Published:Updated:

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை! - மேப் ரூட் டெக்னிக்கில் தனிமைப்படுத்தும் கேரளா

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் ( Freepik )

பிரிட்டனுக்குச் சென்று திரும்பிய 20 வயது மாணவிக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவால் கேரளாவில் மேலும் மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் இருவர் மலப்புரம் மாவட்டத்திலுள்ள வனியம்பலம், செமரக்கத்தூர் இடங்களைச் சேர்ந்தவர்கள். துபாய் வழியாக மங்களூர் ஏர்போர்ட் வந்தடைந்துள்ளார் காசர்காட் மாவட்டத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மூன்றாவது நபர். மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இருவரும் மஞ்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கொரோனா
கொரோனா

அவர்கள் இருவரும் ஐசோலேஷன் பிரிவில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பதாக மலப்புரம் மாவட்ட ஆட்சியர் ஜாஃபர் மாலிக் தெரிவித்திருக்கிறார். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கேரளாவில் பயணித்த இட விவரங்களை மலப்புரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பாதிக்கபட்டவர்கள் பயணித்த மொத்த மேப் ரூட்டும் (map route) விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருக்கிறார் கலெக்டர்.

செமரக்கத்தூரைச் சேர்ந்தவர், சவுதி அரேபியாவில் உள்ள ஜெத்தாவிலிருந்து கேரளாவில் உள்ள ஏர்போர்ட் வந்தடைந்தவர், அங்கிருந்து பேருந்து, கார் எனப் பயணித்திருக்கிறார். அடுத்த நாள் காலையில் காய்ச்சலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Transportation of corona positive people
Transportation of corona positive people
Freepik

கரிப்பூர் ஏர்போர்ட்டுக்கு வந்த வனியம்பலம் ஊரைச் சேர்ந்தவர், ஷேர் ஆட்டோ, உறவினர்கள் வீடு என்று சென்றிருக்கிறார். பின்னர் மார்ச் 13 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏர்போர்ட்டில் கொரோனா அறிகுறி..?

Fear of spreading of corona
Fear of spreading of corona
Freepik
`கொரோனா வதந்தி; நாட்டுப் பசு கோமியம் லிட்டர் ரூ.500’ - மேற்குவங்கத்தில் கைதான பால் வியாபாரி

ஏர்போர்ட் வந்தடைந்தபோது இருவருக்கும் கொரோனா அறிகுறிகள் இல்லை. பின்னரே, காய்ச்சல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட ஒருவருடன் நேரடித் தொடர்பிலிருந்த 10 பேரும், மற்றொருவருடன் முதன்மைத் தொடர்பிலிருந்த 40 பேரும் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மூலம் பிறருக்கு நோய்க்கிருமி பரவாத விதத்தில் அவரவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என கலெக்டர் ஜாஃபர் மாலிக் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இப்போது கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு