Published:Updated:

தலையில் நேரடியாக வெந்நீர் ஊற்றிக் குளித்தால் என்னாகும்? சித்த மருத்துவர் விளக்கம்

கு.மகேஷ்முரளிகிருஷ்ணா
என்.ஜி.மணிகண்டன்

தமிழ் மருத்துவ முறைப்படி வாரம் இருமுறை அவசியம் எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும். நல்லெண்ணெயை உடல் முழுவதும் பூசி சிறிது மசாஜ் செய்து, அரைமணிநேரம் ஊறவிட்டு வெந்நீரில் குளிக்க வேண்டும். எண்ணெய் பூசி குளிக்கும்போது குளிர்ந்த நீரைப் பயன்படுத்தக் கூடாது.

Oil bath
Oil bath ( pixabay.com )

குளித்தல் என்பது உடலைச் சுத்தப்படுத்துதல் என்பதையும் தாண்டி, உடலைக் குளிர்விக்கும் பணியில் முக்கியப் பங்காற்றுகிறது. இன்று மக்களுக்கு வரக்கூடிய பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் உடல்சூடு என்பதால் குளிக்க வேண்டியது அவசியம். `குளிர்வித்தல்' எனும் சொல்லே மருவி குளித்தல் என்றாகிவிட்டது. சரியான முறைப்படி குளித்தல் என்பது பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுக்கு நல்ல தீர்வாக அமையும்.

Oil bath
Oil bath
pixabay.com

`குளியல்' பற்றி அறிய திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.காமராஜை கேட்டோம். ``ஒரு நாளில் இரண்டு முறை குளித்தல் நலம். சாதாரணமாக குளியலுக்கு குளிர்ந்த நீரே சிறந்தது. காலை 7 மணிக்குள் காலைக்கடன்களை முடித்துவிட்டு குளிர்ந்த நீரால் தலையிலிருந்து தொடங்கி நீராடத் தொடங்க வேண்டும். மழை மற்றும் குளிர்காலங்களில் வெந்நீரைப் பயன்படுத்துவது நல்லது.

ஆனால் வெந்நீரை அப்படியே தலையில் ஊற்றுவது முற்றிலும் தவறு. தலையில் நேரடியாக வெந்நீர் ஊற்றினால் வெப்பம் வெளியே போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும். எனவே, வெந்நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும். பிறகு முழங்கால், இடுப்பு, நெஞ்சுப் பகுதி இறுதியாக தலை எனக் கீழிருந்து ‌மேல் நோக்கி நகர வேண்டும். இதுவே வெப்பம் வெளியேற ஏதுவான முறையாகும். தினமும் தலைக்குக் குளிப்பதில் தவறேதுமில்லை.

Oil bath
Oil bath
pixabay.com

தலைக்குக் குளித்தால் உடல் சூடு தணியும். இதனால் தலைமுடி உதிர்தல் மற்றும் கண்ணெரிச்சல் போன்ற பாதிப்புகள் குறையும். ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள் தலைக்குக் குளிப்பதை தவிர்க்கவேண்டும். தலைக்குக் குளிப்பது பற்றிய தவறான கருத்துகள்...

• தலைக்குக் குளித்தால் ஜலதோஷம் பிடித்துவிடும் என்று பலர் குளிப்பதே கிடையாது. இது முற்றிலும் தவறான எண்ணம்.

• தலைக்குக் குளிப்பதால் முடி உதிராது, குளிக்காமல் இருந்தால்தான் உடல் வெப்பம் அதிகமாகி முடி உதிரும்.எண்ணெய்க் குளியல் முறைகள்!

Oil bath
Oil bath
pixabay.com

எண்ணெய்க் குளியல் முறைகள்!

தமிழ் மருத்துவ முறைப்படி வாரம் இருமுறை அவசியம் எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும். நல்லெண்ணெயை உடல் முழுவதும் பூசி சிறிது மசாஜ் செய்து, அரைமணிநேரம் ஊறவிட்டு வெந்நீரில் குளிக்க வேண்டும். எண்ணெய் பூசி குளிக்கும்போது குளிர்ந்த நீரைப் பயன்படுத்தக் கூடாது. எண்ணெய் தேய்த்ததால் உடல் குளிர்ச்சி அடைந்திருக்கும். கூடவே, குளிர்ந்த நீரில் குளித்தால் உடல் மிகவும் குளிர்ந்துவிடும்.

எனவே, எண்ணெய் தேய்த்தால் வெந்நீரில்தான் குளிக்க வேண்டும். மேலும், எண்ணெய்க் குளியல் செய்த பிறகு குளிர்ச்சி தரும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மழை மற்றும் குளிர்காலங்களில் எண்ணெய்க் குளியலைத் தவிர்க்கலாம். சைனஸ், மூக்கடைப்பு மற்றும் ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் சுக்கு தைலத்தைப் பயன்படுத்திக் குளிக்கலாம். எண்ணெய்க் குளியலின் பயன்!

Siddha doctor S.Kamaraj
Siddha doctor S.Kamaraj

• உடல் சூடு மற்றும் தலைமுடி உதிர்வது குறையும்.

• கண் பார்வை பாதுகாக்கப்படும்; மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.

• உடல் புத்துணர்ச்சி அடையும்; மலச்சிக்கல் தீரும்.

• தோலிலுள்ள அழுக்குகள் நீங்கி உடல் பளபளப்பாகும்.

பொதுவான குளியல் முறைகள் :

• வெந்நீரில் குளிப்பதைத் தவிர்த்தல் வேண்டும்.

• உணவு உண்ட பின் குளித்தல் கூடாது. ஏனென்றால் அது செரிமானத்தை மட்டுப்படுத்தும்.

• உடலில் வியர்வையுடன் குளிக்கக் கூடாது.

oil bath
oil bath
pixabay.com

இவற்றையெல்லாம் முறையாகப் பின்பற்றினால் பக்கவிளைவுகள் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ளலாம்!'' என்கிறார்.