Published:Updated:

செல்போன், டி.வி ரிமோட்... டாய்லெட் சீட்டைவிட அதிகக் கிருமிகள் கொண்டவை! பாக்டீரியா அலெர்ட்

வெஸ்டர்ன் கழிவறை சீட் பகுதி கிருமிகளைவிட அதிக கிருமிகள், நம் கைகளில் தவழும் மொபைல், ரிமோட் போன்றவற்றில் என்கிறது புதிய ஆய்வு.

ங்கிலாந்தின் தனியார் நிறுவனம், அந்நாட்டு பல்கலைக்கழகங்கள் ஆகியவை, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் உள்ள கிருமிகள் குறித்து தாங்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளன.

ஆய்வு முடிவில் அதிர்ச்சித்தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது. அது, ஒரு வெஸ்டர்ன் கழிவறையின் சீட் பகுதியில் இருக்கிற கிருமிகளைவிடவும் அதிக எண்ணிக்கையிலான கிருமிகள், நம் கைகளில் தவழும் மொபைல், ரிமோட் உள்ளிட்டவற்றில் இருக்கின்றன என்பது!

பொருள்களில் பாக்டீரியா தங்கியிருக்கும் அளவைக் கணக்கிடும் முறை, காலனி ஃபார்மிங் யூனிட் (colony forming unit) எனப்படும். வெஸ்டர்ன் டாய்லெட்டின் சீட் பகுதியில் ஒரு செ.மீ சதுரப் பரப்பளவுக்கு 12.4 யூனிட்ஸ் என்ற அளவில் பாக்டீரியா இருப்பதாக ஆய்வு சொல்கிறது. இப்படி, ஒவ்வொரு பொருளிலும் பாக்டீரியா உள்ளன. அவற்றை, டாய்லெட் சீட்டின் இந்த பாக்டீரியா அளவோடு ஒப்பிட்டால்..?

2
லாண்டரி பேஸ்கெட்

லாண்டரி பேஸ்கெட்

அழுக்குத் துணிகளை அடைத்துவைத்திருக்கும் கூடையின் மூடியில் 262 யூனிட்ஸ் பாக்டீரியா உள்ளன. இந்த எண்ணிக்கை , டாய்லெட் சீட்டின் ஒரு செ.மீ சதுரப் பரப்பளவில் உள்ள பாக்டீரியாவைவிட ஏறத்தாழ 20 மடங்கு.

3
கார்பெட்

கார்பெட்ஸ்

வீட்டின் வரவேற்பறைகளில் உள்ள கார்பெட்டுகளில் 52 யூனிட்ஸ் பாக்டீரியா உள்ளன. படுக்கையறையில் உள்ள கால்மிதியில் 140 யூனிட்ஸ். வரவேற்பறை கால்மிதி, டாய்லெட் சீட்டைவிட 4,000 மடங்கு பாக்டீரியா கொண்டது.

4
கட்டிங் போர்டு

கிச்சன் ஏரியா

கிச்சனில் காய்கறிகள் நறுக்கும் கட்டிங் போர்டில், டாய்லெட் சீட்டைவிட 200 மடங்கு பாக்டீரியாவும், கிச்சன் கரித்துணியில் 20,000 மடங்கு பாக்டீரியாவும், கிச்சன் ஸ்பாஞ்களில் 2,00,000 மடங்கு பாக்டீரியாவும் உள்ளன.

5
செல்போன்

செல்போன் கவர்

செல்போன்களின் லெதர் கவர்களில், டாய்லெட் சீட்டைவிட 17 மடங்கு பாக்டீரியா உள்ளன.

கூடுதல் தகவல்: லண்டனில் 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைகளில் அட்மிட் ஆனவர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள், கழிவறைகளில் செல்போன் பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் எனத் தெரியவந்திருக்கிறது.

நீண்ட நேரம் செல்போன் பார்ப்பவர்களைக் காக்குமா புளூ ஃபில்டர் கண்ணாடி?
6
ரிமோட்கள்

ரிமோட்டுகள்

ஏசி, டி.வி, டிஷ் ரிமோட்டுகளில் 290 யூனிட் பாக்டீரியாக்கள் உள்ளன. இந்த எண்ணிக்கை, டாய்லெட் சீட் கிருமிகளைவிட 20 மடங்கு அதிகம்.

7
அலுவல் டேபிள்

அலுவல் டேபிள் 

நொறுக்குத் தீனிகளும் அழுக்கு ஃபைல்களும் பேதம் பார்க்காமல் நிரப்பப்பட்டிருக்கும் அலுவலக டேபிளில், 400 மடங்கு பாக்டீரியா உள்ளன.

8
ஷூ

ஷூ

ஷூக்களில் உள்ள பாக்டீரியாவின் எண்ணிக்கை டாய்லெட் சீட் பாக்டீரியாவைவிட 4,71,000 மடங்கு அதிகம்.

9
மெத்தை

மெத்தை

பத்து வருடங்களாகப் பயன்படுத்தப்பட்ட மெத்தை, வாங்கியபோது இருந்ததைவிட எடை கூடிவிடும். அந்தக் கூடுதல் எடை, நம் உடலிலிருந்து உதிர்ந்த இறந்த செல்களும் பாக்டீரியாக்களும்தான்.

10
ஹேண்ட் பேக்

இன்னும்... இன்னும்...

இவை தவிர, பெண்களின் ஹேண்ட் பேக்ஸ், பர்ஸ், ஏடிஎம் கார்டுகள், ஹோட்டல் மெனு கார்டுகள், ரூபாய் நோட்டுகள், வீட்டுக்கதவுகள், கைப்பிடிகள், ஃப்ரிட்ஜ் கதவுகள், கம்ப்யூட்டர் கீபோர்டு மற்றும் மவுஸ்... இப்படி அன்றாடம் நாம் பயன்படுத்தும் அத்தனை பொருள்களிலும் பாக்டீரியாவின் ஆக்கிரமிப்பு நிச்சயம் உண்டு.

11
பாக்டீரியா

பாதுகாத்துக்கொள்ள..

கொரோனாவும் H1N1-ம் பயமுறுத்திக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் மட்டுமல்ல, எப்போதுமே அடிக்கடி கைகளைக் கழுவும் பழக்கத்தைப் பின்பற்றுவது கிருமித் தொற்றுகளிலிருந்து உங்களைக் காக்கும்.

அடுத்த கட்டுரைக்கு