சத்தில் வீட்டுக்குச் செல்வதில்லை. வீடியோ காலில் மனைவி, குழந்தைகளிடம் பேசி வருகிறோம். கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டுத்தான் நாங்களெல்லாம் வீடு திரும்புவோம். இந்தச் சேவை எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது’’ என்றார்.

மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் என கொரோனா போரில் முதல் வரிசையில் நிற்கும் அனைவருக்கும் வணக்கங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism