Published:Updated:

ஜோக்கரை விடுங்கள்... அவருக்கு இருந்த `சிரிப்பு' நோய் இருப்பவரின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?

Joker
Joker

`உணவகங்களிருந்தும் நான் வெளியேற்றப்பட்டிருக்கிறேன். விடுதியில் தங்க இடம் கிடைக்காது. எனக்கு இருக்கும் இப்பிரச்னை பற்றி நான் முழுமையாக அறிவேன்.'

சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படமான ஜோக்கரில் வகீன் பீனிக்ஸ், ஆர்த்தர் பிளக் என்ற கதாபாத்திரத்தில் மிக அபாரமாக நடித்து, பாராட்டுகளைப் பெற்றுள்ளார். படத்துக்காக தனது உடல் எடையை 23 கிலோ குறைத்திருந்தார். ஜோக்கர் படத்தில் அவர் அவ்வப்போது சிரிக்கும் சிரிப்பு வித்தியாசமாகவும் பயமுறுத்துவதாகவும் இருக்கும்.

depression
depression
pixabay

பேருந்தில் ஒரு குழந்தையுடன் விளையாடுகையில் ஏற்படும் சிரிப்பு முதல், அவர் ரயிலில் பயணிக்கும் காட்சியில் சிரித்ததால் ஏற்பட்டதன் விளைவாக மூன்று பேரைக் கொலை செய்வதுவரை அந்த வித்தியாசமான சிரிப்புக்கு ஜோக்கர் படத்தில் ஒரு பெரும் பங்கும் உண்டு. தனக்கு இது ஒரு நோய் என்று ஆர்தர் பிளக் கூறுவார். தன் நோய் பற்றிய குறிப்பை அட்டை மூலம் காண்பிப்பார். நிஜத்திலும் அப்படி ஒருவர் உள்ளார் வெர்ஜினியாவில், 47 வயதான ஸ்காட் லோடான், தேவையற்ற இடங்களில் கட்டுப்படுத்த இயலாமல் சிரிப்பதையும், அழுவதையும் ஏற்படுத்தும் Pseudobulbar affect (PBA) என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர்.

அவர் சிரிக்க ஆரம்பித்தால் 10 நிமிடங்கள்வரை கூட அது நீடிக்கும் என்று கூறும் ஸ்காட் , அது தர்மசங்கடமாக மட்டும் இருப்பதில்லை, மிகவும் வலி மிகுந்ததாகவும் இருக்கும் என்று கூறுகிறார்.

 Pseudobulbar affect
Pseudobulbar affect
pixabay

``நான் என் நண்பர்களுடன் குடிக்கச் செல்கையில் அங்கிருக்கும் யாரோ ஒருவர், நான் அவரைப் பார்த்துதான் இப்படிச் சிரிக்கிறேன் என்று எண்ணி சண்டைக்கு வருவார். உணவகங்களிருந்தும் நான் வெளியேற்றப்பட்டிருக்கிறேன். விடுதியில் தங்க இடம் கிடைக்காது. எனக்கு இருக்கும் இப்பிரச்னை பற்றி நான் முழுமையாக அறிவேன். இது என் கட்டுக்குள் இல்லாத பிரச்னை. இது ஒரு மனநல பிரச்னை இல்லை என்பதை மற்றவர்களுக்குப் புரிய வைப்பது ஒரு சவாலான காரியமாக உள்ளது" என்று கூறும் ஸ்காட்,

``ஜோக்கர் படத்தில் பிளக், இந்நோயால் ஏற்படும் சிரிப்பை மிகத்துல்லியமாகச் சித்திரித்திருப்பார். படத்தின் பேருந்து சீன் போல என் வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. பல இடங்களில் நான் தனிமைப்படுத்தப்பட்டு ஒதுக்கப்படுவதன் வலியை உணர்ந்துள்ளேன் " என்று தன் வலியைப் பகிர்கிறார்.

Scott Lotan
Scott Lotan

படத்தின் பெயர்தான் ஜோக்கர். தன் நோயின் பாதிப்பை வெளிப்படுத்தும் விதத்தில், பார்வையாளர்களிடம் கண்ணீரை வர வைக்கும் அபார நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் பீனிக்ஸ். ஆனால், இந்த நோய் குறித்த விஷயங்கள் ஒரு துணைக்கதையாக மட்டுமே படத்தில் நகரும். பீனிக்ஸ், ஜோக்கர் எனும் சைக்கோபாத்தாக மாறுவதற்குப் படத்தில் வேறு காரணிகளே காட்டப்பட்டிருக்கும். எனவே, இந்தச் `சிரிப்பு' நோய்க்கும் படத்தில் ஜோக்கர் கதாபாத்திரத்தின் செயல்பாடுகளுக்கும் தொடர்பு ஏதும் இல்லை.

உணர்வுகளைக் கட்டுப்படுத்தும், நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளின் காரணமாக, தன்னிச்சையாக, காரண காரியம் இன்றி சிரிப்பது, அழுவது அல்லது சிரிக்க வேண்டிய அழவேண்டிய நேரங்களில் அளவுக்கு அதிகமாக இருப்பது Pseudobulbar affect (PBA) நோயாகும். இந்நோய் பக்கவாதம், அல்சீமர், பார்கின்சன்ஸ், மூளையில் காயம், மல்டிபில் ஸ்கிலிரோஸிஸ் போன்ற நோய் உள்ளவர்களைத் தாக்கும்.

Joker
Joker

பாதிக்கப்பட்டவர்கள் மனச்சோர்வு, மனப்பதற்றத்துக்கு உள்ளாகி, தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வார்கள். நரம்பியல் மருத்துவர்கள், நரம்பியல் மனநல மருத்துவர்கள் போன்றவர்களை நாடி முறையான சிகிச்சையை மேற்கொண்டால், இந்நோயைக் கட்டுப்படுத்த முடியும். இது மனநோய் அல்ல.!!!

அடுத்த கட்டுரைக்கு