Published:Updated:

குவாரன்டைன் நாள்கள்... என்னவெல்லாம் வாங்க வேண்டும்? செக்லிஸ்ட் #StayInsideStaySafe

கொரோனா பாதிப்பால் வீட்டிலேயே நீண்ட நாள்களுக்குத் தங்கும் சூழல் ஏற்படலாம் என்பதால் அதற்காக வீட்டைத் தயார்செய்ய வேண்டியது அவசியம். அதற்கான செக் லிஸ்ட்..!

உலக சுகாதார நிறுவனம் அதிகாரபூர்வமாக COVID-19-ஐ பேண்டெமிக் நோயாக அறிவித்ததிலிருந்து, உலக மக்கள் பலரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். வேகமாகப் பரவிவரும் இந்தத் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. அந்த வரிசையில், வீட்டிலிருந்து இணைந்து வேலைசெய்வது, நல்ல உடல்நலம் மற்றும் சுகாதாரப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பது உள்ளிட்டவை குறித்த வழிகாட்டுதல்களை நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் வழங்கியுள்ளன. மளிகைப் பொருள்கள் முதல் விளையாட்டுப் பொருள்கள்வரை குவாரன்டைன் நாள்களுக்குத் தேவையானவற்றை, ஏற்கெனவே பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட சிலரின் அனுபவங்களிலிருந்து தொகுத்திருக்கிறோம்.

மளிகை பட்டியல்:
மளிகைப் பட்டியல்:
மளிகைப் பட்டியல்:

இதுபோன்ற காலகட்டங்களில் உணவகங்களில் வாங்கிச் சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்க்கலாம். மேலும், தேவையான மளிகைப்பொருள்களை மொத்தமாக வாங்கிச் சேமித்து வைத்து, சுத்தம் செய்து நன்கு சமைத்துச் சாப்பிடுவது அவசியம். குறைந்தது இரண்டு வாரங்களுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருள்களை வாங்கி வைத்துக்கொள்ளலாம். நீண்ட நாள்கள் வைத்திருந்து உபயோகிக்கும்படியான சில மளிகைப் பொருள்களின் பட்டியல் இதோ...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலர் தானியங்கள்:
உலர் தானியங்கள்:
உலர் தானியங்கள்:

அரிசி (சாப்பாட்டுக்கும் இட்லிக்கும்), பருப்பு வகைகள் (துவரம், கடலை, உளுந்து, பாசிப்பருப்பு), ஓட்ஸ், அவல், வேர்க்கடலை, சோளம், ரவை, சம்பா ரவை மற்றும் சிறுதானிய வகைகள்.

டிஃபனுக்கு...
டிஃபனுக்கு
டிஃபனுக்கு

கஞ்சி மாவு, ராகி மாவு, காபி தூள், டீத்தூள், பிரெட், ஜாம், பீநட் பட்டர், சீஸ், பால், வெண்ணெய், நெய், எண்ணெய்.

மாவுப் பொருள்கள்:
மாவுப் பொருள்கள்:
மாவுப் பொருள்கள்:

கோதுமை, மைதா, சோளமாவு, புட்டு மாவு, சோள மாவு, பேக்கிங் சோடா.

இதரப் பொருள்கள்:
இதரப் பொருள்கள்:
இதரப் பொருள்கள்:

ஹேண்ட் சானிடைசர், டூத்பேஸ்ட், சோப், ஹேண்ட்வாஷ் போன்றவை. நாப்கின்ஸ், குழந்தைகளின் உணவுப் பொருள்கள், டிஷ்யூ பேப்பர் போதுமான அளவு காய்கறி மற்றும் பழ வகைகள் வாங்கிச் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். வீட்டுக்குள் வாங்கி வந்ததும் அவற்றை நன்கு கழுவிவிடுவது நல்லது.

உங்கள் வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்க்கிறீர்கள் என்றால், அவற்றுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருள்களையும் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

முதலுதவிப் பொருள்கள்:
முதலுதவிப் பொருள்கள்
முதலுதவிப் பொருள்கள்

கொரோனா போன்ற பேண்டெமிக் நோய்த்தொற்றுப் பரவும் காலமாக இருக்கட்டும் அல்லது சராசரி நாளாகட்டும், எதுவாக இருந்தாலும் வீட்டில் எப்போதும் முதலுதவிப் பொருள்கள் வைத்திருப்பது அவசியம். சிறிய சிராய்ப்பு முதல் தீக்காயம்வரை எதிர்பாரா அவசரநிலையைக் கட்டுப்படுத்துவதற்கு ஒவ்வொரு வீட்டிலும் அடிப்படை அத்தியாவசியங்களை வைத்திருப்பது முக்கியம். சில மருத்துவ சிகிச்சை முறைகளை வீட்டிலிருந்தபடியே பின்பற்ற முடியும். அவற்றில் சந்தேகம் இருக்குமானால், அருகில் இருக்கும் மருத்துவரிடம் ஆலோசித்து அதன்படி வழிமுறைகளைப் பின்பற்றலாம். ஏற்கெனவே சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டிருப்பவர்கள், போதுமான அளவு மருந்துப் பொருள்கள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் உடனே வாங்குங்கள். புதிய மருந்துகள்தானா என்பதையும் சரிபார்த்து வாங்குங்கள்.

விளையாட்டு மற்றும் கைவினைப் பொருள்கள்:
விளையாட்டு மற்றும் கைவினை பொருள்கள்
விளையாட்டு மற்றும் கைவினை பொருள்கள்

உங்கள் வீடுகளில் குழந்தைகள் இருந்தால், அவர்களை வீட்டுக்குள்ளேயே பிசியாக வைத்திருப்பது அவசியம். பெற்றோர்கள் இருவரும் அவசர அவசரமாக வேலைக்குச் செல்லும் இந்தக் காலகட்டங்களில், தங்களின் குழந்தைகளோடு நேரம் செலவழிப்பது என்பது பெருங்கனவாகவே இருக்கிறது. ஆனால், இந்த குவாரன்டைன் நேரத்தைப் பயன்படுத்தி, அவர்களோடு இணைந்து நீங்களும் விளையாடி புத்துணர்வு பெறுங்கள். பல்லாங்குழி, செஸ், கேரம் உள்ளிட்ட நாம் மறந்துபோன விளையாட்டுகளை வீட்டிலிருந்தபடியே அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து, அவர்களோடு இணைந்து விளையாடி மகிழலாம். குடும்பத்தினரைப் புரிந்துகொள்ள இது மிகப் பெரிய வாய்ப்பும்கூட. எனவே, உங்கள் நேரத்தைக் குழந்தைகளோடு செலவிடத் தேவையான போர்டு கேம்ஸ் மற்றும் கைவினைப் பொருள்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

வீட்டிலிருந்தபடி வேலை செய்பவர்கள்:
வீட்டிலிருந்தபடி வேலை செய்பவர்கள்
வீட்டிலிருந்தபடி வேலை செய்பவர்கள்

எல்லா வேலைகளும் தொலைதூரத்திலிருந்து செய்ய முடியாது. ஆனால், முடிந்தவரை குவாரன்டைன் செய்து வீட்டிலிருந்தபடி வேலை செய்ய முடியும் என்கிற பட்சத்தில், நிச்சயம் `வொர்க் ஃப்ரம் ஹோம்' ஆப்ஷனை எடுத்துக்கொள்ளலாம். தங்களுடைய பணியாளர்களுக்குப் போதுமான வசதிகள் செய்துகொடுத்து, அவர்களை வீட்டிலிருந்தபடியே வேலை பார்க்க வைப்பது, ஒவ்வொரு நிறுவனத்தின் கடமை. அதேபோல், கொடுக்கப்பட்ட வாய்ப்பை நன்கு பயன்படுத்தி, வேலைகளைச் சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டியது பணியாளர்களின் கடமையும்கூட. அலுவலகத்திடமிருந்து தனிமைப்படுத்துதல் பிறரிடமிருந்து தன்னையும் தன்னிடமிருந்து பிறரையும் பாதுகாத்துக்கொள்வதற்குத்தானே தவிர, இதைப் பயன்படுத்தி பொதுவெளியில் சுற்றுவதற்கல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, அவரவர் தம் பொறுப்புகளைப் புரிந்து, லேப்டாப், இன்டர்நெட் கனெக்ஷன் போன்றவற்றை அலுவலகத்திலிருந்து பெற்று அவற்றை நன்முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இது விடுமுறை அல்ல என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அனைத்து விஷயங்களும் மிகவும் சீராக நடப்பதை உறுதி செய்ய, உங்கள் மேற்பார்வையாளரிடம் அவ்வப்போது பேசுங்கள். உங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்க உங்கள் பணியிடத்தையும் உங்கள் சொந்த அணுகுமுறையையும் எவ்வாறு அமைப்பது என்பது பற்றிச் சிந்தியுங்கள்.

கொரோனா அலர்ட்... வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்! #StayInsideStaySafe
நீங்கள் தவிர்க்க வேண்டிய பொருள்கள்:
தண்ணீர்:
தண்ணீர்
தண்ணீர்

உங்கள் வீட்டுக் குழாய்களில் வரும் தண்ணீர் ஏற்கெனவே பாதுகாப்பாக இல்லாமல் இருக்கும் பட்சத்தில் மட்டுமே, வெளியிலிருந்து தண்ணீர் வாங்க வேண்டும். எந்தவகை நீரானாலும், நன்கு காய்ச்சி குடிப்பதே சிறந்தது.

ஹேண்ட் சானிடைசர்:
ஹேண்ட் சானிடைசர்
ஹேண்ட் சானிடைசர்

உலகமே ஹேண்ட் சானிடைசர் பின்னால் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால், கடைகளில் கிடைக்கும் எல்லா சானிடைசர்களும் கைகளைச் சுத்தம் செய்பவை என்று சொல்லிவிட முடியாது. குறைந்தது 60 சதவிகிதம் ஆல்கஹால் கொண்ட ஹேண்ட் சானிடைசர்களையே பயன்படுத்த வேண்டும். இருப்பினும், அவற்றை ஆராய்ச்சி செய்து உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். உங்கள் கைகளைச் சுத்தம் செய்ய சோப் மற்றும் தண்ணீரே போதும். அவை இல்லாதபோது மட்டுமே சானிடைசர்களைப் பயன்படுத்த வேண்டும்.

மாஸ்க்:
மாஸ்க்
மாஸ்க்

மருத்துவ நிபுணரின் ஆலோசனை இல்லாமல், மாஸ்க் உபயோகிக்க வேண்டாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு