Election bannerElection banner
Published:Updated:

கொரோனா பரவல்... நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் இந்த 6 தவறுகளைச் செய்யாதீர்கள்! #FightCovid-19

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களையே கொரோனா வைரஸ் போன்ற தொற்றுநோய்கள் எளிதில் தாக்குகின்றன.

Dr.G.Velkumar

எளியவர்களே எப்போதும் அதிகார வர்க்கத்தால் தாக்கப்படுகிறார்கள். இது கொரோனா வைரஸ் விஷயத்தில் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்களே. சீனாவில் கொரோனா அதிகம் பாதித்து உயிரிழந்தவர்களில் 81% பேர் முதியவர்களே என்று அந்நாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 85% பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். முதியவர்கள் தவிர, சர்க்கரைநோய் போன்ற வேறு பாதிப்புள்ளவர்களையும் நோய் எளிதில் பாதித்துள்ளது.

பொதுவாக வயதானவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களையே கொரோனா வைரஸ் போன்ற தொற்றுநோய்கள் எளிதில் தாக்குகின்றன.

நாம் செய்யும் கவனக்குறைவான சில விஷயங்கள் அல்லது தவறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்திவிடும். நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதிக்கும் 6 தவறுகளைப் பட்டியலிடுகிறார் நுரையீரல் மருத்துவர் ஜி.வேல்குமார்:

2
Processed foods

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பாக்கெட்டுகள், டப்பாக்களில் அடைக்கப்பட்டு வரும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் காணப்படும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட், கூடுதல் சர்க்கரை ஆகியவை உடலிலுள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் தனது பணியைச் செய்யவிடாமல் தடுக்கும். மேலும், அவை குடலிலுள்ள நல்ல பாக்டீரியாவைத் தாக்கி, உடலுக்குத் தீமை விளைவிக்கும் பாக்டீரியா உற்பத்திக்கு வழிவகுத்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும்.

என்றாவது ஒருநாள் அந்த உணவைச் சாப்பிடுவது பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், இந்த உணவுப் பழக்கத்தை நீண்ட நாள்கள் தொடரும்போது நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்பட்டு நோய்கள் எளிதில் தொற்றிக்கொள்ளும்.

3
Stress

சுய காதல் இல்லாமை!

மனச்சோர்வு, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் இயக்கத்தை நேரடியாகப் பாதிக்கும். 2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் நாள்பட்ட மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்கள் வைரஸ் பரவுமிடத்தில் வெளிப்படும்போது அவர்களை சளி எளிதில் தாக்குகிறது என்று கண்டறியப்பட்டது. மனச்சோர்வால் பாதிக்கப்படும்போது கார்ட்டிசால் மற்றும் அட்ரீனலின் ஹார்மோன்கள் வெளியாகும். அவை உடலை நோய்த்தொற்றிலிருந்து காப்பாற்றும் லிம்போசைட் வெள்ளையணுக்களின் அளவைக் குறைக்கும்.

வெள்ளையணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றை எதிர்த்துப் போராடும் ஆற்றலை உடல் இழந்துவிடும். மனச்சோர்வு ஏற்படாமல் தடுக்க வழி... நம்மை நாமே கவனித்துக்கொள்ள வேண்டும். தியானம், நன்றியை வெளிப்படுத்துதல், உங்களை மகிழ்ச்சியாக்கும் ஒரு செயலை தினமும் செய்வது இவை மூன்றும் மனச்சோர்விலிருந்து விலகியிருக்க உதவும்.

4
Sleepless night

தவறும் தூக்கம்

ஆழ்ந்து தூங்கும்போது சைட்டோகின்ஸ் என்ற புரதத்தை உடல் உற்பத்தி செய்யும். இவை அழற்சி, நோய்த்தொற்றுக்கு எதிராகப் பணியாற்றும். ஒருநாளைக்கு 7 முதல் 8 மணி நேர ஆழ்ந்த தூக்கம் இல்லாவிட்டால், உடலில் போதிய சைட்டோகின்கள் உற்பத்தியாகாது. அப்போது உடலால் பாக்டீரியா, வைரஸ் தொற்றுகளுக்கு எதிராகத் தாக்குப்பிடிக்க முடியாது.

தூங்கும்போது கேட்ஜெட்டுகள், இரவு நேரத்தில் அதிக உணவு இவையெல்லாம் உயிரியல் கடிகாரத்தைப் பாதித்து, தூக்கத்தை வரவழைக்கும் மெலட்டோனின் ஹார்மோன் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும். தூக்கமில்லாத இரவுகள் நோய்த்தொற்றுகளுக்கு நுழைவுவாயில்.

5
Drinking

குடிப்பழக்கம்

அதிகக் குடிப்பழக்கம் குடலின் ஆரோக்கியத்துக்குத் தேவையான நுண்ணியிரிகளைத் தாக்கும். அவைதான் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டில் முக்கியப் பங்காற்றுபவை என்பது குறிப்பிடத்தக்கது. மதுவானது குடல்பகுதியில் வாழும் நுண்ணியிரிகளின் சூழல் மண்டலத்தைத் தாக்கி, அவை வாழ்வதற்குப் பொருத்தமற்ற இடமாகக் குடலை மாற்றும்.

இதனால் உடலைத் தாக்கும் கெட்ட பாக்டீரியா ரத்தஓட்டத்தில் கலந்து கல்லீரலில் அலர்ஜியை ஏற்படுத்தும். கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடலைச் சுத்திகரிக்கும் பணிகள் தடைப்பட்டு, நச்சுகள் தேங்கிவிடும். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் பலீனமடைந்து, நோய்கள் தாக்குவதற்கு ஏதுவாக உடல் மாறிவிடும்.

6
Lack of exercise

உடற்பயிற்சியின்மை

உடற்பயிற்சியை ஒதுக்கினால் நோய்த்தொற்றை வரவேற்க வேண்டியிருக்கலாம். நாள்தோறும் உடற்பயிற்சி செய்வது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வாரத்துக்கு 150 நிமிட உடற்பயிற்சி ஆன்பாடிகள், வெள்ளையணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய்த்தொற்றின் ஆரம்பநிலையிலேயே அதற்கெதிராகப் போராட வைத்து உடலை மீட்கும். உடற்பயிற்சியின்போது உடலின் வெப்பநிலை அதிகரிப்பதால், பாக்டீரியா, நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கும்.

7
Smoking

புகைப்பழக்கம்

இன்றைய இளைஞர்களை சீரழித்துவரும் புகைப்பழக்கம் தொற்றுநோய்களை பாரபட்சம் இல்லாமல் வாரிக்கொடுக்கும். புகையிலையிலுள்ள ரசாயனம் மூக்கிலிருந்து நுரையீரல்வரையுள்ள சுவாசப் பாதையிலிருக்கும் சளி போன்ற மெல்லிய படலத்தைத் தாக்கும்.

புகைபிடிக்கும்போது அதிக அளவில் சளி உற்பத்தியாகி சுவாசப்பாதையைக் குறுக்கும். இதனால் நுரையீரலால் நச்சுகளை வெளியேற்ற முடியாமல் போகும். நோய்த்தொற்றுக்கான வாய்ப்பு அதிகரிக்கும். புகைப்பழக்கம் ரத்தத்திலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளின் அளவைக் குறைக்கும். இது சுவாச மண்டலத்தில் நிமோனியா முதல் மூச்சுக்குழாய் அலர்ஜி வரையான தொற்றுகளுக்கும் வழிவகுக்கும்.

"கொரோனா அச்சம்; மருத்துவர்களின் ஆன்லைன் பரிந்துரைகள்!"- டெலிமெடிசின் சாதகமும் பாதகமும் #FightCovid19
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு