Published:Updated:

அறுபதுக்கு மேலேயும் அழகான வாழ்க்கை! - ஹலோ சீனியர்ஸ்

ஜெனி ஃப்ரீடா

முதியோர்கள் தங்களின் உடல் இயக்கத்தின் இயல்பைப் புரிந்துகொள்ளவும் முதுமையைப் பெருமையுடன் எதிர்கொள்ளவும், முதியவர்களின் பாதுகாப்பை அவர்களே புரிந்துகொள்ளவும் இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

hello seniors
hello seniors

முதியோர்களின் உடல்நலத்தை மட்டுமல்ல அவர்களின் மனநலனையும் பாதுகாப்பையும் உறுதிசெய்துகொள்ள உதவும் வகையில் விகடன் குழுமம் மற்றும் ஈரோடு மாவட்ட காவல்துறை இணைந்து நடத்தும் `ஹலோ சீனியர்ஸ் - அறுபதுக்கு மேலேயும் அழகான வாழ்க்கை' என்ற நிகழ்ச்சி ஈரோட்டில் வருகிற 7-ம் தேதி நடைபெறவுள்ளது.

hello seniors
hello seniors

முதியோர்கள் தங்களின் உடல் இயக்கத்தின் இயல்பைப் புரிந்துகொள்ளவும் முதுமையைப் பெருமையுடன் எதிர்கொள்ளவும் முதியவர்களின் பாதுகாப்பை அவர்களே புரிந்துகொள்ளவும் இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழறிஞர் சாலமன் பாப்பையா, முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன், காவல்துறை மேற்கு மண்டல ஐ.ஜி கே.பெரியய்யா ஐ.பி.எஸ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆலோசனைகளையும் சிறப்புரைகளையும் வழங்க உள்ளனர்.

hello seniors
hello seniors

ஈரோடு மாவட்டம் திண்டல், மாருதி நகரில் உள்ள வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் வருகிற 7-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான அனுமதி இலவசம். நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் பெயரைக் கட்டாயம் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

hello seniors
hello seniors

பெயர் முன்பதிவுக்கு 97909 90404 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.