Published:Updated:

லாக்டௌனைத் தளர்த்தும் முன் அரசும் மக்களும் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்..! #MustRead@Vikatan

லாக்டௌன் இந்தியா
லாக்டௌன் இந்தியா

இன்னொரு லாக் டௌனுக்கும் மருத்துவ அவசரநிலைக்கும் செல்லாமல் இருக்க இந்தியா செய்ய வேண்டியவை!

கொரோனா தாக்குதலிலிருந்து தப்பிக்க லாக்டௌன் அறிவித்ததிலிருந்து, உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவைப் பாராட்டிக்கொண்டிருக்கின்றன. எந்தவொரு நாடுமே எடுக்கத்தயங்கும் முயற்சியை, இந்தியா தன் தொடக்க காலத்திலேயே எடுத்துள்ளது எனக்கூறி உலக சுகாதார நிறுவனமும் சமீபத்தில் தனது பாராட்டைத் தெரிவித்திருந்தது.

லாக்டௌன் இந்தியா
லாக்டௌன் இந்தியா

இந்தியாவின் லாக் டௌனால், மருத்துவ ரீதியாக கிடைத்த நன்மைகள் குறித்து பலரும் பதிவிடுவதையும் சமீபகாலமாக இணையத்தில் பார்க்க முடிகிறது. உண்மையில் லாக் டௌன் என்னமாதிரியான பலன்களையெல்லாம் நமக்குக் கொடுத்துள்ளது என்பதை இங்கே விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

லாக் டௌனின் முக்கியமான நோக்கம் இரண்டு. அவை,

* நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் குறைப்பது.
* நோயாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலகட்டத்தை அதிகரிப்பது.
இந்தியா -  கொரோனா வைரஸ்
இந்தியா - கொரோனா வைரஸ்

இது இரண்டும் நடைபெற்றுள்ளதா என்பதை, மத்திய அரசின் தரவுகளின் அடிப்படையில் தெரிந்துகொள்ளலாம்.

* நோயாளிகள் எண்ணிக்கை கட்டுக்குள் வந்துள்ளதா இல்லையா என அறிய லாக் டௌன் அமலுக்கு வந்து, 14 நாள்களுக்குள் வந்த நோயாளிகள் எண்ணிக்கை மற்றும் 14 நாள்களுக்குப் பின் உறுதியான நோயாளிகள் எண்ணிக்கை ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அந்த வகையில், மார்ச் 15 முதல் 31 க்கும் இடைப்பட்ட காலத்தில், ஒவ்வொரு நாளும் 2.1 என்ற விகிதத்தில் அதிகரித்த நோயாளிகள் எண்ணிக்கை, ஏப்ரல் 1 க்குப் பிறகு 1.2 என அதிகரித்திருப்பதைக் கவனிக்க வேண்டியுள்ளது. இந்த எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தால், நோயாளி எண்ணிக்கை அதிகரிப்பு 40 சதவிகிதம் குறைந்துள்ளதெனக் கூறுகின்றனர் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள்.

* நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக எடுத்துக்கொள்ளப்படும் காலகட்டம், ஊரடங்கு வந்த முதல் இரண்டு வாரங்களில், 3 நாள்கள் என்று இருந்துள்ளது. ஆனால் அடுத்த இரு வார முடிவில் இது 6.1 நாள்களாக மாறியுள்ளதாம். இதையும், மத்திய சுகாதாரத்துறைத்தான் குறிப்பிட்டுள்ளது. இந்த 6.1 என்ற எண்ணிக்கை, இந்தியாவின் ஒருசில மாநிலங்களில் இன்னும் அதிகமாக இருப்பதாகக் கூறுயுள்ளனர் அதிகாரிகள்.

பொது மருத்துவர் ராதா அதுகுறித்து நம்மிடையே பேசினார்.

பொது மருத்துவர் ராதா
பொது மருத்துவர் ராதா
GSHARI@19

``லாக் டௌனின் முக்கியமான நோக்கம், நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு வரைபடத்தை, தட்டையாக வைப்பது. `ஃபளாட்டன் தி கர்வ்' எனப்படும் அந்த முயற்சி சாத்தியமானால்தான், நோயாளிகள் இரட்டிப்பு விகிதம் - நோயாளி எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவை கட்டுக்குள் இருக்கும். இதில், இந்தியா ஓரளவு வெற்றிகண்டே உள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால்,

ஃப்ளாட்டன் தி கர்வ் செயல்முறைக்கென வேறு சில நோக்கங்களும் உள்ளன. அதில் முக்கியமானது, மருத்துவ வசதிகளை அதிகப்படுத்திக்கொள்வது.
இந்தியா -  கொரோனா வைரஸ்
இந்தியா - கொரோனா வைரஸ்

இது எப்படி சாத்தியப்படுகிறது என்றால், கர்வ் தட்டையாகும்போது, நோயாளிகள் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதிகரிக்கும் என்பதால் அந்த இடைப்பட்ட நாள்களில், நாட்டின் மருத்துவ வசதிகளை அரசு மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் இந்தியா எந்தளவுக்கு முன்னேற்பாட்டோடு இருக்கிறதென்பது, சற்றே சந்தேகத்துக்குரிய விஷயம். ஒருவேளை இந்திய அரசு இந்த கர்வ் தட்டையானதை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்குமாயின், அதாவது மருத்துவ வசதியை மேம்படுத்திக் கொள்ளாமல் இருக்குமாயின் லாக் டௌன் ரிலீஸுக்குப் பிறகு கர்வ் கட்டுப்பாடின்றிப் போகக்கூடும்.

லாக் டௌன் காலத்தில் எகிறும் குடும்ப வன்முறை... மகளிர் ஆணையம் என்ன செய்ய வேண்டும்?

லாக் டௌன் தளர்ந்த பிறகும் இந்த கர்வ் தட்டையாகவே இருந்தால்தான் நாம் பிழைத்தோம். இல்லையென்றால், நோயாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம், பழையபடி சுருங்கிவிடக்கூடும். அப்படி நடந்துவிட்டால், நாடு மருத்துவ அவசர நிலைக்குச் செல்லும் அபாயம் உள்ளது. அப்படியொன்று நடந்தால், அரசு மீண்டும் லாக் டௌன் விதிக்க நேரிடலாம். அது, நாட்டின் பொருளாதார நிலைக்கு நல்லதல்ல.

கொரோனா வைரஸ் லாக்டௌன்
கொரோனா வைரஸ் லாக்டௌன்

லாக் டௌனுக்குப் பிறகு கர்வை தட்டையாக வைத்துக்கொள்வதில், அரசைவிடவும் மக்களுக்குத்தான் அதிக பொறுப்பு இருக்கிறது. அந்தவகையில், சமூக விலகலில் மக்களின் விழிப்புணர்வு இங்கே குறைவுதான்! இன்று நிலவும் விழிப்புணர்வு, வருங்காலத்தை எதிர்கொள்ளப் போதுமானதாக இருக்காது. அந்தவகையில், அரசு மக்களுக்குக் கூடுதலாக விழிப்புணர்வைத் தர வேண்டும்.

லாக் டௌனின் முக்கியமான மற்றொரு நோக்கம், நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்துவது. அதற்கு லாக் டௌன் முடிவதற்கு முன், நாம் நோயாளிகளை முழுமையாகக் கண்டறிந்திருக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால் ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு நோயாளிகள் கூட்டத்தில் கலந்து, நோய் பரவும் விகிதத்தை அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது.

நோயாளிகளைக் கண்டறிய, டெஸ்டிங் தேவை. இந்தியாவில் 80 % கொரோனா தொற்றாளர்களுக்கு, அறிகுறிகளே தெரியவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறுகிறது. அப்படியிருக்கும்போது, அவர்களை அடையாளம் காண அளவுக்கதிகமான டெஸ்டிங் தேவை.
பொது மருத்துவர் ராதா

மொத்தத்தில் ஊரடங்கு முடியும் முன் இந்தியா மாஸ் டெஸ்டிங் செய்தால் மட்டுமே, ஊரடங்குக்குப் பின் பலனை அடைய முடியும். இல்லாவிட்டால், முன்பே சொன்னதுபோல சிக்கல்தான்" என்றார் அவர்.

கொரோனா வைரஸ் லாக்டௌன்
கொரோனா வைரஸ் லாக்டௌன்
மருத்துவர் குறிப்பிடும் டெஸ்டிங் விஷயத்தில், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவு ஆய்வு நடக்கிறதென்பது நமக்கு இப்போதைக்குக் கொஞ்சம் ஆறுதலான விஷயம்.

அதேபோல நோயாளிகளை அடையாளம் காண்பது - அதிக நோயாளிகளைக் குணப்படுத்துவது - இரட்டிப்பு விகிதத்துக்கான நாள்களை அதிகமாக்குவது போன்றவை அனைத்திலும் தமிழகம்தான் முன்னோடி. இவற்றையெல்லாம் நினைத்து நாம் ஆறுதல்பட்டுக்கொண்டாலும், மக்கள் விழிப்புணர்வும், அரசின் முன்னெடுப்பும் இப்போதைக்கு மிகமிக முக்கியம். அப்போதுதான் லாக்டௌன் பலனளிக்கும்.

அடுத்த கட்டுரைக்கு